அண்மை செய்தி தாயகச் செய்தி 

கொக்கிளாய் – புல் மோட்டை இணைப்பு பாலத்திற்கு நிதி ஒதுக்கு மாறு கோரிய – ரவிகரன்

கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்பு பாலத்திற்கு 2027வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்குமாறு கோரிய – ரவிகரன் எம்.பி; விரைவில் ஆரோக்கியமான முடிவுகள் எடுக்கப்படுமென – அமைச்சர் விமல் ரத்நாயக்க பதில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை ஆகிய பகுதிகளை இணைக்கும் இணைப்புப் பாலத்தினை அமைப்பதற்கு 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுசெய்யுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் எதிர்வரும் வரவுசெலவுத்திட்டத்திற்குள் குறித்த கொக்கிளய் – புல்மோட்டை இணைப்புப் பாலம் அமைப்பது தொடர்பான ஆரோக்கியமான முடிவுகள் எடுக்கப்படுமென அமைச்சர் விமல் ரத்நாயக்க இதன்போது பதிலளித்துள்ளார். பாராளுமன்ற குழு அறையில் 21.05.2026இன்று இடம்பெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்திலேயே…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

ஒரே நாளில் நீருக்கு பலியான 6 உயிர்கள்;

நேற்றையதினம்  தெல்தெனிய – பம்பரகல விகாரைக்கு அருகில் உள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராடுவதற்கு நான்கு இளைஞர்கள் சென்றுள்ளனர். அவர்கள் நீராடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இதனையடுத்து பிரதேச மக்களுடன் பொலிஸார் இணைந்து தேடுதல் நடத்திய நிலையில் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், ஏனைய மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் 18 – 21 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.   இதேவேளை, யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறையில் உள்ள நீர்த்தடாகத்தில் ழூழ்கி சிறுவன் ஒருவர்  நேற்றையதினம் பரிதாபமாக உரியிழந்துள்ளார். சிறு வயதில் தந்தையை இழந்த குறித்த சிறுவன் தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை புலோலி மேற்கு பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய திலீபன் சந்தோஷ் என்ற சிறுவனே…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

இராணுவ உணவகம் உட்பட 4 உணவகங்கள் மீது வழக்கு பதிவு

இராணுவ உணவகம் உட்பட 4 உணவகங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் பா.பாலேந்திரன் தெரிவித்தார். வவுனியா தெற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள உணவகங்கள் சுகாதார முறைப்படி இயங்குகின்றதா என்பதை பரிசீலிக்க நேற்றும் இன்று அதிகாலையும் தவிசாளர் தலைமையிலான சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர் உட்பட பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினரால்  பூவரசங்குளம் பகுதியிலுள்ள உணவகங்களுக்கு அதிரடியாக விஜயம் செய்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதன்போது சுகாதாரமற்ற முறையி்ல் இயங்கிவந்த உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக ஏ9 வீதி தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தாரால் நடாத்தப்படும் உணவகம் உட்பட 4 உணவகங்கள் மற்றும் வெதுப்பக உணவுகளை விற்பனை செய்யும் முச்சக்கர வண்டிக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

யாழ் – வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக கவணயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக இன்றைய தினம் காலை வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களால் கவணயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று  இடம்பெற்றது. 2024 ம் ஆண்டு கிராம அபிவிருத்தி சங்க நிர்வாக தெரிவின் போது சந்தாப்பணம் கட்டுதல் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக 2026 ம் ஆண்டு நிர்வாக தெரிவு மிகவும் சிறப்பாக இடம் பெற வேண்டும் என்பதற்காக 2026/1/15 தொடக்கம் 2026/2/15 வரை புதிய அங்கத்தவர்கள் இணைவதற்கான காலம் அறிவித்தல் நோட்டீஸ் மூலம் ஒட்டப்பட்டது. அதன் அடிப்படையில் 93 உறுப்பினர்கள் சந்தாப்பணம் கட்டி வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க அங்கத்தவர்களாக இணைந்தார்கள். அதன் பின்னர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களுக்கு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மூலம் 2026/3/6 அன்று வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க புதிய நிர்வாக தெரிவு இடம்பெரும் என…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் (10) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய பாடசாலைகளுக்கு நாளை முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அவ்வாறு ஆரம்பிக்கப்படும் இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் 2026.07.24 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

பெக்கோ இயந்திரம் மோதியதில் அரச பேருந்து விபத்து – 10 பேர் வைத்திய சாலையில்!

ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று, பெக்கோ இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். ஹம்பாந்தோட்டை துறைமுக நகருக்கு முன்பாக இன்று (09) அதிகாலை 1:30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பேருந்து வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, துறைமுகத்தை நோக்கி வீதியைக் குறுக்கறுத்துச் சென்ற பெக்கோ இயந்திரத்துடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது. விபத்தின் போது பேருந்தில் பயணித்த 10 பேர் காயமடைந்து ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்தில் பேருந்து முற்றாக சேதமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பாக ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

எரிபொருள் தாங்கி ஊர்தி ஒன்று கவிழ்ந்து விபத்து

பதுளை – கொழும்பு பிரதான வீதியின் புவகஹவெல பகுதியில் நேற்று பிற்பகல் எரிபொருள் தாங்கி ஊர்தி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனையடுத்து மக்கள் எரிபொருளை சேகரிக்க முண்டியடித்துள்ளனர். பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த எரிபொருள் தாங்கி ஊர்தியே இயந்திர பிரச்சினைக் காரணமாக இவ்வாறு விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஊர்தியில் சுமார் 33,000 லீற்றர் எரிபொருள் இருந்ததாவும் ஊர்தி வீதியில் கவிழ்ந்ததையடுத்து அதிலிருந்த பெருமளவிலான எரிபொருள் வீதியெங்கும் பரவி ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விபத்து நடந்த இடத்திற்கு கொள்கலன்கள் மற்றும் வாளிகளுடன் விரைந்த பிரதேச வாசிகள், வீதியில் வழிந்தோடிய எரிபொருளைச் சேகரிப்பதில் ஈடுபட்டனர். குறித்த பகுதியில் தீப்பரவல் ஏதேனும் ஏற்படாமல் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். தற்காலிக லாபத்திற்காக குறித்த மக்கள் உயிரை ஆபத்தில் தள்ளிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

கிளி அரசாங்க அதிபருடன் யாழ் பாதுகாப்பு படைத்தளபதி உத்தியோகபூர்வ சந்திப்பு

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருடன் யாழ் பாதுகாப்பு படைத்தளபதி உத்தியோகபூர்வ சந்திப்பு கெமுனு ஹேவா படையணியின் மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பீ.கே நவரத்ன ஆர்டப்ளியூ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் யாழ்.பாதுகாப்பு படை தலைமையகத்தின் 35 வது தளபதியாக 2026 ஏப்ரல் 04 அன்று கடமைகளை பொறுப்பேற்றிருந்தார். 2026 ஏப்ரல் 07 இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்திற்கு உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்ட மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன அவர்கள் மாவட்ட அரசாங்க அதிபருடனான சந்திப்பொன்றை மேற்கொண்டார். இச் சந்திப்பின் போது மாவட்டத்தின் பாதுகாப்பு நிலை, பொதுமக்கள் நலன், அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. மேலும், மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்பை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் அவசர நிலை எதிர்வுகூறல் நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவதன் அவசியமும் இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது. இச்சந்திப்பில் மாவட்ட…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

வளப்பற்றாக் குறை வன்னியின் விளையாட்டுத் துறைக்கு பெருஞ்சவால் – ரவிகரன் எம்.பி

வளப்பற்றாக்குறை வன்னியின் விளையாட்டுத்துறைக்கு பெருஞ்சவால் – ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு; ஊக்கமருந்தின் கையாளல், விதிவிலக்கு நிலைகள் தொடர்பான அரசிதழிலுள்ள பிழைகளைத் திருத்துமாறும் வலியுறுத்து வன்னியில் விளையாட்டுத்துறையில் பாரிய வளப்பற்றாக்குறைகள் காணப்படுவதால் பாரிய சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளதாகத் தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த வளப்பற்றக்குறைகளை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டுமென விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சரைக் கோரியுள்ளார். அத்தோடு ஊக்கமருந்தின் கையாளல், விதிவிலக்கு நிலைகள் தொடர்பான இலங்கை அரசின் 2026.01.16 ஆம் திகதிய 2471/51 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிழைகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், குறித்த பிழைகளைத் திருத்தம் செய்யுமாறும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சரை வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் 07.04.2026இன்று இடம்பெற்ற விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டுக்கு எதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாத்தில் பங்கேற்றுக் கருத்துத்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன்படி, சிறிய ரக படகுகளுக்கு ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 50 ரூபாயும், நெடுநாள் மீன்பிடி படகுகளுக்கு ஒரு பயணத்திற்காக 150,000 ரூபாயும் மானியமாக வழங்கப்படவுள்ளது. இந்த மானியத் திட்டம் ஏப்ரல் 20ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க