அண்மை செய்தி இலங்கை செய்தி. 

150 அடி பள்ளத்தில் விழுந்து டிப்பர் ரக பாரஊர்தி விபத்து!

மஸ்கெலியா மின்னா பாதை ஊடாக சென்ற டிப்பர் ரக பாரஊர்தி ஒன்று சுமார் 150 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.சாமி மலை நகரில் இருந்து பொருட்களை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக பாரஊர்தி, வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் சாரதி வாகனத்தில் இருந்து பாய்ந்து தப்பித்துள்ளார்.எனினும் பக்கத்தில் அமர்ந்திருந்த நபருக்கு காயங்கள் ஏற்பட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.இந்த வீதி கடந்த முப்பது ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் பாரிய அளவிலான குன்றும் குழியுமாக காணப்படுகிறது என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

ரூ. 11 கோடி பெறுமதி யான சட்டவிரோத போதைப் பொரு ளுடன் நபரொருவர் கைது

சுமார் ரூ. 11 கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்த இலங்கை பிரஜை ஒருவரை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு, கொம்பனித்தெரு பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய கூலித் தொழிலாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.குறித்த நபர் இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து ஏ.ஐ.- 277 (AI-277) ரக ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று (06) காலை 6.50 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கொண்டு வந்த பயணப் பொதியிலிருந்து 11 கி.கி 340 கிராம் எடையுடைய “குஷ்” போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி சுமார் ரூ. 11 கோடியே 34 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. சொக்லேட் பக்கெட்டுகளுக்குள் இருந்த சொக்லேட்டுகளை அகற்றிவிட்டு,…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

அரச வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளது. இதற்கமைய இன்று (6) காலை 8 மணியுடன் பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. தமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துமாறு அந்த சங்கம் கோரியிருந்தது. இந்நிலையில் எதிர்வரும் வியாழக்கிழமை (09) பேச்சுவார்த்தை ஒன்றினை நடத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று அறிவித்திருந்தார். உலக சுகாதார அமைப்பின் மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காகத் தாம் இன்று இந்தியா புறப்படவுள்ளதாகவும், மீண்டும் நாடு திரும்பியதும் குறித்த பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சர் நேற்று தெரிவித்தார். இதனையடுத்து தமது சங்கம் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

வடக்கு, கிழக்கில் மழைக்கு வாய்ப்பு

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மாகாணத்திலும் புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதேவேளை சூரியனின் வடதிசை நோக்கிய நகர்வின் காரணமாக, ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதி முதல் எதிர்வரும் 15…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் சாதித்த மாணவர் களை நேரில் சென்று மதிப்பளித்தார் – ரவிகரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் க.பொ.த.உயர்தரப்பரீட்சையில் சாதித்த மாணவர்களை நேரில் சென்று மதிப்பளித்தார் – ரவிகரன் எம்.பி முல்லைத்தீவு மாவட்டத்தில் கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையில் சாதித்த மாணவர்களை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மதிப்பளித்துள்ளார். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உயர்தரப் பரீட்சையில் தோற்றி, ஒவ்வொரு பிரிவுகளிலும் மாவட்டத்தில் முதல் ஐந்து நிலைகளைப்பெற்ற மாணவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று வாழ்துவதுடன், மதிப்பளிக்கும் செயற்பாட்டையும் மேற்கொண்டுவருகின்றார். அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கலைப்பிரிவில் – 3Aசித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவியான இராஜேயஸ்வரன் யூலியானா, உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் 3A சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் முதல்நிலை பெற்ற முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவியான மிராஜ் நிடா பாத்திமா, வணிகப்பிரிவில் 3Aசித்திகளைப்பெற்று மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற முல்லைத்தீவு மகாவித்தியாலய…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

இலவச சுகாதார சேவையை தனியார் மயமாக்க சதி: 2500 மருத்துவர் களுக்கு தட்டுப்பாடு

நாட்டில் தற்போது சுமார் 2000 முதல் 2500 வரையான மருத்துவர்களுக்கான தட்டுப்பாடும், ஏறத்தாழ 1000 நிபுணத்துவ மருத்துவர்களுக்கான தட்டுப்பாடும் நிலவுகிறது. இந்த இக்கட்டான நிலைமை தொடர்பில் கவனத்தில் கொள்ளாத அராசங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்ப நாட்டின் சுகாதாரத் துறையைத் தனியார் மயமாக்குவதற்கான ஒரு திட்டமிட்ட சதியை முன்னெடுத்து வருவதாக சிவில் உரிமைகளுக்கான மருத்துவர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், பயிற்சியை முடித்த மருத்துவர்களைப் பணியில் அமர்த்துவது தொடர்பாகச் சுகாதார அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கையானது ஒட்டுமொத்தத் தொழில்முறை வல்லுநர்களாலும் அருவருக்கத்தக்க ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.  மருத்துவர்களின் கோரிக்கைகள் குறித்து எந்தவொரு கலந்துரையாடலையும் நடத்தாமல், அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மருத்துவர்களை ஒடுக்கவும் அச்சுறுத்தவும் அமைச்சர் முயற்சிக்கிறார். அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ முதலில் தனது சொந்த மாவட்டமான களுத்துறையில் உள்ள…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

உணவகங்கள் மற்றும் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்கள் பரிசோதனை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகங்கள் மற்றும் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்கள் இன்று  (04)  பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.இந்த பரிசோதனைகளின் போது, நுகர்விற்கு தகுதியற்ற உணவுப் பொருட்கள் மற்றும் மரக்கறிகள் கண்டறியப்பட்டதுடன், அவை பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக அவ்விடத்திலேயே அகற்றப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், விற்பனையாளர்களுக்கு சுகாதார விதிமுறைகள், உணவு பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் சுத்தமான சூழல் பராமரிப்பு குறித்து தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்  பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் வழங்கப்பட்டன. பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது  முக்கியப் பொறுப்பாக இருப்பதால்  இத்தகைய பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்பதை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். மேற்குறித்த பரிசோதனைகள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சஹிலா இஸ்ஸதீன்  வழிகாட்டலின்பேரில்  சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் முன்னோடித் திட்டமிடல் மற்றும் ஆலோசனைக்கமைய மேற்கொள்ளப்பட்டமை…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

நாட்டின் பல பகுதிகளில் நேற்று மாலை பெய்த கனமழையால் பல வீடுகள் சேதம்

நாட்டின் பல பகுதிகளில் நேற்று மாலை பெய்த கனமழையால் பல வீடுகள் சேதமடைந்ததுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கந்தளாய், சூரியபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்திகம பகுதியில் வீசிய மினி சூறாவளி காரணமாக 15-க்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.நேற்று மாலை 3:00 மணியளவில் திடீரென ஏற்பட்ட கடும் மழையுடன் கூடிய மினி சூறாவளி காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.பலத்த காற்றினால் வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன், சில வீடுகளின் கூரைத் தகடுகள் காற்றில் பறந்து அருகில் இருந்த மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கும் காட்சிகளைப் பார்க்க முடிகின்றது.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

அனுமதிப் பத்திரமின்றி பெருமளவிலான டீசலை வைத்திருந்த இருவர் கைது

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி பெருமளவிலான டீசலை வைத்திருந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தம்பலகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று (02) மாலை மொல்லிப்பொத்தானை பகுதியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 1,430 லீற்றர் டீசல் மற்றும் 615 லீற்றர் டீசல் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மொத்தமாக 2,045 லீற்றர் டீசல் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் திருகோணமலை மற்றும் தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த 41 மற்றும் 61 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
அண்மை செய்தி சிறப்புச் செய்தி 

கள்ள மணல் ஏற்றிச் சென்ற வாகனத்தை அதிரடிப்படையினர் துரத்திச் சென்ற சம்பவம்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கள்ள மணல் ஏற்றிச் சென்ற வாகனத்தை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் துரத்திச் சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்று(2) நள்ளிரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரவு நேரங்களில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக நேற்று(2) நள்ளிரவு பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கள்ள மணல் ஏற்றிச் சென்ற வாகனத்தை கைப்பற்ற முனைந்த போது வீதியில் மணலை கொட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். காணொளி அடிப்படையில் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

மேலும் படிக்க