மன்னார் மாவட்டத்தின் விசேட மாவட்ட விவசாய குழு கூட்டம்
மன்னார் மாவட்டத்தின் விசேட மாவட்ட விவசாய குழு கூட்டம் மன்னார் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நேற்று (15) மாலை 4 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. எல்நினோ (EL Nino) காலநிலை தாக்கம் விவசாயத் துறையில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற அடிப்படையில், அதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு, விவசாயிகளுக்கு போதிய அறிவுறுத்தல்களும் விழிப்புணர்வையும் வழங்கி, அதன் ஊடாக இந்த கால நிலைக்கு சவாலை ஏற்றுக்கொண்டு, அதற்கு ஏற்ற பயிர்ச்செய்கை திட்டமிடலை மேற்கொள்வதற்கான கூட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கால நிலைத் தாக்கமானது 2026,2027ஆம் ஆண்டு வரை தொடரும் என்று எதிர்வு கூறப்பட்டிருக்கின்றது அதன் அடிப்படையில் இதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் தேசிய மட்டத்திலும், ஏனைய பிரதேசங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. வட மாகாணத்தில் விசேட கூட்டத்தை ஏற்பாடு செய்து எவ்வாறு காலநிலை…
மேலும் படிக்க