இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

39 நாடுகளுக்கு இலங்கையின் இலவச சுற்றுலா விசா..!

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், தெரிவுசெய்யப்பட்ட 39 நாடுகளின் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்களுக்கு 6 மாத காலத்திற்கு இலவச சுற்றுலா விசா வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு 2025 ஜூலை 21 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ், இலவச விசா வழங்குவதற்கான சட்ட வரைவுகள் சட்ட ஆலோசகரால் தயாரிக்கப்பட்டு, பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளன. இந்த முன்மொழிவு பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அமைச்சரவை அதற்கான அனுமதியை அளித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து, இலங்கையை உலகின் முன்னணி சுற்றுலா இலக்குகளில் ஒன்றாக வலுப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்குள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் ஏடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

போரின் விளிம்பில்: ஈரான்–அமெரிக்க மோதல் – கலப்புப் போரின் புதிய கட்டம்

போரின் விளிம்பில்: ஈரான்–அமெரிக்க மோதல் – கலப்புப் போரின் புதிய கட்டம் ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ விளிம்பில் ஒரு பிராந்தியம்: நிழல் யுத்தத்திலிருந்து நேரடி இராணுவ மோதல் வரை ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கிடையேயான மோதல், நீண்டகால “நிழல் யுத்தம்” (Shadow War) நிலையிலிருந்து வெளிப்படையான, பல்துறை இராணுவ மோதலாக வேகமாக மாறியுள்ளது. முன்பு பிரதிநிதி போர்கள் (Proxy Wars), இணையவழித் தாக்குதல்கள் மற்றும் மறைமுக நடவடிக்கைகளால் மட்டுமே வரையறுக்கப்பட்ட இந்த மோதல், இப்போது மூலோபாய குண்டுவீச்சுகள், பெரிய அளவிலான படை நிலைநிறுத்தங்கள் மற்றும் நேரடி தரைப்போர் சாத்தியங்களைக் கொண்ட ஒரு ஆபத்தான கட்டத்துக்குள் நுழைந்துள்ளது. இந்த தீவிரமடைந்த பதற்றத்தின் மையத்தில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வடபகுதி கடற் பரப்பு க்களில் அதிகரித் துள்ள இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்.ரவிகரன்

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களை கடற்படையினர் கட்டுப்படுத்த தவறுவதாக ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு; கண்காணிப்பு கருவிகள் பழுதடைந்துள்ளனவா எவும் கேள்வி எழுப்பினார். முல்லைத்தீவு உட்பட வடபகுதி கடற்பரப்புக்களில் அதிகரித்துள்ள இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளை கடற்படையினர் கட்டுப்படுத்த தவறுவதாக குற்றஞ்சாட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கடற்படையினரது கண்காணிப்புக் கருவிகள் பழுதடைந்துள்ளனவா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் தொடர்பாக தம்மால் கண்காணிக்கப்படுவதாகவும், அத்தகைய அத்துமீறல்களுக்கெதிரா தம்மால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கடற்படை அதிகாரி பதிலளித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 31.03.2026நேற்று கடற்றொழில் அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற, சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டத்திலேயே குறித்த விடயம் பேசப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வடக்கு கடற்பரப்புக்களில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக இந்திய இழுவைப் படகுகள்…

மேலும் படிக்க