சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

யாழ். செயலக முன்றலில் காணி களை விடுவிக்கக் கோரி மாபெரும் மாபெரும் போராட்டம்

காணிகளை விடுவிக்கக் கோரி மாபெரும் போராட்டம் – யாழ். செயலக முன்றலில் திரளுமாறு மயிலிட்டி மீள்குடியேற்றக் குழு அழைப்பு   வலிகாமம் வடக்கு மக்கள் தமது சொந்தக் கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து 37 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும், உயர் பாதுகாப்பு வலயங்களாக முடக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தப் போராட்டம் குறித்து மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர் ஊடகங்கள் மூலம் விசேட அறிவித்தலை விடுத்துள்ளனர்.அந்த அறிவித்தலில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:- “கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி எமது சொந்த ஊர்களில் இருந்து நாம் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டோம். இதன்படி, கடந்த ஜூன் 5 ஆம் திகதியுடன் எமது இடப்பெயர்வு அலைக்கு 36 வருடங்கள் நிறைவடைந்து, தற்போது 37 ஆவது…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

பாரதிராஜா உங்களுக்கு திரைக்கலைப் படைப்பாளி! எங்களுக்கு விடுதலைப் போராளி! காசி ஆனந்தன் கண்ணீர் அஞ்சலி.

இயக்குனர் இமயம் பாரதிராஜா உங்களுக்கு திரைக்கலைப் படைப்பாளி! எங்களுக்கு விடுதலைப் போராளி! காசி ஆனந்தன் கண்ணீர் அஞ்சலி. இந்திய அரசு வழங்கிய “பத்மபூஷன்” எனும் விருதை விட என் தமிழீழ மக்களின் விடுதலையே எனக்கு முதன்மையானது என்று கூறி பத்மபூஷன் விருதை உதற எறிந்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. தமிழீழம் சென்று தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை நேரில் சந்தித்து அன்பைப் பகிர்ந்து உறவாடித் திரும்பியவர் பாரதிராஜா. பாரதிராஜா அவர்கள் மீது அளவற்ற பெருமதிப்பை வைத்திருந்தார் தலைவர் பிரபாகரன். இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்களைத் தொடர்பு கொண்டு தமிழீழ விடுதலை போராட்டம் குறித்த திரைக்கலை படைப்பொன்று உருவாக்க பாரதிராஜா அவர்கள் திட்டமிட்டிருந்தும் அவருடைய அந்த கனவு நிறைவேறாமல் போனது உலகத் தமிழர் போராட்ட வரலாற்றில் நிகழ்ந்த ஒரு பேரிழப்பாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறு தொடர்கின்றது.…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

குவைத்தில் போதைப் பொருள் வேட்டை; 3 இலங்கையர் உட்பட 7 பேர் கைது

குவைத்தில் போதைப்பொருள் தொடர்பான தனித்தனி நடவடிக்கைகளில் மூன்று இலங்கையர்கள் உட்பட ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒரு குவைத் பிரஜை, ஒரு இந்தியர், மூன்று இலங்கையர்கள் மற்றும் இரண்டு நாடற்றவர்கள் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வைத்திருந்த பல்வேறு வகையான போதைப்பொருட்கள், மனநிலையைப் பாதிக்கும் மருந்துப் பொருட்கள் மற்றும் அவற்றை பொதி செய்து விநியோகிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பொருட்களில் 2.550 கிலோகிராம் ஹஷிஷ், 150 கிராம் ஹெரோயின் மற்றும் 20 கிராம் மெத்தம்பெட்டமைன் ஆகியவை அடங்குகின்றன. மேலும், கைது நடவடிக்கைகளில் ஒன்றின் போது சந்தேகநபர் ஒருவர் சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறப்படுவதால், அவருக்கு எதிராக கூடுதல் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேகநபர்களும்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மண்டைதீவு படுகொலையின் 40 ஆம் ஆண்டு நினைவு தினம்:

மண்டைதீவு பகுதியில் கடற்படையினரால் 31 மீனவர்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டதன் 40 ஆவது ஆண்டு நினைவு தினம், நேற்று யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. குருநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை நினைவுத் தூபியருகே நடைபெற்ற இந்நிகழ்வில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். குருநகர் ஆலய பங்குத்தந்தையின் தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, நினைவுத் தூபிக்கு மெழுகுவர்த்தி மற்றும் தீபங்கள் ஏற்றப்பட்டு, மலர் தூவி உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். கடந்த 1986 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் தேதி, குருநகர் பகுதியிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் உட்பட 31 மீனவர்கள் ஒரு படகில் கரைவலை மீன்பிடிப்புக்காக மண்டைதீவுக்குச் சென்றிருந்தனர். இதன்போது அங்கு நிலைநாட்டப்பட்டிருந்த கடற்படையினர், அந்த மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

இன்று (11) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.இப்பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனை உடனடியாக விடுதலைசெய்க ;ரவிகரன் எம்.பி

சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனை உடனடியாக விடுதலைசெய்க; அடக்குமுறைக் கருவியான பயங்கரவாதத் தடைச்சட்டமும் நீக்கப்படவேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து அண்மையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சொல்லிசைப்பாடகர் கணேஸ்குமார் சங்கீத்சனை உடனடியாக விடுதலைசெய்வதற்கு நடவடிககை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். அத்தோடு நாட்டில் அடக்குமுறைக் கருவியாகப் பாவிக்கப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக நீக்கபடவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் 10.06.2026இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார் . இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தின் உதயநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த கணேஸ்குமார் சங்கீத்சன் என்னும் சொல்லிசைப்பாடகர் அண்மையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளார். இந்த நாட்டிலே காலத்திற்கு காலம் இவ்வாறான கலைஞர்களும், படைப்பாளர்களும், ஊடகவியலாளர்களும் தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தியதற்காக…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வடபகுதி கடற் பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடு களைக் கட்டுப்படுத்துக – ரவிகரன்

வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துக – ரவிகரன் எம்.பி வலியுறுத்து வடபகுதிக் கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக்கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் 10.06.2026இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வடக்குமாகாண கடற்றொழிலாளர்கள் மிகவும் பாவப்பட்டவர்கள் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் என வடமாகாணத்தில் நான்கு மாவட்டங்களிலும் மீனவர்கள் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சட்டவிரோத தடைசெய்யப்பட்ட தொழில்களான சுருக்குவலை, வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல், டைனமெற் வெடிவைத்து மீன்பிடித்தல் போன்ற தீய செயல்களால் வடபகுதிக் கடல்வளம் முற்றாக அழிந்துபோகின்றது. இத்தகைய சட்டவிரோத தொழில்களைத்  தடுக்கவேண்டிய கடற்றொழில் திணைக்களமோ, கடற்படையோ செயலற்றவர்களாக இருக்கின்றனர். இதுகுறித்த கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்திடம் கேட்டால், ஆளணிப்பற்றாக்குறை இருப்பதாகவும்,…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

சங்கீத்ஷனை விடுவிக்கா விட்டால் வடக்கு, கிழக்கு போராட்டங்கள் வெடிக்கும் சிறீதரன்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்ஷனை உடனடியாக விடுவிக்காவிட்டால், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போராட்டங்கள் வெடிக்குமென, தமிழரசுக்கட்சி எம்.பி. சிவஞானம் சிறீதரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அவசரகாலசட்ட நீடிப்பு தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக மீண்டும் இந்த நாட்டில் பயங்கரமான, துயரமான சம்பவங்கள் இடம்பெறத்தொடங்கியுள்ளன. யாழ்ப்பாணத்தில் வைத்து கிளிநொச்சி உதயநகர் கிழக்கை சேர்ந்த கணேஷ்குமார் சங்கீத்ஷன் என்ற இளம்பாடகர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் . நாட்டில் ஒரு பாடல் பாடியதற்காக,ஒரு காலத்தின் செய்தியை கண்ணாடியாக சொல்கின்ற ஒரு கலைஞன் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். நாட்டில் 1978 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் என்பது சிங்கள, தமிழ் இளைஞர்களை மிக மோசமாக பாதித்திருந்தது. இன்று…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

ஆடி அமாவாசை தினத்தை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துக – ரவிகரன்

ஆடி அமாவாசை தினத்தை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துக – ரவிகரன் எம்.பி கோரிக்கை; கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்கிறார் –  அமைச்சர் ஹினிதும சுனில் செனவி இந்துக்களின் புனித நாளான ஆடி அமாவாசை தினத்தை அரச பொதுவிடுமுறை நாளாக பிரகடனப்படுத்துமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரின் குறித்த கோரிக்கையை உரியவகையில் பரிசீலித்து, விரைவில் முடிவை அறிவிப்பதாக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி பதிலளித்துள்ளார். பாராளுமன்ற குழு அறையில் 09.06.2026இன்று இடம்பெற்ற புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள்பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

பாடல் பாடியதால் கைது இல்லை; விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் பதிவே காரணம்

கிளிநொச்சி இளைஞன் மேடையில் பாடல் பாடியதற்காக கைது செய்யப்படவில்லை.  விடுதலை புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் வார்த்தைகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்த காரணத்தால் தான்  கைது செய்யப்பட்டார்.  பேச்சு சுதந்திரம் என்று குறிப்பிட்டுக்கொண்டு முறையற்ற வகையில் செயற்பட கூடாது  என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகால சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வோம் என்று நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை  நிறைவேற்றுவோம். பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்து அதற்கு பதிலாக புதிய சட்டமொன்றை இயற்றுவதற்கான நடவடிக்கைகள் நிறைவடையும் கட்டத்தில் உள்ளன. இன்னும் ஓரிரு மாதங்களில் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும். மேடையில் பாடல் பாடியதற்காக தமிழ் இளைஞர் கைது செய்யப்பட்டதாக எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஒருவர்…

மேலும் படிக்க