தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான சகோதரி உயிரிழப்பு.

வவுனியா – சொக்கடிப்புளவு கிராமத்தில் சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான சகோதரி உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் நேற்று இரவு  இடம்பெற்றுள்ளது.செக்கடிப்புளவில் வசித்து வந்த 56 வயதுடைய பவளரத்தினம் செல்வமலர் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த பெண் மீது அவரது சகோதர முறையானவர் மதுபோதையில் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்துள்ளார்.இந்நிலையில் அங்கிருந்தவர்களின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.குற்றம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொலைக்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

பெக்கோ இயந்திரம் மோதியதில் அரச பேருந்து விபத்து – 10 பேர் வைத்திய சாலையில்!

ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று, பெக்கோ இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். ஹம்பாந்தோட்டை துறைமுக நகருக்கு முன்பாக இன்று (09) அதிகாலை 1:30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பேருந்து வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, துறைமுகத்தை நோக்கி வீதியைக் குறுக்கறுத்துச் சென்ற பெக்கோ இயந்திரத்துடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது. விபத்தின் போது பேருந்தில் பயணித்த 10 பேர் காயமடைந்து ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்தில் பேருந்து முற்றாக சேதமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பாக ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

தியாக தீபம் அன்னை பூபதியின் திருவுருவ படம் தாங்கிய ஊர்தி

தியாக தீபம் அன்னை பூபதியின் திருவுருவ படம் தாங்கிய ஊர்தி யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கு நோக்கி புறப்பட்டுள்ளது. தியாக தீபம் அன்னை பூபதியின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவரது திருவுருவப் படம் தாங்கிய ஊர்தி பவணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் வீதியிலுள்ள தியாக தீபம் திலீபன்  நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி இன்று காலை இந்த ஊர்தி பணி ஆரம்மானது. யாழில் இருந்து இன்று ஆம்பிக்கப்பட்டுள்ள இந்த ஊர்தி, வடக்கு கிழக்கு மாகாணத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்று இறுதியாக அன்னை பூபதி அம்மாவின் நினைவிடத்தை சென்றடைந்து நிறைவடையும்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

விளையாட்டுப் பொருட்களுடன் ஐஸ் போதைப்பொருள் சந்தேக நபரும் கைது

அம்பாறை மாவட்டத்தில் விளையாட்டுப் பொருட்களுடன் சூட்சுமமாக கொரியர் சேவை ஊடாக கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றது. இதன்போது 43 வயது மதிக்கத்தக்க தோடம்பழம் சுயேட்சைக் குழுவின் காரைதீவு பிரதேச சபை முன்னாள்  உறுப்பிராக செயற்பட்டவரே கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர் பயன்படுத்திய பல வீடுகளில் மணிக்கணக்கில் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.இதன்போது, கொரியர் சேவை ஊடாக கடத்தி வரப்பட்டிருந்த விளையாட்டுப் பொருட்களுடன் இருந்த கரடி பொம்மையின் கழுத்துப் பகுதியில் சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த 107 கிராம் ஐஸ் போதைப்பொருளும்   மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் இலத்திரனியல் தராசு 2, கைத்தொலைபேசிகள், ஒரு தொகை பணம், கொரியர் ஊடாக கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள்  சட்ட நடவடிக்கைக்காக …

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் சாதனை

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் வீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளை விட இம்முறை வடக்கு மாகாணத்தின் கல்விச் சாதனைகள் மிகச் சிறந்த நிலையை எட்டியுள்ளன. இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு வடக்கு மாகாணத்திலிருந்து தோற்றிய மொத்தப் பரீட்சார்த்திகளில் (பாடசாலை மாணவர்கள் மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள்) 9,191 மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்துக்குத் தகுதி பெற்றுள்ளனர். இது பரீட்சைக்குத் தோற்றிய மொத்த மாணவர்களின் அடிப்படையில் 65.19 சதவீதமாகும். இதன் மூலம் மாகாணங்களுக்கிடையிலான தரவரிசையில் வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் பெருமையுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும், உயிரியல் பிரிவு மற்றும் கலைப் பிரிவுகளிலிருந்து பல்கலைக்கழகப் பிரவேசத்துக்குத்…

மேலும் படிக்க