அண்மை செய்தி இலங்கை செய்தி. 

கைப்பற்றப் பட்ட போதைப் பொருட் களை விரைவாக அழிக்க புதிய பொறி முறை ஜனாதிபதி!

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இருப்புக்களை விரைவாக அழிக்கும் பணிகளுக்கு நிலவும் சட்டச் சிக்கல்களை நீக்குவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் குறித்த சமூக நம்பிக்கையை உறுதிப்படுத்துவதில், கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை எவ்வளவு விரைவாக அழிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அழிப்பதன் அவசியத்தை ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். இதற்காக முறையான பொறிமுறையொன்றை உடனடியாகத் தயாரிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். இந்தச் செயல்முறையைத் துரிதப்படுத்துவதற்கான சட்டத் திருத்த வரைவு ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளின்படி, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அழிப்பதற்கு எடுக்கும் காலத்தை மேலும் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. இச்செயல்முறையின் போது நீதிமன்றம், பொலிஸ் மற்றும்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

200 மில்லியன் டொலர் களை உடனடியாக வழங்கு வதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம்

இலங்கைக்கு 200 மில்லியன் டொலர்களை உடனடியாக இலங்கைக்கு வழங்குவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம்    ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இந்த ஆண்டிற்காக இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்டிருந்த 380 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை 480 மில்லியன் டொலர் வரை அதிகரிப்பதற்கும், நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அதில் 200 மில்லியன் டொலர்களை உடனடியாக இலங்கைக்கு வழங்குவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வருகை தந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்டோ கண்டா (Masato Kanda) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர், நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்த போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது. இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி எவ்வாறு ஒத்துழைக்க முடியும் என்பது குறித்து இச்சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், ‘டித்வா’ அனர்த்த…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் அனைத்து பொதுச் சேவைகளும் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என பதில் ஆணையாளர் நாயகம் எம்.எஸ்.பி சூரியப்பெரும  தெரிவித்துள்ளார். கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. இந்தநிலையில், இடைநிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் ஒருநாள் சேவை, ஏனைய அனைத்துப் பொதுச் சேவைகள் இன்று முற்பகல் 11.00 மணி முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது. இன்றைய தினம் முதல் தங்களது அடையாள அட்டைத் தேவைகளுக்காக திணைக்களத்தை அணுக முடியும் எனவும் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் எம்.எஸ்.பி சூரியப்பெரும தெரிவித்துள்ளார்

மேலும் படிக்க
இலங்கை செய்தி. தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

இந்திய இலங்கை வெளியுறவு அமைச்சர் இடையே விசேட கலந்துரை யாடல்

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், பிராந்திய பதற்றங்களின் பின்விளைவுகள் மற்றும் அவற்றின் விரிவான தாக்கங்கள் குறித்து இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், இந்தியாவின் “அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை” கொள்கை மற்றும் “மகாசாகர் தொலைநோக்கு” முயற்சிக்கு தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்துள்ளார்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

மாலை 6.00 மணி – இரவு 10.00 மணி வரை மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

நாட்டின் நாளாந்த வலுசக்தி நுகர்வு அதிகமுள்ள மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலான காலப்பகுதியில், வலுசக்தியை மிகச்சிறந்த முகாமைத்துவத்துடன் பயன்படுத்துவது குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்தி, அவர்களின் பங்களிப்புடன் நாட்டின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் எதிர்நோக்கியுள்ள வலுசக்தி விநியோகத்திலான சவால்களுக்கு மத்தியில், வலுசக்தியைச் சரியான முகாமைத்துவத்துடன் பயன்படுத்தி நாடு எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றிகொள்ள அதிகபட்ச பங்களிப்பை வழங்குவது, நிறுவன ரீதியாகவும் தனிநபர் ரீதியாகவும் தற்போது அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள பொறுப்பாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். வலுசக்தி பாதுகாப்பைப் பேணுவதற்காக தொடர்ச்சியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் பொருட்டு நேற்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

பாணின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானம்.!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின் புதிய விலை 130 ரூபாவாகும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஏனைய அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளையும் இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாவினால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கொள்கலன் போக்கு வரத்து கட்டணங் களை உயர்த்த தீர்மானம்.

நாட்டில் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, கொள்கலன் போக்குவரத்து கட்டணங்களை உயர்த்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்தின் தீர்மானத்தின்படி, இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் போக்குவரத்து கட்டணங்கள் 20 சதவீதத்தினால் (20%) அதிகரிக்கப்பட்டுள்ளன. எரிபொருள் விலையேற்றத்தினால் ஏற்படும் மேலதிக செலவினங்களைச் சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.இதேவேளை, இலங்கை சரக்கு போக்குவரத்து சேவைகள் சங்கமும் (SLFFA) கட்டண அதிகரிப்பு குறித்துத் தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்தச் சங்கத்தின் செயலாளர் இநாம் கபூர் தெரிவித்துள்ள முக்கிய விடயங்கள்: தாமதக் கட்டணங்களுடன் ஒப்பிடுகையில், கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் 350% முதல் 400% வரையான பாரிய அளவில் அதிகரிக்கக்கூடும். ஒரு கொள்கலனை விடுவிப்பதற்கு குறைந்தது 4 முதல் 5 நாட்கள் வரை ஆகிறது. இந்தக் காலப்பகுதியில் ஒரு…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

விமான கட்டணங்கள் இரண்டு மடங்காக அதிகரிக்கக் கூடும்! ஜனிதா ருவன் கொடித்துவக்கு

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால், இலங்கையில் விமான கட்டணங்கள் முந்தைய நிலையை விட இரண்டு மடங்காக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.இது குறித்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனிதா ருவன் கொடித்துவக்கு கருத்து வெளியிடுகையில், சர்வதேச சந்தையில் ஒரு கலன் விமான எரிபொருளின் விலை 2.25 டொலரிலிருந்து சுமார் 4 டொலராக உயர்ந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை (16) நிலவரப்படி, இலங்கையிடம் 28 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு காணப்பட்டது. தற்போது சுமார் 21 நாட்களுக்குத் தேவையான இருப்பு உள்ளது. ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் ஒரு எரிபொருள் கப்பல் வரவுள்ளது. அத்துடன் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் மற்றுமொரு கப்பல் வரவுள்ளதால், விநியோகத் தடைகள் ஏற்படாது என தெரிவித்தார். இதேவேளை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

ஏப்ரலில் நாட்டுக்கு வரும் எரிபொருள் கப்பல்கள்; மின்சாரம், போக்குவரத்துக்கு தடையில்லை! ஜனாதிபதி

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அனைத்து மாற்று ஏற்பாடுகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். எரிபொருள் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற அழிவுகரமான ஊழல்களுக்கு ‘உடனடி கொள்வனவு’ (Spot Purchases) முறையே பிரதான காரணமாக இருந்தது. இதனைத் தவிர்க்கவே, தாம் ஆட்சிக்கு வந்தது முதல் நீண்டகால விலைமனு மற்றும் அரசாங்கங்களுக்கு இடையிலான (G2G) ஒப்பந்தங்கள் மூலம் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) போன்ற நாடுகளுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர் மற்றும் இந்திய நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் விநியோகத்தில் எவ்வித நெருக்கடியும் இல்லை, மசகு எண்ணெய் (Crude Oil) இறக்குமதியிலேயே சிறு தாமதம் ஏற்பட்டுள்ளது. புஜேரா (Fujairah) துறைமுகத்தில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக, மார்ச் 24, 25 திகதிகளில் வரவிருந்த 90,000…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

இலங்கை உள்ளூராட்சிப் பிரதிநிதிகளுக்கு இந்தியாவில் விசேட பயிற்சி

இலங்கை தமிழ் மற்றும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் சமூகங்களின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் 30 பேருடனான இரண்டாவது குழுவினர் ஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் நடைபெற்ற 10 நாள் ஆளுமை விருத்தி செயல் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். இந்த செயல் திட்டமானது தெலுங்கானா மற்றும் தமிழ் நாடு ஆகிய இரு மாநிலங்களில் மார்ச் 9-18 வரை நடைபெற்றது. இக்குழுவில் தமிழ் முற்போக்கு கூட்டணியை சேர்ந்த 20 பிரதிநிதிகளும் இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த 10 பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட்டிருந்தனர். குறித்த நிலையத்தில் 2026 ஜனவரி 19-29 வரை முதல் தொகுதி 20 உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் ஆளுமை விருத்தி செயல்நெறியில் பங்கேற்றிருந்தனர்.

மேலும் படிக்க