தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழில் வாள்களுடன் இளைஞன் கைது!

ஆபத்தான வாள்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியைச் சேர்ந்த 28வயதான இளைஞன் ஒருவர் நேற்றைய தினம். திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணப் காவல்துறையால்.கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே வாள்வெட்டுக் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேக நபரே இவ்வாறு  காவல்துறையால்.கைது செய்யப்பட்டுள்ளார். கைதான இளைஞனை    இன்று. செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் முற்படுத்தவிருப்பதாக  காவல்துறை.தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாண  காவல்துறை.நிலைய தலைமைப் காவல்துறை. பொறுப்பதிகாரி பாலித செனவிரட்னவின் வழிகாட்டுதலின் கீழ் பொறுப்பதிகாரி மஞ்சுள தலைமையிலான  காவல்துறை குழுவினரே மேற்படி கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

சுழற்றியடித்த காற்றால் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்த மீனவர்கள்

புத்தளம் – உடப்பு கிராமத்தில் இன்று அதிகாலை தென்மேல் பருவக்காற்று திடீரென்று வீசியதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்துள்ளனர். அதிகாலை வழமை போல மீனவர்கள் கடலுக்குச் செல்ல தயாராகிய நிலையில் காற்றின் வேகம் காணப்படவே அவர்கள் மீண்டும் கடலுக்குச் செல்லாது வீடுகளுக்கு திரும்பிச் செல்வதைக் காணக்கூடியதாக இருந்தது. இதனால் இயந்திரப் படகுகள், தெப்பங்கள், கரைவலைத் தொழிலாளர்களின் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து தடைப் பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டு

நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து கடந்த வெள்ளிக்கிழமை  தொடக்கம் தனியார் கையில் வந்துள்ளதுடன் தொடர்ந்தும் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். நெடுந்தீவு – குறிகட்டுவான்  இடையேயான சேவையில் ஈடுபடும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறுப்பிலுள்ள படகுகளில் குமுதினி திருத்தவேலை காரணமாக சேவையில் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை வடதாரகை திருத்த வேலைக்காக திருகோணமலையிலும், நெடுந்தாரகை திருத்தவேலைக்காக நெடுந்தீவில் என பயணிகள் சேவையில் இருந்து முற்றாக அரச படகுகள் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டு தீவு மக்களை தவிக்கவிட்டுள்ளனர். தனியார் படகொன்றே தற்போது பயணிகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றது.இதன்காரணமாக வழமையான அதன் மு.ப.11.30 மணி சேவையினை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.இதேவேளை பண்டிகைக்காலம் நெருங்கிவரும் நிலையில் மு.ப.11.30 மணி சேவை நிறுத்தப்பட்டதால் உள்ளூர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். படகு சேவைகள் தொடர்பாக உரிய திட்டமிடல் இன்றி…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வீதி ஓரங்களில் கழிவுகள் வீதியால் செல்லமுடியாத துப்பாக்கிய நிலை!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரத்தில் வீதி ஓரங்களில் கழிவுகள் தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வருகின்றன.இதனை தடுக்கும் நடவடிக்கையாக புதுக்குடியிருப்பு பிரதேச சபையினால் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வீதியோரங்கள் பொது இடங்களில் குப்பை கொட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளதுடன் இதனை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்  என அறிவிக்கப்பட்ட போதும் புதுக்குடியிப்பு நகர்பகுதி மக்கள் வீட்டுக்கழிவுகளை குறித்த வீதிக்கருகில் தொடர்ச்சியாக கொட்டிவருகின்றார்கள் இதனால் இந்த வீதி ஊடாக பயணிக்கும் போது அதிக துர்நாற்றம் வீசுவதுடன் காட்டு மிருகங்களின் நடமாட்டங்களால் வீதி விபத்துக்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக வீதியால் பயணிப்பவர்கள் தெரிவித்துள்ளார்கள். அதிகளவான மக்கள் வாழ்ந்து வரும் புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் பிரதேச  சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கழிவகற்றல்  நடவடிக்கை சரியான முறையில் இல்லை என…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

25,000 தொன் உரத்துடன் நாட்டை வந்தடையவுள்ள கப்பல்

25,000 தொன் உரத்தை ஏற்றிய கப்பலொன்று நாளை (05) நாட்டை வந்தடையவுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமால் கருணாரத்ன தெரிவித்துள்ளார். தற்போதைய உலகளாவிய சூழ்நிலையில் உருவாகியுள்ள உரப் பிரச்சினையை அரசாங்கத்தினால் வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்ய முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.அத்துடன், யல பருவம் ஆரம்பமாகும் இவ்வேளையில் விவசாயிகளிடையே உரப் பிரச்சினை குறித்த கவலைகள் காணப்பட்ட போதிலும், நாட்டில் தற்போது தேவையையும் விட அதிகளவில் சேற்று உரம் (TSP) மற்றும் பண்டி உரம் (MOP) கையிருப்பில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். யூரியா உரம் தொடர்பில் ஒரு சிறிய சிக்கல் காணப்படலாம் என்றாலும், தற்போது நாட்டில் 1 இலட்சம் தொன்களுக்கு நெருக்கமான கையிருப்பு உள்ளதாகவும், நெற்செய்கைக்குத் தேவையான 80,000 தொன்களுடன் ஒப்பிடுகையில் இது போதுமானது என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.   உப பயிர்கள்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாடு தழுவிய அடை யாள வேலை நிறுத்தம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

இன்று (04) காலை 8 மணி முதல் நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான முடிவு, இன்று நடைபெறவுள்ள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் என சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சாமில் விஜேசிங்க தெரிவித்தார். வைத்தியர்களின் இடமாற்றச் செயல்முறை அரசியல்மயமாக்கப்படுவதாகக் கூறப்படுவதைக் கண்டித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த வாரம் ஏற்கெனவே இரண்டு முறை அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

ஏலக்காய் கடத்த முயன்ற 2 சந்தேக நபர்கள் கல்பிட்டி யவில் கைது.

சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஏலக்காய் கடத்த முயன்ற 2 சந்தேகநபர்கள் கல்பிட்டியவில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர். கடந்த 31ஆம் திகதி கல்பிட்டி கீரிமுந்தலம் கடற்பகுதியில் இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்ய முயன்ற 98 கி.கி ஏலக்காயை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி படகுடன் 2 சந்தேகநபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர். அதன்படி, கல்பிட்டி கீரிமுந்தலம் கடற்பரப்பை உள்ளடக்கி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான விஜயவால் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, மேற்கூறிய கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான ஒரு டிங்கி படகு (01) ஆய்வு செய்யப்பட்டது, மேலும் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற சுமார் எண்பத்தெட்டு (98) கிலோகிராம் ஏலக்காய் இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்த ஒரு டிங்கி படகுடன் 2 சந்தேகநபர்களை கடற்படையின் கைப்பற்றினர்.…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கடும் வெப்பம் காரண மாக மன அழுத்தம், மனச் சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்

கடும் வெப்பம் காரணமாக மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் நிம்மதியற்ற நிலை போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என மனநல மருத்துவர் விந்தியா விஜயபண்டார எச்சரித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதிக வெப்பத்தினால் ஏற்படும் நீரிழப்பு, உடலில் உள்ள இரசாயன மற்றும் ஹோர்மோன் அளவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தி ஒருவரின் மனநலத்தைப் பாதிக்கின்றது.மூளையில் உள்ள இரசாயனங்கள் மற்றும் ஹோர்மோன்களின் தாக்கம் காரணமாக ஒருவரது மனநிலை வீழ்ச்சியடையக்கூடும்.இரவு நேரங்களில் நிலவும் அதிகவெப்பம் தூக்கத்தைச் சீர்குலைப்பதோடு, இது மேலும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கின்றது. கடும் வெப்பமானது கவனக்குறைவு மற்றும் நினைவாற்றல் குறைபாடு போன்ற நிலைகளுக்கும் இட்டுச் செல்லக்கூடும் எனவும் எச்சரித்துள்ளார்.கடும் வெப்பத்தினால் நாட்பட்ட நோயாளிகள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் அதிக ஆபத்தை எதிர்நோக்குவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் வெப்பமான காலநிலையில் மது…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கிளி தர்மபுரம் பகுதி யில் கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு.

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.தர்மபுரம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றும் இரண்டு இளைஞர்கள், நேற்று இரவு பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். இதன்போது, அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் அதிவேகமாகச் சென்றமையால் கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் பயணித்த மோட்டார் கிரைண்டர் ரக வாகனத்துடன் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 18  வயதுடைய  தியாகராசா விக்கினேஸ்வரன் மற்றும் 19 வயதுடைய ஜெரின் கனிஸ்ரன் ஆகிய இளைஞர்கள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஏப்ரல் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைத் திருத்தம்

ஏப்ரல் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை எதிர்வரும் (05) ஞாயிற்றுக்கிழமை வெளியிடவுள்ளதாக லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு குறிப்பிடும்போதே லிற்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார். புதிய விலைத்திருத்தம் தொடர்பான பட்டியல் நிதி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள தாக தெரிவித்துள்ள அவர், நிதியமைச்சின் அனுமதி கிடைத்தவுடன் புதிய விலைத் திருத்தம் அறிவிக்கப்படும் என்றார். பெரும்பாலும் எதிர்வரும் (05) ஞாயிற்றுக்கிழமை புதிய விலைத்திருத்தம் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதுவரை, தற்போது விற்பனை செய்யப்படும் விலையில் எந்தவித மாற்றங்களும் ஏற்படாது. நாட்டின் நுகர்வுக்குத் தேவையான சமையல் எரிவாயு போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் படிக்க