ஒரு கோடியே 15 இலட்சம் ரூபா கொள்ளையடித்த குற்றச் சாட்டில் இருவர் கைது
யாழ்- வல்வெட்டி, கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபா பணத்தைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுங்கேணியைச் சேர்ந்த மற்றொருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் சந்தேகநபரைத் தேடி காவல்துறையினர்.விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 27 ஆம் திகதி பகல் வேளையில் வீட்டில் ஆள்கள் இல்லாத நேரத்தில் வீட்டின் புகைக்கூட்டை உடைத்து உள்ளிறங்கிய இருவரும் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய வல்வெட்டித்துறை காவல்துறையினர். விசாரணையை துரிதப்படுத்தி கண்காணிப்பு கமராக்களை ஆராய்ந்ததில் மேற்படி சந்தேகநபர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர். கெருடாவிலைச் சேர்ந்த 16 வயது சிறுவன், 19 வயது இளைஞர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்களில் ஒருவர் வல்லைச் சந்தியிலும், மற்றொருவர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியிலும் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் மேற்படி…
மேலும் படிக்க