இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஏற்றுமதிக்கு முன்னு ரிமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளித்து, இத்துறை எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்ள அரசு அதிகபட்சமாக தலையிடும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ச் சூழல் காரணமாக இந்நாட்டின் ஏற்றுமதித் துறைக்கு ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, இத்துறையின் பிரதான ஏற்றுமதியாளர்கள் மற்றும் இலங்கை வர்த்தக சபை பிரதிநிதிகளுடன் நேற்று  பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இங்கு குறிப்பாக ஏற்றுமதித் துறைக்கும், உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கும் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தினார். தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்து, உருவாகியுள்ள சூழ்நிலையை முகாமைத்துவம் செய்வதற்காக ஏற்றுமதித் துறைக்கு முன்னுரிமை அளித்துச் செயற்படுவது குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. இத்துறையில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அது…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

தெற்கு மற்றும் மத்திய ஆசியா விற்கான அமெரிக்க சிறப்பு தூதர் செர்ஜியோ கோர் (Sergio Gor) இலங்கைக்கு வருகை

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க சிறப்பு தூதர் செர்ஜியோ கோர் (Sergio Gor) இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இம் மாதம் 19 முதல் 24 ஆம் திகதி வரை இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக  அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.இந்த விஜயத்தின் போது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் உயர் மட்ட சந்திப்புகள் இடம்பெறவுள்ளன. இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், சிறப்பு தூதர் செர்ஜியோ கோர், அரசின் சிரேஷ்ட தலைவர்களுடன் சந்தித்து அமெரிக்கா–இலங்கை உறவின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தவுள்ளார். மேலும், முக்கிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன. இந்த சந்திப்புகள், முக்கிய கடல் போக்குவரத்து வழிகளைப் பாதுகாப்பது, துறைமுகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக மற்றும் வணிக உறவுகளை மேம்படுத்துவது போன்ற அமெரிக்காவின்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

மத்திய கிழக்கு விமான சேவைகள் இரத்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

மத்திய கிழக்கு பிராந்தியத்தின் சில பகுதிகளுக்கான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. அதற்கமைய, துபாய்க்கான விமான சேவைகள் இன்றும், நாளையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.அத்துடன், தமாம், தோஹா குவைத் ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.பயண முன்பதிவுகளை செய்தவர்கள் தங்களின் போக்குவரத்து தொடர்பில் 1979 என்ற துரித தொலைபேசி இலக்கத்தினூடாகப் பெற்றுக் கொள்ள முடியும்.அல்லது அருகிலுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகங்களுக்குச் சென்று, விமான சேவைகள் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று (18) காலை இலங்கையை வந்தடைந்தன.

திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று (18) காலை உஸ்வெட்டகெய்யாவ, தல்தியவத்தையில் உள்ள எரிவாயு இறக்கும் மிதவையை வந்தடைந்துள்ளன. அதிலிருந்து எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்று (17) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மார்ச் மாதத்தில் இதுவரையில் 38,000 மெட்ரிக் தொன் லிட்ரோ எரிவாயு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், அடுத்த இரண்டு நாட்களுக்குள் மேலும் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயு கையிருப்பு நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். எமக்கு மார்ச் மாதத்திற்கு 33,000 மெட்ரிக் தொன் எரிவாயுவே தேவையாயிருந்தது. எனினும், ஒரு தனியார் நிறுவனம் எரிவாயு விநியோகத்தை முடக்கியுள்ளதால், மார்ச் மாதத்திற்காக நாம் 38,000 மெட்ரிக் தொன் ஓடர் செய்தோம். அதற்கான எரிவாயுவை எமது லிட்ரோ நிறுவனம் இறக்குமதி செய்கிறது. அந்த…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

அம்பலாந் தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் பயங்கர விபத்தில் நால்வர் உயிரிழப்பு.

அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக காவல்துறைனர்.  தெரிவித்துள்ளனர்.இச்சம்பவத்தில் 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறைனர்.  குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த பேருந்தும், திஸ்ஸமஹாராமயவிலிருந்து கராப்பிட்டிய நோக்கிப் பயணித்த பேருந்தும்  மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.இச் சம்பவம் தொடர்பில்  காவல்துறைனர்.மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

எரிபொருளுடனான மற்றொரு கப்பல் நாட்டுக்கு வந்துள்ளதாக மயூர நெத்திகுமாரகே!

எரிபொருளுடனான மற்றொரு கப்பல் நாட்டுக்கு வந்துள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.இந்த கப்பலில் 18,000 மெட்ரிக் தொன் டீசல், 17,000 மெட்ரிக் தொன்  பெட்ரோல்  மற்றும் 3,000 மெட்ரிக் தொன் சூப்பர் டீசல்  இருப்பதாகவும் அவர் கூறினார்.இவற்றை இறக்குவதற்கான ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், கேள்வி மனுக்கு அமைவாக ஏனைய அனைத்து எரிபொருள் கப்பல்களும் படிப்படியாக நாட்டை வந்தடையும் என்றும் அவர் கூறினார்.எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து பெறப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

எரிபொருள் தட்டுப் பாடு காரணமாக வைத்திய சாலைக் கட்டமைப்பைப் பராமரிப் பதில் கடும் சவால்கள்

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வைத்தியசாலைக் கட்டமைப்பைப் பராமரிப்பதில் கடும் சவால்கள் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இது குறித்து விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. எரிபொருள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் பணிக்குச் செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக GMOA தெரிவித்துள்ளது. இது குறித்து ஜனாதிபதிக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்தும் இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை எனச் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலை குறித்து ஆராய்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக நாளை (மார்ச் 17) நாடளாவிய ரீதியிலான பிரதிநிதிகளின் பங்கேற்புடன் அவசர மத்திய செயற்குழு கூட்டத்தை நடத்த GMOA தீர்மானித்துள்ளது. இதன்போது ஆரம்ப சுகாதார சேவை குறித்த விசேட அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வைத்தியர்களின் கோரிக்கை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

தனியார் பேருந்து சேவைக்கு 60 லீட்டர் முதல் 360 லீட்டர் வரை எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை

இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, தனியார் பேருந்து சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக வாராந்த அடிப்படையில் 60 லீட்டர் முதல் 360 லீட்டர் வரை எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால, பேருந்துகள் பயணிக்கும் தூரத்தின் (Kilometers) அடிப்படையில் அவற்றுக்கான எரிபொருள் அளவு தீர்மானிக்கப்படும் என்று குறிப்பிட்டார். இந்த நடைமுறை முழுமையாகச் சீரமைக்கப்படும் வரை, தனியார் பேருந்துகள் தமக்குத் தேவையான எரிபொருளை இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) டிப்போக்களில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார். அரசின் இந்த முடிவுக்குப் பதில் அளித்துள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, டிப்போக்கள் ஊடாக மாத்திரம் எரிபொருள் வழங்கும் நடைமுறை பாரிய…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

வாரத்திற்கு குறைந்தது 35 லிட்டர் எரிபொருள் தேவைப் படுவதாக முச்சக்கர வண்டி சாரதிகள்

QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் மேலாண்மை அமைப்பின் கீழ் ஒதுக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு தங்கள் செயல்பாடுகளைத் தக்கவைக்க போதுமானதாக இல்லை என்று  முச்சக்கர வண்டி சாரதிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஒதுக்கீடு அதிகரிக்கப்படாவிட்டால் போராட்டங்களைத் தொடங்க நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.இந்த முறையின் கீழ் முச்சக்கர வண்டிகளுக்கு தற்போது வாரத்திற்கு 15 லிட்டர் எரிபொருள் ஒதுக்கப்படுவதாக சாரதிகள் குறிப்பிட்டனர்.ஆனால் வாகனத்தை முதன்மை வருமான ஆதாரமாக நம்பியிருப்பவர்களுக்கு இந்தத் தொகை போதுமானதாக இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர். முச்சக்கர வண்டிகள் வழக்கம் போல் இயங்க, சாரதிகள் வாரத்திற்கு குறைந்தது 35 லிட்டர் எரிபொருள் தேவைப்படுவதாக முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.ஒதுக்கீடு திருத்தப்படாவிட்டால், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் முச்சக்கர வண்டி சாரதிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் எச்சரித்தனர். இதற்கிடையில், பாடசாலை போக்குவரத்து இயக்குநர்கள் மற்றும் தனியார் பேருந்து…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

தேவேந்திர முனைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் மீன்படி படகில் ஹேரோயின் போதைப் பொருள்

தேவேந்திரமுனைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட பலநாள் மீன்படி படகில் ஹேரோயின் போதைப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளது. குறித்த பலநாள் மீன்பிடி படகு இன்று (16) காலை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது. போதைப்பொருள் அடங்கியிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் உரமூடைகளை ஏற்றிச் சென்ற உள்நாட்டுப் பலநாள் மீன்பிடிப் படகு ஒன்றுடன் 5 சந்தேகநபர்கள் நேற்று (16) கைது செய்யப்பட்டனர். கடற்படையின் நீண்டதூர கண்காணிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர். இந்நிலையில் குறித்த பலநாள் மீன்பிடி படகு கரைக்கு கொண்டுவரப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் அதில் 123 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். இதன் பெறுமதி சுமார் 3 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கு முன்னரும் கடந்த வாரத்தில்…

மேலும் படிக்க