தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழில் காவல்துறை யினர்.துரத்திச் சென்ற உந்துருளி.கோர விபத்து

யாழ்ப்பாணத்தில்  காவல்துறையினர்.துரத்திச் சென்ற உந்துருளி.ஒன்று, வீதியில் பயணித்த மற்றொரு   உந்துருளியுடன். மோதி விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை யாழ்ப்பாணம் காவல்துறையினர்.  உந்துருளி.சென்ற நபர் ஒருவரைத் துரத்திச் சென்றுள்ளனர்.இதன்போது யாழ்ப்பாணம் மவுண்ட் ஹாமல் சந்தியடியில், காவல்துறையினர். துரத்திச் சென்ற  உந்துருளி.கட்டுப்பாட்டை இழந்து, அவ்வழியாகப் பயணித்த வேறொரு உந்துருளி.மீது பலமாக மோதியுள்ளது.

தப்பியோட முயன்ற  உந்துருளி.மோதியதில், மற்றைய  உந்துருளி.பயணித்த நபர் படுகாயமடைந்து, தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய பின்னர் தப்பியோட முயன்ற நபரை காவல்துறையினர். சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர்.இவ்விபத்துத் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினர்.மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அன்மைச் செய்தி

Leave a Comment