இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான நாளை (30) அறிவிப்பு.

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான தனது இறுதித் தீர்மானத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  நாளை (30) அறிவிக்கவுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டிற்கு அனைத்து நுகர்வோர் பிரிவுகளுக்கும் 13.56 சதவீத கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது நிலவும் கடும் வறட்சி, தரமற்ற நிலக்கரி விநியோகம் மற்றும் மின் உற்பத்திக்காக அதிகளவில் டீசலைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளமை போன்ற காரணங்களால் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. தற்போது எதிர்பார்க்கப்படும் வருமானத்தை விட, செயல்பாட்டுச் செலவுகளுக்கு மேலதிகமாக 15.8 பில்லியன் ரூபா தேவைப்படுவதால் இந்த விலை உயர்வு கோரப்பட்டுள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் லலித் சந்திரலால், “மின்சார சபை சமர்ப்பித்துள்ள தரவுகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. கட்டணத்தை அதிகரிப்பதா அல்லது தற்போதைய…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளை ஒத்திவைப்பது!

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளை ஒத்திவைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலை காரணமாக பரீட்சைகள் ஒத்திவைக்கப்படலாம் என்ற கருத்து மாணவர்களிடையே பரவி வந்த நிலையில், இது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திகதிகளில் பரீட்சைகளை எதிர்கொள்ள மாணவர்கள் தயாராக வேண்டும். மேலும், 2026ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை விண்ணப்பங்கள் ஏப்ரல் 24ஆம் திகதி வரைஇணையவழியில் கோரப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, அனைத்து விண்ணப்பதாரர்களும் www.doenets.lk மற்றும் www.onlineexams.gov.lk/eic ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்குச் சென்று, அங்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

மலையகப் பொலிஸ் நிலையங்களுக்கு விரைவில் தமிழ் அதிகாரிகள்

இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவலகள் அமைச்சர் ஆனந்த விஜயபால தலைமையில் இன்று (27) சப்ரகமுவ மாகாண பொலிஸ் மா அதிபரின் பங்குபற்றுதலுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.இக் கலந்துரையாடலில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கலந்து கொண்டார். இதன் போது பிரதி அமைச்சர் மலையகத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் வெகு விரைவில் தமிழ் அதிகாரிகளை நியமிக்குமாறு கோரிக்கை முன்வைத்திருந்த நிலையிலே அமைச்சர் ஆனந்த் விஜயபால இப் பிரதேசங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் அதிகாரிகளை வெகு விரைவில் பெற்று தருவதாக உறுதியளித்திருந்தார். அத்தோடு மலையக பகுதியில் உள்ள சட்ட விரோத மதுபானங்கள், மதுபான உற்பத்திகளை முழுமையாக தடை செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.இதன்போது…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

அதிகரித்த வெப்பநிலை; நாட்டில் ‘எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் மொனராகலை மாவட்டத்திற்கும் கடும் வெப்பமான வானிலை குறித்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாளை (28) மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பச் சுட்டியானது (Heat Index) சில இடங்களில் ‘எச்சரிக்கை மட்டத்திற்கு’ (Caution Level) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எனவே நீண்ட நேரம் வெயிலில் இருப்பதும், வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் சோர்வை ஏற்படுத்தும் என்றும், தொடர்ந்து இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது தசைப்பிடிப்புக்கு (Heat cramps) வழிவகுக்கும் என்றும் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, பொதுமக்கள் போதியளவு நீரை அருந்துமாறும், கடினமான வெளிப்புற வேலைகளைக் குறைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

மோடி – அநுரவுக்கு இடையிலான பேச்சு எரிபொருளுடன் நாளை வரும் கப்பல்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பெறுபேறாக, நாளை (28) நாட்டிற்கு எரிபொருள் கப்பல் ஒன்று கிடைக்கவுள்ளது. 20,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 18,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் ஆகியவற்றை ஏற்றிய இந்தக் கப்பல் நாளை கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இலங்கையின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியா வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் மற்றுமொரு கட்டமாக இந்த எரிபொருள் கையிருப்பு அமைந்துள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு, இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு உறுதுணையாக அமைந்துவருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

மத்திய கிழக்கு போர்: வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை விசேட கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த விசேட கலந்துரையாடல் நேற்று (26) வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்றது. வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க மற்றும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். யுத்த சூழலால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் வாழும் இலங்கைத் தொழிலாளர்களுடன் மிகவும் முறையான மற்றும் தொடர்ச்சியான தொடர்பாடலைப் பேணுவதன் அவசியம் குறித்து இதன்போது வலியுறுத்தப்பட்டது. வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பான கொள்கை முடிவுகளைச் சரியாக நடைமுறைப்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. வெளிநாடு செல்லும் பெண்களுக்கான குடும்பப் பின்னணி அறிக்கைகளை (Family Background…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

வகையில், 600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விசேட விலை குறைப்புத் திட்டத்தின் கீழ் உள்ள பொருட்கள் அனைத்தும் நாடு முழுவதும் உள்ள சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக பொதுமக்களுக்குக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.பண்டிகை காலங்களில் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களிடமிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம் என பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன குறிப்பிட்டார். அத்துடன் பண்டிகை காலத்தில் எவ்வித தட்டுப்பாடுமின்றி அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.இதேவேளை விலைக் குறைப்புகளுடன் இணைந்து, உள்ளூர் சந்தையில் அதிக விலைக்குப் பொருட்களை விற்கும் வியாபாரிகளைக் கண்டறியும் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. புலச் செய்திகள் 

இத்தாலியில் பணி யாற்றிய இலங்கை வம்சாவளி பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு

இத்தாலிய பொலிஸ் துறையில் பணியாற்றிய ஒரே இலங்கை வம்சாவளி அதிகாரியான  27 வயதுடைய  ஷெஹான் பெர்னாண்டோ , மிலனில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வென்னப்புவ, தல்டேனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஷெஹான், மிலனில் உள்ள தனது தங்குமிடத்தில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக இத்தாலிய பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அவரது உடலுக்கு அருகிலேயே அவரது பணித் துப்பாக்கியும் (Service Weapon) கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மரணம் ஒரு தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா என்பது குறித்து இத்தாலிய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இனி நினைத்தவுடன் கைது செய்ய முடியாது!- பொலிஸாருக்கு அதிரடி உத்தரவு #Police

சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் சந்தேகநபர்களைக் கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டுதல்களைப் பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ளார்.அனைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இது தொடர்பான எழுத்துப்பூர்வ அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த சட்டப்பிரிவுகளின்படி, ஒருவரது பேச்சு அல்லது அறிக்கை மூலம் போரைத் தூண்டுதல், அல்லது பாகுபாடு, பகைமை அல்லது வன்முறைக்கு வழிவகுக்கும் தேசிய, இன அல்லது மத வெறுப்பைத் தூண்டுதல் போன்ற காரணிகள் உள்ளனவா என்பதை ஆராய்ந்த பின்னரே ஒருவரைக் கைது செய்ய முடியும் எனப் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். அவ்வாறு ஒருவரைக் கைது செய்வதாக இருந்தால், அதற்கு முன்னதாகச் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி, சட்டப் பிரிவின் பணிப்பாளருக்குத் தெரியப்படுத்தி, முன்முயற்சியாக எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெற வேண்டும்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

அத்துமீறி பிரவேசித்த இந்திய கடற் றொழிலாளர்கள் 07 பேர் கைது

யாழ்ப்பாணம் கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த இந்திய கடற்றொழிலாளர்கள் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நெடுந்தீவுக்கு வடக்கே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.இந்திய கடற்றொழிலாளர்களின் 02 விசைப்படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களை கரைக்கு அழைத்துவரப்பட்டு, கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க