கட்டுரை மருத்துவ குறிப்பு 

Itching (அரிப்பு) – ஒரு Pharmacist ஆக நோயாளிக்கு வழங்க வேண்டிய முழுமையான ஆலோசனை

Itching (அரிப்பு) – ஒரு Pharmacist ஆக நோயாளிக்கு வழங்க வேண்டிய முழுமையான ஆலோசனை ┉┉┉┉┉┉┉┉┉ ┅┅┅┅┅┅┅┅ 1️⃣ முதலில் கேட்க வேண்டிய அவசியமான கேள்விகள் (Assessment) 👉 எந்தக் கிறீமையும் பரிந்துரை செய்வதற்கு முன், நோயாளியிடம் இந்தக் கேள்விகளை கேட்பது கட்டாயம்: 🔹 அரிப்பு தொடர்பான தகவல்கள் * அரிப்பு எங்கு உள்ளது? (கை, கால், உடல், முகம், தனிப்பட்ட உறுப்புகள்) * எத்தனை நாட்களாக இந்த அரிப்பு தொடர்கிறது? * நாள் முழுவதும் உள்ளதா? அல்லது இரவில் அதிகமாக உள்ளதா? * சிவப்பு, சிரங்கு, வீக்கம், புண், சீழ் போன்றவை உள்ளனவா? 🔹 தூண்டுதல் காரணங்கள் * சமீபத்தில் புதிய சோப்பு / டிடர்ஜெண்ட் / வாசனைப் பொருட்கள் பயன்படுத்தியுள்ளீர்களா? * அதிகமாக வியர்வை ஏற்படுகிறதா? * பூச்சி கடித்த வரலாறு உள்ளதா? *…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கண்டி பிரதான வீதியின் இரு பேருந்துகளும் டிப்பர் லொறியும் மோதி கோர விபத்து.!!

இரு பேருந்துகளும் டிப்பர் லொறியும் மோதி கோர விபத்து.!! கொழும்பு கண்டி பிரதான வீதியின் பல்பாத பகுதியில் இன்று (09) இரண்டு பேருந்துகளும் டிப்பர் லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் லொறியின் உதவியாளர் உயிரிழந்தார்.இந்த விபத்தில் லொறியில் பயணித்த மற்றொரு நபரும், இரண்டு பேருந்துகளிலும் பயணித்த சில பயணிகளும் காயமடைந்து கேகாலை மற்றும் மாவனெல்லை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூண்டுலோயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்திலிருந்த பயணிகளே இவ்வாறு காயமடைந்துள்ளன..

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

ஐரோப்பா விளிம்பில் எழுதியவர் ஈழத்து நிலவன்

🜏 ஐரோப்பா விளிம்பில் 🜏 ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ லிவிவ் முதல் வடக்கு அட்லாண்டிக் வரை: ஏவுகணைகள், எண்ணெய் கப்பல்கள் மற்றும் எரிசக்தி ஆயுதங்கள் மேற்கத்திய உலகை நேரடிப் போரின் வாசலுக்கு இட்டுச் செல்லும் விதம் ✦ லிவிவ் மீது தாக்குதல்: நேட்டோவின் வீட்டு வாசலில் ரஷ்யாவின் பாலிஸ்டிக் போர்முறை நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய எல்லைகளிலிருந்து வெறும் 40 மைல் தொலைவில் அமைந்துள்ள உக்ரைனின் மேற்குப் பகுதி தளவாட மையமான லிவிவ் மீது ரஷ்யா நடத்திய இரவு நேரத் தாக்குதல், இந்தப் போரின் இயல்பையே மாற்றியமைத்துள்ளது. இதன் மூலம், நேட்டோவின் கிழக்கு எல்லைக்கருகே சோதனை நிலையிலுள்ள நடுத்தரத் தூர பாலிஸ்டிக் ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்த மாஸ்கோ தயங்கவில்லை என்பதும் வெளிப்படையாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ‘ஒரேஷ்னிக்’ ஏவுகணை, RS-26 ரூபிஷ் தளத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இது…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

அமெரிக்கா இலங்கைக்கு பத்து TH-57 (Bell 206 Sea Ranger) ரக ஹெலிகாப்டர்களை வழங்கும் ஜூலி சங்

இலங்கை விமானப்படைக்கு பத்து TH-57 (Bell 206 Sea Ranger) ரக விமானங்களை அமெரிக்கா இலவசமாக வழங்கவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இந்த விமானங்களுக்காக அமெரிக்கா எந்தக் கட்டணத்தையும் வசூலிக்காது. ‘மேலதிக பாதுகாப்பு தளபாடங்கள் திட்டத்தின்’ (Excess Defense Articles Program – EDA) கீழ் இவை இலங்கைக்கு மாற்றப்படுகின்றதாகவும் டெக்சாஸில் தயாரிக்கப்பட்ட, நம்பகத்தன்மை வாய்ந்த இந்த விமானங்கள் 2026 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கையை வந்தடையுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். டிட்வா சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்களின்போது தேடல் மற்றும் மீட்புப் பணிகளில் விமானங்கள் வகிக்கும் முக்கிய பங்கை சுட்டிக்காட்டி இந்த 10 விமானங்களும் விமானப்படையின் திறனை அதிகரிப்பதோடு, விமானிகளுக்கான பயிற்சிகளையும் மேம்படுத்த உதவுமென தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்கா இலங்கைக்கு பத்து TH-57 (Bell 206 Sea Ranger) ரக ஹெலிகாப்டர்களை இலவசமாக வழங்கவுள்ள…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

ஒலுவில் மீனவர் துறைமுகம்,கடலரிப்பு தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

ஒலுவில் மீனவர் துறைமுகம், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் நிகழ்ந்துள்ள கடலரிப்பு தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,பணிப்புரை வழங்கியுள்ளார். பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா ஆகியோருக்கே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் தலைமையில் நடந்த பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்திலே ஜனாதிபதி இவர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெவ்வையும் கலந்துகொண்டிருந்தார்.இங்கு கருத்து தெரிவித்த அவர்; ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்டதால் ஒலுவில், நிந்தவூர் பிரதேசங்களில் உறுதிக் காணிகளில் அமைந்திருந்த தென்னந்தோட்டங்கள் கடலுக்குள் சென்றுள்ளன. இக்காணிச் சொந்தக்காரர்களுக்கு இதுவரையும் எவ்விதமான நஷ்டஈடுகளும் வழங்கப்படவில்லை.வெள்ளம் ஏற்படும் காலங்களில் ஒலுவில், நிந்தவூர், காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை மற்றும் மருதமுனை வரை…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

நம்பிக்கையின் சரிவு: ஐரோப்பா, ரஷ்யா மற்றும் புதிய பனிப்போர் மோதலின் எழுச்சி.

நம்பிக்கையின் சரிவு: ஐரோப்பா, ரஷ்யா மற்றும் புதிய பனிப்போர் மோதலின் எழுச்சி எழுத்துருவாக்கம்.ஈழத்து நிலவன் ⧉════════❁════════⧉ ✦ நெருக்கடிக்குள்ளாகும் புவிசார் அரசியல் ஒழுங்கு சர்வதேச அமைப்பு இன்று ஒரு தீர்மானமானதும் ஆபத்தானதும் ஆன கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. மூத்த ரஷ்ய அதிகாரிகளின் கூற்றுகள், நேட்டோ (NATO) கூட்டணிக்குள் விரிவடையும் பிளவுகள், ஆக்ரோஷமான கடல்சார் நடவடிக்கைகள், மேலும் பொருளாதாரமும் சட்டமும் ஆயுதங்களாக மாற்றப்படுதல் ஆகியவை — சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு புதிய பனிப்போர் முன்னுதாரணத்தின் எழுச்சியைச் சுட்டிக்காட்டுகின்றன. இந்தப் புதிய மோதல் காலம், அதன் பழைய பனிப்போர் முன்னோடியை விட அதிகமாகக் கொந்தளிப்பானதாகவும், சட்ட ரீதியாகத் தெளிவற்றதாகவும், பொருளாதார ரீதியாகச் சிக்கல்களால் நிரம்பியதாகவும் உள்ளது. இந்த மாற்றத்தின் மையத்தில், ரஷ்யாவின் வளர்ந்து வரும் அரசியல்–இராணுவக் கோட்பாடு நிலைகொள்கிறது. மேற்கத்திய அழுத்தங்களை வெளிப்படையாக நிராகரிக்கும், மேற்கத்திய தந்திரங்களைத் திரும்பப் பயன்படுத்தும், மேலும்…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

அமெரிக்கா ரஷ்ய எண்ணெய் கப்பலை சிறைபிடித்தது: வடக்கு அட்லாண்டிக் கடலில் உச்சக்கட்ட மோதல்

அமெரிக்கா ரஷ்ய எண்ணெய் கப்பலை சிறைபிடித்தது: வடக்கு அட்லாண்டிக் கடலில் உச்சக்கட்ட மோதல் ⧉════════❁════════⧉ ╭──────────────────────╮ எழுத்துருவாக்கம்✒️ ஈழத்து நிலவன் ╰──────────────────────╯ 08/01/2026 ✦ சம்பவம்: சர்வதேச கடல் பகுதியில் ‘மெரினேரா’ (Marinera) சிறைபிடிப்பு வடக்கு அட்லாண்டிக் கடலில் ரஷ்யக் கொடியுடன் பயணித்த மெரினேரா (முன்னர் பெல்லா 1) எண்ணெய் கப்பலை அமெரிக்கா சிறைபிடித்துள்ளது. வெனிசுலா கடற்கரையில் தொடங்கி பல வாரங்களாகத் தொடர்ந்த விரட்டல் நடவடிக்கையை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) இராணுவ உதவியுடன் முன்னெடுத்தது. வெனிசுலாவின் மதுரோ அரசு தொடர்புடைய தடைகளை மீறி எண்ணெய் கொண்டு சென்றதாகக் குற்றச்சாட்டுகள் இருந்த இந்தக் கப்பல், பயணத்தின் பாதியிலேயே பெயரை மாற்றி ரஷ்யக் கொடியைப் பூசி, அந்த நாட்டில் பதிவு செய்யப்பட்டது. ரஷ்யா இதனை சர்வதேச சட்டப்படி சட்டபூர்வமாகச் செயல் படுத்தப்பட்டது எனக் கூறுகிறது. மாஸ்கோ, அமெரிக்காவின்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

முள்ளிக்குளம் கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்திய ரவிகரன் ஜனாதிபதியும், கடற்படையும் இணக்கம்

கடற்படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள முள்ளிக்குளம் கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்திய ரவிகரன் எம்.பி; ஜனாதிபதியும், கடற்படையும் இணக்கம் கடற்படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள முள்ளிக்குளம் கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்திய ரவிகரன் எம்.பி; ஜனாதிபதியும், கடற்படையும் இணக்கம் கடற்படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள மன்னார் – சிலாவத்துறை பிரதேசசெயலாளர்பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தினை விடுவிப்புச்செய்வதுடன், தமது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியமர்வதற்கு காத்திருக்கும் முள்ளிக்குளம் கிராமமக்களை மீள்குடியமர்த்துவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் முள்ளிக்குளத்தில் கடற்படையின் ஆக்கிரமிப்பிலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு கடற்படை இணக்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு எதிர்வரும் 15ஆம் திகதி தாம் மன்னாருக்கு வருகைதரும்போது குறித்த முள்ளிக்குளம் காணிவிடுவிப்பு தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதியினாலும் பதில் வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றக்கட்டடத் தொகுதியில் 07.01.2026நேற்று ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டம் இடம்பெற்றது.…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

சுன்னாகம் சந்தியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விகாரைப் பெயர்ப்பலகை அகற்றப்பட்டுள்ளது.

சுன்னாகம் சந்தியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விகாரைப் பெயர்ப்பலகை வலிகாமம் தெற்குப் பிரதேச சபையினால் இன்றைய தினம் அகற்றப்பட்டது. வலிகாமம் தெற்குப் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, ‘கந்தரோடை விகாரை’ எனப் பொறிக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகை இன்றைய தினம் அகற்றப்பட்டுள்ளது. குறித்த இடத்தை ‘கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்’ என அடையாளப்படுத்துவதே மிகவும் பொருத்தமானது என சபையில் எடுக்கப்பட்ட முடிவிற்கு அமையவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அகற்றப்பட்ட பெயர்ப்பலகை காணப்பட்ட அதே இடத்தில், ஒல்லாந்தர் காலத்தில் அமைக்கப்பட்ட சந்தைக் கட்டடத் தொகுதியின் வரலாற்றுச் சிறப்பம்சங்களை விபரிக்கும் வகையிலான புதிய கல்வெட்டுப் பெயர்ப்பலகை ஒன்று மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலச் சந்ததியினருக்குச் சரியான வரலாற்றைக் கொண்டு செல்லும் நோக்கிலேயே இந்தப் புதிய பெயர்ப் பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

யாழில், பேரழிவை ஏற்படுத்தும் கனமழை; கிழக்கிலும் அவதானமாக இருக்கவும்

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேலான மழை பெய்யுமென, யாழ்.பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். இதனால், யாழ் மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத அளவு பாதிப்புக்களை சந்திக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு குறித்து பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் வகையில்,நேற்று (07) ஊடக சந்திப்பு நடத்தப்பட்டது.யாழ்.ஊடக மையத்தில் நடத்தப்பட்ட இச்சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது; உருவாகியுள்ள தாழ்வு மண்டலமானது நாட்டின் கிழக்கு கடற்கரையை நோக்கி மணிக்கு 09 கிலோமீற்றர் வேகத்தில் நகரவுள்ளது. இதனால் 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுnkன எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக,1970 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜனவரி மாதத்தில் உருவாகியுள்ள 21 ஆவது தாழ்வுமண்டலமாக இது அமைகிறது. இதன் நகர்வுப் பாதை கடல் பகுதியாக இருந்தாலும் வடக்கு நோக்கி…

மேலும் படிக்க