தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

அர்ச்சுனா கஜேந்திரகுமார் இடையே. கடுமையான வாக்குவாதங்கள்

வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக்குழு கூட்டம் வலி.வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக் குழுத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது தெல்லிப்பழை வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவு மற்றும் வைத்தியசாலை ஆகியவற்றை மத்திய அரசின் கீழ் கொண்டு வந்து அதனை மேம்படுத்தி மக்களுக்கு சேவை வழங்குவது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது. அத்துடன் தையிட்டி விகாரை, போக்குவரத்து விடயங்கள், காணிகளை விடுவித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இருவருக்கும் இடையில் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை தொடர்பில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன. அத்துடன் தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என்ற விடயத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் இராமநாதன் அர்ச்சுனா ஆகியோருக்கு இடையிலும் பலத்த வாக்குவாதங்கள் ஏற்பட்டன. குறிப்பாக இராமநாதன் அர்ச்சுனா, மிகக்கடுமையாக ஏக வசனங்களை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கொட்டகலை திருமண மண்டப மோதல்: விலக்க சென்ற பொலிஸார் மீது தாக்குதல்

தலவாக்கலை — வட்டகொட பகுதியைச் சேர்ந்த குழுவினர் கொட்டகலை நகரில் உள்ள மண்டபம் ஒன்றில் நேற்று (17) திருமண விழா ஒன்றை நடத்தியுள்ளனர். இதன்போது, மாலை 4.00 மணியளவில் திருமணத்திற்கு வந்திருந்த, மதுபோதையிலிருந்த இருதரப்பினரிடையே பயங்கர மோதல் வெடித்துள்ளது. அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாகச் சென்று மோதலைச் சமரசம் செய்ய முயன்றுள்ளனர். எனினும், மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரும் ஒன்றாக இணைந்து அந்த இரு பொலிஸ் அதிகாரிகளையும் தாக்கியுள்ளனர். இதனையடுத்து, காயமடைந்த அதிகாரிகளை மீட்கத் திம்புள்ளை-பத்தனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் மேலதிக பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால், வன்முறைக் கும்பல் அவர்களையும் விட்டுவைக்காமல் தாக்குதல் நடத்தியுள்ளது. பொலிஸார் கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் தாக்குதலுடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்களைக் கைது செய்தனர். பொலிஸார் தாக்கப்படுவதைக் கண்ட கொட்டகலை நகர மக்கள் உடனடியாகச்…

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட. அமெரிக்க ஜனாதிபதி

மேற்கு ஆசிய போரை முடிவுக்கு கொண்டுவரும் அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதியுடனான இரவு விருந்தின்போதே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்று சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. ஜி7 உச்சிமாநாட்டை தொடர்ந்து வெர்சாய் அரண்மனையில் மெக்ரோனுடன் இரவு உணவு அருந்தியபோது, ​​டிரம்ப் தனிப்பட்ட முறையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மின்னணு முறையில் கையொப்பமிடப்பட்டுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயியும் உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

ஜெயபுரம் பகுதியில் நிரந்தரமான நீதிமன்றம் அமைப்பதற்கு சுமார் மூன்று ஏக்கர் காணி

கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி நகர பகுதியிலேயே நீதிமன்றங்கள் காணப்படுகின்றன. இதனால் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முழங்காவில் மற்றும் ஜெயபுரம் ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட மக்கள் நீதிமன்றங்களுக்கு சென்று வருவதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு 2019ஆம் ஆண்டில் இருந்து குறித்த பகுதியில் நீதிமன்றம் ஒன்றினை நிறுவுவதற்கு பிரதேச செயலகத்தினால் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன.மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் அடிப்படையில் ஜெயபுரம் பகுதியில் நிரந்தரமான நீதிமன்றம் அமைப்பதற்கு சுமார் மூன்று ஏக்கர் காணி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அடையாளப்படுத்தப்பட்ட காணி வன வள பகுதியினரின் ஆளுகைக்கு உட்பட்டதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளமையால், குறித்த காணியினை நீதிமன்றம் அமைப்பதற்கு பெற்றுக் கொள்வது தொடர்பான ஒன்றிணைந்த கூட்டுக்களவிஜயம் நேற்றைய தினம் (15.06.2026) இடம்பெற்றது.இக்களவிஜயத்தில் கெளரவ மேல் நீதிமன்ற நீதிபதி, கெளரவ மாவட்ட நீதிமன்ற நீதிபதி, பிரதேச செயலாளர், மாவட்ட வன வள அதிகாரி,…

மேலும் படிக்க
புலச் செய்திகள் பொதுவான செய்திகள் 

இறுதிப் போரில் பணியாற்றிய வைத்திய அதிகாரி வரதராஜா!அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

இறுதிப் போரில் பணியாற்றிய வைத்திய அதிகாரி வரதராஜா! வன்னியில் இறுதிப் போரில் மக்களுடன் இறுதிவரை நின்று பணியாற்றிய வைத்தியர் வரதராஜா கடுமையான உடல் நிலைப்பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புலம்பெயர்ந்து கனடாவின் ரொறொன்டோவில் வசித்துவரும் வைத்தியர் வரதராஜா சில நாட்களுக்கு முன்னர் கடுமையான இருதயப் பிரச்சினைக்கு உள்ளாகியுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைக் காப்பாற்றும் முயற்சியில் வைத்தியர்கள் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் தன்னுடைய கணவர், கடுமையான இருதயப் பிரச்சினையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்காக பிரார்த்திக்குமாறும் அவருடைய மனைவி முகநூல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இறுதிப்போரில் வாகரையிலும் பின்னர் வன்னியிலும் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய வைத்தியர் வரதாஜா மே மாதம் 15 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் கிழக்கில் தாக்குதல் சம்பவம் ஒன்றில் படுகாயம் அடைந்திருத்தார். பின்னர் இராணுவக் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட போது…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வீட்டுத் திட்ட பயனாளிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு

வீட்டுத் திட்ட பயனாளிகளுக்கானகாசோலை வழங்கும் நிகழ்வு 2026 ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வும் 2025 ஆம் ஆண்டு வீடமைப்பு வழங்கப்பட்டவர்களுக்கான ஆவணம் வழங்கும் நிகழ்வும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று (16) பி. ப. 3.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டீ.பி சரத், சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான கருணநாதன் இளங்குமரன், ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், சண்முகநாதன் சிறிபவானந்தராஜா பங்குபற்றினார்கள். இந் நிகழ்வில் அரசாங்க அதிபரின் தலையுரையினைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரனின் கருத்துரை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டீ.பி சரத்தினால் சிறப்புரையாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்டத்தில்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வவுனியாவில் பட்டா வாகனத்தில் லொறி மோதி விபத்து; இருவர் பலி

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின்  வவுனியா – பூனாவ, கல்கண்டேகம பகுதியில் இன்று (17) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பூனாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுரைச்சோலையிலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற பட்டா வாகனம் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், பின்னால் வந்த உரம் ஏற்றிய லொறி அதனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோதிய பின்னர் குறித்த லொறி பட்டா வாகனத்தின் மீது கவிழ்ந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 43 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூனாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மருதமுனைக்கு தனியான நகரசபை வேண்டும்- பள்ளிவாசல்கள் அமையம்!

மருதமுனைக்கான தனியான நிர்வாக அலகு வேண்டும்.அதிகாரப் பகிர்வின் ஊடாக இதனைப் பெற்று இன்னும் எங்கள் மக்களின் தேவைகளை சிறப்பாகச் செய்ய வேண்டும் என மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் அமைய செயற்பாட்டாளர்   எம்.ஐ.எம். முஹர்ரப் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் மருதமுனை பிரதேசத்திற்கான தனியான நகர சபையை வலியுறுத்தி விசேட ஊடகவியலாளர் மாநாடு ஒன்றினை செவ்வாய்க்கிழமை(16) இரவு  மருதமுனை தனியார் விடுதியில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவ் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அமையத்தின் செயற்பாட்டாளர்களான   பொறியியலாளர் எம்.எஸ்.எம். பஸீல் மற்றும்  சட்ட ஆலோசகர் சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம் ஆகியோர் கலந்து கொண்டு தத்தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர். இதன் போது   கருத்து தெரிவிக்கையில் மருதமுனைக்கான தனியான நிர்வாக அலகு வேண்டும்.இதைப் பெறுவது எமது தார்மீக உரிமையாகும். எங்களிடம் நிர்வாக ஆளணிகள் உள்ளன.அதிகாரப் பகிர்வின் ஊடாக இதனைப் பெற்று இன்னும் எங்கள்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

செல்வம் பொறுப்பில் இருக்கும் வரை ரெலோவை புறக் கணியுங்கள் – வியஜபவானந்தா எதிர்ப்பு

கட்சியின் யாப்புக்கு எதிராக செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ரெலோ இருக்கும் வரை அக்கட்சியின் எத்தகைய செயற்பாடானாலும் சரி அனைத்திலும் ரெலோவைப் புறக்கணியுங்கள் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜபவானந்தா தமிழ் மக்களிடம் கேட்டுள்ளார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜபவானந்தா இன்றையதினம் யாழில் ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்திருந்தார்.இதன்போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் – சில சில்லறைகளின் சில்லறைத்தனமான செயற்பாடுகளால் இனவிடுதலைக்காக போராடிய பெரும் அமைப்பு சீரழிந்துவிட்டது. குறிப்பாக பாலியல் வியாபாரியான இன்றைய ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் செயற்பாடுகளே கட்சி நலிவடைந்து போக பிரதான காரணமாகின்றது. கட்சியின் மூத்த உறுப்பினர் ஜெயராம் சுரேஸ் கொலையிலும் செல்வத்தின் செயற்பாடுகள் உள்ளதாகவே கருதவேண்டியுள்ளது. அது மட்டுமல்லாது அதற்கான சான்றுகளும் வலுவாக இருக்கின்றது. பாலியல் விவகாரத்தில் சிக்குண்ட…

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

அமெரிக்காவின் B-52 அடுக்குக்குண்டு வீச்சு போர் விமானம் விபத்து

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள எட்வர்ட்ஸ் விமானப் படைத் தளத்தில் (Edwards Air Force Base), அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான B-52 அடுக்குக்குண்டு வீச்சு போர் விமானம் (B-52 Stratofortress Bomber) விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.ஜூன் 15, 2026 அன்று காலை 11:20 மணியளவில் (உள்ளூர் நேரம்) இந்த கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது 1950-களிலிருந்து அமெரிக்க விமானப்படையின் மிக முக்கிய தூணாக விளங்கும் B-52 ரக விமானங்கள், வரலாற்றில் சந்தித்த மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. கடைசியாக 2016-ஆம் ஆண்டு குவாம் (Guam) தீவில் இத்தகைய விமானம் விபத்துக்குள்ளானது, ஆனால் அதில் இருந்த 7 வீரர்களும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்தின் முக்கிய விவரங்கள்: வழக்கமான சோதனை ஓட்டம்: இந்த விமானம் அதன் ரேடார் அமைப்பை நவீனமயமாக்கும் திட்டத்தின் (AESA…

மேலும் படிக்க