அண்மை செய்தி தாயகச் செய்தி 

மூதூரில் வீதி புனரமைப்பின்போது – புதைக்கப்பட்ட கைக்குண்டு மீட்பு

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள நெய்தல் நகர் மையவாடி வீதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டு ஒன்று இன்று (04) காலை மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மூதூர் – நெய்தல் நகர் பகுதியிலுள்ள குறித்த வீதியின் புனரமைப்பு பணி இடம்பெற்றுக் கொண்டிருந்த போது போத்தலில் அடைக்கப்பட்டு நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இக் கைக்குண்டு தென்பட்டுள்ளது.

இதனையடுத்து வீதி புனரமைப்பு வேலை செய்தவர்களால் மூதூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அடைக்கப்பட்ட போத்தலில் மற்றுமொரு கைக்குண்டு இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

தற்போது அவ்விடத்தில் பொலிஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளதுடன் நீதிமன்ற அனுமதியை பெற்றதன் பின்னர் கைக்குண்டுகள் மீட்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அன்மைச் செய்தி

Leave a Comment