ஈரானியப் போர் கப்பலை மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசு பொறுப் பேற்றுள்ளது.
இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் இயந்திரக் கோளாறு காரணமாகத் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டாவது ஈரானியப் போர்க்கப்பலான ‘ஐ.ஆர்.ஐ.எஸ். புஷேரின்’ கப்பலை மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசு பொறுப்பேற்றுள்ளது. நேற்று வியாழக்கிழமை இரவு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். “இந்தக் கப்பலை கொழும்புத் துறைமுகத்துக்குக் கொண்டு வராமல், திருகோணமலைத் துறைமுகத்துக்குக் கொண்டு சென்று அங்கு தரித்து நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கப்பலில் உள்ள 208 பணியாளர்களும் முதலில் கொழும்புத் துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டு, மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் வெலிசர கடற்படை முகாமில் தங்கவைக்கப்படவுள்ளனர். ஈரானியக் கப்பலில் 300 குழந்தைகள் இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை. அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் இத்தகைய வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்” – என்றும் ஜனாதிபதி திட்டவட்டமாகத்…
மேலும் படிக்க