இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இதுவரை சுமார் 40 லட்சம் பேர் வரி அடையாள இலக்கம் பெறவில்லை:

நாட்டில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் ‘வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்’ (TIN Number) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை சுமார் 40 லட்சம் பேர் அதனைப் பெற்றுக்கொள்ளவில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நாட்டில் சுமார் 17 மில்லியன் (1 கோடியே 70 லட்சம்) மக்கள் இந்த இலக்கத்தைப் பெற வேண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இதுவரையில் 13 மில்லியனுக்கும் அதிகமானோர் மாத்திரமே TIN இலக்கத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. 2026ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி திருத்தப்பட்ட சட்டமூலத்திற்கு அமைய, தற்போது அன்றாட மற்றும் வணிக ரீதியிலான பல்வேறு தேவைகளுக்கு TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, பின்வரும் சேவைகளுக்கு இந்த இலக்கம் இனி அவசியமானதாகும்: புதிய வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தல் மற்றும் கடன் அட்டைகளை (Credit Cards)…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

வேலணையை அச்சுறுத்திவந்த பிரதான மாட்டு திருட்டுக் கும்பல் கூண்டோடு கைது

யாழ்ப்பாணம் – வேலணையை அச்சுறுத்திவந்த பிரதான மாட்டு திருட்டுக் கும்பல் கூண்டோடு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஊர்காவற்றுறை பொலிசார் திருட்டில் ஈடுபடுவோர் மிகக் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வேலணை பிரதேசத்தை நீண்ட நாள்களாக அச்சுறுத்தி வந்த மாடு கடத்தல் மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை  குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர் வேலணை, புங்குடுதீவு, அல்லைப்பிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் திட்டமிட்ட வகையில், நீண்டகாலமாக பண்ணையாளர்களின் பெறுமதிமிக்க கறவை மாடுகள் மற்றும் வீடுகளை உடைத்து நகைகள் உள்ளிட்ட பெறுமதிவாய்ந்த பொருட்களை திருடிவந்த குழுவே கடந்த இரு நாள்களில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் நீண்ட நாள்களாக தேடப்பட்டுவந்த நிலையில், பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை, பருத்தியடைப்பு ஆகிய பகுதிகளில்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செம்மணி மனிதப்புதைகுழி அகழாய்வில் போது, 355 என்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப்புதைகுழி அகழாய்வில் இன்றையதினம் மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 24ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றையதினம் நடைபெற்றது. அதன் போது ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூடுகளில் குழந்தை ஒன்று , நான்கு சிறுவர்களுடைய என்பு கூடுகள் உட்பட 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் , புதிதாக மேலும் இரண்டு என்புகூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதனடிப்படையில் இது வரையிலான அகழ்வு பணிகளின் போது, 355 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 341 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அதேவேளை அகழ்வு பணிகளில் ருகுணு பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் இன்றையதினம் முதல் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கொண்டுள்ளனர். யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ், பேராசிரியர்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

1001 நாட்கள் போராடி வரும் தம்மை ஏமாற்றி அரசாங்கமும் அதிகாரிகளும்!

தங்களது வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து போராடி வரும் தங்களுக்கு, அரசாங்கமும் அதிகாரிகளும் வாய்மொழி வாக்குறுதிகளை மட்டுமே வழங்கி ஏமாற்றி வருவதாக மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 1001நாட்களை கடந்து இன்றைய தினமும் போராட்டம் சித்தாண்டி சந்தியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமது கால்நடைப்பண்ணைக்குரிய காணியை தங்களுக்கு வழங்குமாறு கோரி 1001 நாட்கள் போராடிவரும் தம்மை தொடர்ந்து ஏமாற்றி வருவதாக மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் சங்க தலைவர் நிமலன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள், மேய்ச்சல் தரைக்காக 1570 ஏக்கர் நிலத்தை விடுவிப்பதாக உறுதியளித்திருந்தார். ஆனால், இதற்கான உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியாகவில்லை. கொழும்பில் உள்ள மகாவலி அதிகார சபை அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, கடந்த 10 ஆம் திகதி தம்முடன் ஒரு முக்கிய சந்திப்பை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

காத்தான்குடி பிரதான வீதியில் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்பு

மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள நாவற்குடா பகுதியில், வீதியின் குறுக்கே அமைந்துள்ள வடிகானுக்குள் சிக்கிய நபர் ஒருவர், சுமார் இரண்டு மணித்தியால போராட்டத்திற்குப் பின்னர் தீயணைப்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். நாவற்குடா கத்தாமரப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள பிரதான வீதி வடிகானுக்குள் நேற்று மாலை நபர் ஒருவர் நுழைந்துள்ளார். அவர் நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், காத்தான்குடி பொலிஸாருக்கும் தீயணைப்புப் படையினருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்புப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, இரவு 7.30 மணியளவில் அந்த நபர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மீட்கப்பட்டவர் அப்பகுதியைச் சேர்ந்தவர் என்றும், சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அவர்…

மேலும் படிக்க
ஈழ அரசியல் ஆய்வு கட்டுரை 

கல்லோயாவிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை

கல்லோயாவிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை தமிழினத்தின் எழுபது ஆண்டுகால இரத்தச் சுவடுகள், குடியேற்ற அரசியல், மற்றும் நீடிக்கும் இனஅழிப்பின் வரலாறு ⊰❉⊱══════════════════⊰❉⊱ எழுதியவர் ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ முன்னுரை : ஒரு இனத்தின் வரலாற்றை அறிதல் ஏன் அவசியம்? ஒரு மக்களின் எதிர்காலம் அவர்களின் கடந்தகால நினைவகத்தின்மீது கட்டியெழுப்பப்படுகிறது. வரலாறு என்பது வெறும் காலவரிசைப் பதிவல்ல; அது ஒரு மக்களின் அரசியல் அனுபவம், அவர்களின் வாழ்வியல் போராட்டம், இழப்புகள், எதிர்ப்புகள் மற்றும் அடையாளப் பாதுகாப்பின் சாட்சியமாகும். தமிழர் வரலாற்றில் 1956 ஆம் ஆண்டு ஒரு திருப்புமுனையாக மட்டுமல்லாமல், பின்னர் பல தசாப்தங்கள் நீடித்த இனமுரண்பாடுகளுக்கும் அரசியல் வன்முறைகளுக்கும் அடித்தளமாக அமைந்த ஆண்டாகவும் நினைவுகூரப்படுகிறது. கல்லோயா பள்ளத்தாக்கில் ஆரம்பித்த வன்முறைகள், பின்னாளில்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

ரூ.2 கோடிக்கும் அதிக மதிப்புள்ள கஞ்சாவுடன் இளைஞர் கைது!

ரத்மலானா பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கல்கிஸ்சை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது. சந்தேகநபரின் உடைமைகளில் இருந்து 3 கிலோகிராம் மற்றும் 125 கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் சந்தை மதிப்பு ரூ.2 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டவர் 29 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்த போதைப்பொருள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? வேறு நபர்களுடன் தொடர்பு உள்ளதா? என்ற கோணங்களில் கல்கிஸ்சை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

காணாமல் போன 6 வயது சிறுவன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில் காணாமல் போயிருந்த 6 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினரால் சிறுவன் காணவில்லை என நேற்று (12) இரவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பருத்தித்துறை பொலிஸார் உடனடியாக விசாரணைகளையும் தேடுதல் நடவடிக்கைகளையும் ஆரம்பித்தனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, சிறுவனின் வீட்டிற்கு அருகில் அமைந்திருந்த கிணறு ஒன்றிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 6 வயதுடைய சிறுவன் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியிலும் துக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

அச்சுவேலி – தீர்த்தங்குளம் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீப்பரவல்

யாழ்ப்பாணம் அச்சுவேலி – தீர்த்தங்குளம் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீப்பரவல் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வேகமாக பரவிய தீ காரணமாக அப்பகுதியில் சில நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய தரப்பினரின் நடவடிக்கையால், தீப்பரவல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தகவலை அச்சுவேலி காவல்துறை அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் உயிர்சேதமோ அல்லது பெரியளவிலான பாதிப்புகளோ ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பில்  அச்சுவேலி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விசாரணை அறிக்கையின் பின்னரே தீ விபத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நீடிக்கும்

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  குறிப்பாக மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களுடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இந்த பகுதிகளின் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் வரை ஓரளவு பலத்த மழை பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளை, மன்னார் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளிலும் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு…

மேலும் படிக்க