சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

குமுதினி படகு படுகொலையின் 40-ஆம் ஆண்டு நினைவு நாள்

1985ஆம் ஆண்டு மே மாதம் பதினைந்தாம் திகதி குமுதினிப் படகு வழமைபோல தனது சேவையை ஆரம்பித்தது. அன்று ஏறக்குறைய அப்படகில் அறுபதிற்கும் மேற்பட்ட பயணிகள் பிரயாணம் செய்தார்கள். நெடுந்தீவுத் துறைமுகத்திலிருந்து  குறிகாட்டுவான் நோக்கி வந்துகொண்டிருந்த சமயம் நயினை நாகபூசணி அம்மன் ஆலயம் அமைந்துள்ள நயினாதீவில் முகாமிட்டிருந்த கடற்படையினரின் இரண்டு பீரங்கிகள் பொறுத்தப்பட்ட விசைப்படகுகள் குமுதினிப் படகினை அண்மித்த போது அதில் பயணித்த மக்கள் அச்சம் கொள்ளத் தொடங்கினர். அவ்விரண்டு விசைப்படகுகளில் கடற்படையினர் தங்களுடன் கோடரி, கத்தி, அரிவாள் போன்ற கூரிய ஆயுதங்களையும் எடுத்து வந்திருந்தனர். இதைப் பார்த்த மக்கள் செய்வதறியாது கதறி அழுதார்கள். வந்த கடற்படையினர் குமுதினிப் படகினுள் மூன்று மாதக் குழந்தை உட்பட அனைத்துப் பயணிகளையும் ஒவ்வொருவராகக் கீழ்த்தளத்திற்கு அழைத்து மற்றவர்கள் அறியாமல் தாங்கள் எடுத்து வந்த கூரிய ஆயதங்களினால் வெட்டிக் கொன்றனர். கடற்படையின் இத்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

யாழ் செம்பியன்பற்று பகுதியில் மணல் கடத்தல்

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் சம்பவம் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அப்பகுதி வாழ் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். செம்பியன் பற்று பகுதியில் மக்கள் குடியிருப்புகள் நடுவிலேயே இவ்வாறு மணல் கொள்ளை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது கிராமப் பகுதியில் அதிகமாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடங்களுக்காக, அனுமதி கொடுக்கப்படாத நிலையில், சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது. இவ்வாறு மணல் கொள்ளை தொடர்ந்தால், இக் கிராமப் பகுதியில் பாரிய நீர்த்தேக்கம் ஏற்பட்டு மழைக்காலத்தில் உயிர் சேதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். ஒளிப்படம் சமூக வலைத்தளம்  

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

மாணவி வித்தியா படுகொலை 10 ஆண்டுகள் நிறை கவனயீர்ப்பு போராட்டம்.

புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்தன. இந்த மாணவிக்கு நிகழ்ந்த கொடூரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொதுவாக பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று (13) வேலணை சந்தியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டது. இப் போராட்டத்தினை சமூக மட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து முன்னெடுத்தன. இதில் சமூக மட்ட அமைப்பினர், கல்விமான்கள், கட்சி சார்ந்தவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பறையொலி எழுப்பி, “பாலியல் வன்புணர்வுக்கு எதிராக ஒன்றிணைவோம், பாலியல் வன்புணர்வுக்கு எதிரான நீதிக்கு சட்டவாக்கத் துறையே கவனம் செலுத்து, பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மௌனத்தை கலைப்போம், பாலியல் வன்கொடுமைக்கு நீதி வேண்டும், பெண்களை இழிவுபடுத்தாத ஊடகங்கள் வேண்டும், ஊடகங்களே பாலியல் வன்கொடுமைகளை பாதுகாக்காதே, பாலியல் சுரண்டல்களின் கதவுகளை மூடுவோம், உரிமையின் எல்லைகளை…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வல்வெட்டித்துறை நகரில்  முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

வல்வெட்டித்துறை நகரில்  முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்! – நேற்றைய தினம் 12.05.2025  வல்வெட்டித்துறை நகரில் தமிழ் மக்களிடத்தில் அரிசி பெற்றுக்கொள்ளப்பட்டு தமிழனப்படுகொலையை நினைவுகூரும் முகமாக படுகொலை செய்யப்பட்ட எம் தமிழ்ச்சொந்தங்களை நினைவேந்தி.முள்ளிவாய்க்கால் கஞ்சி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் உணர்வுபூர்வமாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.      

மேலும் படிக்க
காணொளி 

வரலாற்றிலிருந்து மாமனிதர் சிவநேசன் அவர்கள்

  மாமனிதர் சிவநேசன் அவர்கள் சர்வதேச சமூகம் தமிழர்களுக்கான தீர்வு தொடர்பக அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் தமிழ் மகள் என்ன செய்யவேண்டும் என்பது பற்றி இறுதியாக த.தே.தொ இல் நிலவரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கு.வீரா மற்றும் எழிலன் அவர்களுடன் தீர்க்கதரிசனமாக அன்று பகிர்ந்துகொண்ட கருத்துக்கள்

மேலும் படிக்க
காணொளி 

துவாரகா பிரபாகரன் 38வது அகவை நாள் வாழ்த்துக்கள்

தலைமகள் துவாரகா பிரபாகரன் 38வது அகவை நாள் வாழ்த்துக்கள். தலைமகள் துவாரகா பிரபாகரன் 38வது அகவை நாள் வாழ்த்துக்கள். மதிப்பிற்குரிய .அய்யா பழ நெடுமாறன் மற்றும் உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் வாழ்த்து.ச் செய்திகள்

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

மாவீரர் லெப்.சங்கர் அவர்களின் தந்தை இன்று காலமாகியுள்ளார்

தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் கூர்ந்து கவனிப்பதற்கு முதலாவது அத்திவாரக் கல்லாய் அமைந்த உறுதி மிக்க போராளி மாவீரர் லெப். சங்கர் அவர்களின் தந்தை இன்று பிரித்தானியாவில் காலமாகியுள்ளார் அவருக்கு எமது புகழ்வணக்கம் மாவீரர் லெப்.சங்கர்  

மேலும் படிக்க
செய்திகள் 

கொத்மலை விபத்தில் காயமடை ந்தவர்களை நேரில் பார்வையிட்ட பிரதமர்!

நுவரெலியா கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்று கம்பளை வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார் இதன் போது அங்கு சென்ற பிரதமர் காயமடைந்தவர்களின் நலத்தினை விசாரித்ததோடு வைத்தியசாலையில் செயலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் மற்றும் வசதிகள் குறித்தும் ஆராய்ந்தார் இதேவேளை அமைச்சர் பிமல் ராமநாயக்கவும் சென்றிருந்தார். சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இது போன்ற வாகன விபத்துக்களினால் ஒவ்வொரு வருடமும் உயிர்ழப்புகள் ஏற்படுகின்றமை பாரிய பிரச்சினையாக மாரியுள்ளது என்பது எமக்கு தெரியும் இதனை தடுப்பதற்கு போக்குவரத்து அமைச்சர் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பின் தங்கிய பிரதேசமாக இருந்தாலும் வைத்திய சேவையினை வழங்குகின்றமை தொடர்பில் அவர்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும் இதேவேளை மீட்பு பிரிவினருக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன்.…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம்

சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக பௌர்ணமி தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், தையிட்டியில் மக்களின் காணிகளை அடாத்தாக பிடித்து பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் அந்நிலையில் இன்றைய தினமும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி முற்றத்தில் சிரமதானப்பணி

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவு வாரம் தொடங்க இருக்கும் நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 11.05.2025 அன்று முள்ளிவாய்க்கால் மண் ஊர்மக்களோடு இணைந்து பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி முற்றத்தில் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.  

மேலும் படிக்க