இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து சேவைகள் நாளை (9) முதல் மீண்டும் ஆரம்பம்

வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து சேவைகள் நாளை (9) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. மஹவ முதல் ஓமந்தை வரையிலான ரயில் பாதையில் ஐந்து ரயில் பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையைப் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் ஏதுவாக, வடக்குக்கான ரயில் சேவைகள் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில், தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, ரயில் சேவைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான ஆசன முன்பதிவுகள் கடந்த 4ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால், பயணிகள் ஆர்வத்துடன்  தமக்கான பதிவுகளை மேற்கொள்வதை காணமுடிகின்றது.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கேப்பாப்பிலவு மக்களின் பூர்விகக் காணிகளை விடுவிக்குமாறு – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

இராணுவத்தின் ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாப்பிலவு மக்களின் பூர்விகக் காணிகளை விடுவிக்குமாறு – ரவிகரன் எம்.பி வலியுறுத்து; இராணுவத்துடன் பேச்சு நடாத்தி விரைவில் முடிவைத் தெரிவிப்பதாக – ஜனாதிபதி பதில் முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் துரைராசா ரவிகரன் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் கேப்பாப்பிலவு காணி விடுவிப்புத்தொடர்பில், கூடியவிரைவில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, குறித்த கலந்துரையாடலின் பின்னர் கேப்பாப்பிலவு காணி விடுவிப்புத் தொடர்பான முடிவு தம்மால் அறிவிக்கப்படுமெனவும் பதிலளித்துள்ளார். பாராளுமன்ற குழு அறையில் 07.04.2026நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலேசனைக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது கேப்பாப்பிலவு காணிவிடுவிப்பு விடயம் தொடர்பில் குறித்த பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலேசனைக்குழுக்கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வடக்கு மற்றும் கிழக்கு பொது மக்களின் காணி களை விடுவிப்ப தற்கும் அரசாங்கம் துரித நடவடிக்கை ஜனாதிபதி!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கும், மூடப்பட்டுள்ள வீதிப் பகுதிகளைத் திறப்பதற்கும் அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைக் கூறினார். இக்கூட்டத்தில் எட்டப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:- 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் வடக்கில் சுமார் 1,000 ஏக்கர் தனியார் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எஞ்சிய காணிகளையும் முறைப்படியாக விடுவிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். அத்துடன், நீண்டகாலமாக மூடப்பட்டுள்ள வீதிப் பகுதிகளைத் திறக்கும் போது எழுந்துள்ள சிக்கல்களுக்குச் சாதகமான தீர்வுகளை வழங்குமாறும் அதிகாரிகளுக்கு அவர் பணிப்புரை விடுத்தார். மத வழிபாட்டுத்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

எரிபொருள் தாங்கி ஊர்தி ஒன்று கவிழ்ந்து விபத்து

பதுளை – கொழும்பு பிரதான வீதியின் புவகஹவெல பகுதியில் நேற்று பிற்பகல் எரிபொருள் தாங்கி ஊர்தி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனையடுத்து மக்கள் எரிபொருளை சேகரிக்க முண்டியடித்துள்ளனர். பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த எரிபொருள் தாங்கி ஊர்தியே இயந்திர பிரச்சினைக் காரணமாக இவ்வாறு விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஊர்தியில் சுமார் 33,000 லீற்றர் எரிபொருள் இருந்ததாவும் ஊர்தி வீதியில் கவிழ்ந்ததையடுத்து அதிலிருந்த பெருமளவிலான எரிபொருள் வீதியெங்கும் பரவி ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விபத்து நடந்த இடத்திற்கு கொள்கலன்கள் மற்றும் வாளிகளுடன் விரைந்த பிரதேச வாசிகள், வீதியில் வழிந்தோடிய எரிபொருளைச் சேகரிப்பதில் ஈடுபட்டனர். குறித்த பகுதியில் தீப்பரவல் ஏதேனும் ஏற்படாமல் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். தற்காலிக லாபத்திற்காக குறித்த மக்கள் உயிரை ஆபத்தில் தள்ளிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

லங்கா ஐஓசி நிறுவனம் இன்று (08) முதல் டீசல் விலை அதிகரிப்பு.

லங்கா ஐஓசி நிறுவனம் இன்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் வகைகளின் விலைகளை அதிகரித்துள்ளது. இதற்கமைய, எக்ஸ்ட்ரா மைல் (Xtra Mile) – 590 ரூபாய் லங்கா சூப்பர் டீசல் (LSD) – 600 ரூபாய் எக்ஸ்ட்ரா கிரீன் டீசல் (Xtra Green Diesel) – 620 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.  

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

லாஃப்ஸ் எரிவாயுவை தட்டுப்பாடின்றி நுகர்வோருக்கு வழங்கும் நடவடிக்கை

பண்டிகைக் காலத்தில் லாஃப்ஸ் எரிவாயுவை தட்டுப்பாடின்றி நுகர்வோருக்கு வழங்கும் நடவடிக்கைகள் இன்று (08) முதல் ஆரம்பிக்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. வர்த்தக அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய, அது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து நிறுவனத்திற்குத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 7,000 மெற்றிக் தொன் லாஃப்ஸ் எரிவாயுவை ஏற்றிய கப்பல் கடந்த 6ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்ததாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்திருந்தது. குறித்த எரிவாயு கையிருப்பினை லாஃப்ஸ் நுகர்வோருக்கு இன்று முதல் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சுற்றிவளைப்புகள் மற்றும் விசாரணைகளை முன்னெடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் அசேல…

மேலும் படிக்க