தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

சுழற்றியடித்த காற்றால் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்த மீனவர்கள்

புத்தளம் – உடப்பு கிராமத்தில் இன்று அதிகாலை தென்மேல் பருவக்காற்று திடீரென்று வீசியதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்துள்ளனர். அதிகாலை வழமை போல மீனவர்கள் கடலுக்குச் செல்ல தயாராகிய நிலையில் காற்றின் வேகம் காணப்படவே அவர்கள் மீண்டும் கடலுக்குச் செல்லாது வீடுகளுக்கு திரும்பிச் செல்வதைக் காணக்கூடியதாக இருந்தது. இதனால் இயந்திரப் படகுகள், தெப்பங்கள், கரைவலைத் தொழிலாளர்களின் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

தேசிய QR கொடுப் பனவு ஊக்குவிப்புத் திட்டம்”உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப் படவுள்ளது.

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், “தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இலங்கையை நாணயங்கள் மற்றும் நாணயத் தாள்களின் பயன்பாடு குறைந்த (cash-lite) பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துவதே இதன் முதன்மை நோக்கமாகும். இதற்கமைய இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ரூ. 5,000 வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக்கட்டணத்தை (Merchant Discount Rate) முழுமையாக நீக்குவதற்கு நிதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதன் மூலம் சிறு வர்த்தகர்கள் எவ்வித கூடுதல் செலவுமின்றி டிஜிட்டல் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது. தற்போது இலங்கையில் மிகவும் வலுவான டிஜிட்டல் நிதி உட்கட்டமைப்பு காணப்படுவதுடன், நாட்டின் வயதுவந்த மக்களில் 89% பேருக்கு வங்கி வசதிகள் உள்ளன.…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

ரூ. 11 கோடி பெறுமதி யான சட்டவிரோத போதைப் பொரு ளுடன் நபரொருவர் கைது

சுமார் ரூ. 11 கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்த இலங்கை பிரஜை ஒருவரை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு, கொம்பனித்தெரு பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய கூலித் தொழிலாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.குறித்த நபர் இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து ஏ.ஐ.- 277 (AI-277) ரக ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று (06) காலை 6.50 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கொண்டு வந்த பயணப் பொதியிலிருந்து 11 கி.கி 340 கிராம் எடையுடைய “குஷ்” போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி சுமார் ரூ. 11 கோடியே 34 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. சொக்லேட் பக்கெட்டுகளுக்குள் இருந்த சொக்லேட்டுகளை அகற்றிவிட்டு,…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

அரச வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளது. இதற்கமைய இன்று (6) காலை 8 மணியுடன் பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. தமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துமாறு அந்த சங்கம் கோரியிருந்தது. இந்நிலையில் எதிர்வரும் வியாழக்கிழமை (09) பேச்சுவார்த்தை ஒன்றினை நடத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று அறிவித்திருந்தார். உலக சுகாதார அமைப்பின் மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காகத் தாம் இன்று இந்தியா புறப்படவுள்ளதாகவும், மீண்டும் நாடு திரும்பியதும் குறித்த பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சர் நேற்று தெரிவித்தார். இதனையடுத்து தமது சங்கம் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

வடக்கு, கிழக்கில் மழைக்கு வாய்ப்பு

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மாகாணத்திலும் புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதேவேளை சூரியனின் வடதிசை நோக்கிய நகர்வின் காரணமாக, ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதி முதல் எதிர்வரும் 15…

மேலும் படிக்க