தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

அருச்சுனாவின் காணியால் மக்கள் தினமும் பல்வேறு அவஸ்தைகளுக்கு உள்ளாவதாக குற்றம்சாட்டு

வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் ஆளுகைக்குள் காணப்படும் பெரியவிளான் பகுதியில் உள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவின் காணியால் மக்கள் தினமும் பல்வேறு அவஸ்தைகளுக்கு உள்ளாவதாக குற்றம்சாட்டப்பட்டது. வலி. தென்மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் நடைபெற்றது. இதன்போது பெரியவிளான் வட்டார உறுப்பினரான எட்வேட் மரியவாசினி குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில், பெரியவிளானில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் காணியில் பற்றைகள் வளர்ந்துள்ளன. அங்கிருந்து பாம்புகள் வெளியே வந்து அருகில் இருக்கின்ற மக்களின் குடிமனைகளுக்குள் செல்கின்றது. இதனால் மக்கள் தினம்தினம் அச்சத்தில் வாழ்கின்றனர். ஒவ்வொரு நாளும் ஆறு ஏழு பாம்புகள் அங்கிருந்து வெளி வருகின்றன. இதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தவிசாளர் க.ஜெசீதன், பாதீனியம் உள்ள எத்தனை காணிகளுக்கு எதிராக வழக்கு…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

பலாலி விமான நிலையத்திற்கு வடக்கில் இருந்து அதிக பணியாளர்கள்! வடக்கு மாகாண ஆளுநர்

பலாலி விமான நிலையத்திற்கு வடக்கில் இருந்து அதிக பணியாளர்களை நியமிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.இன்றையதினம் பலாலி விமான நிலையத்திற்கு அமைச்சர்கள் குழாமுடன் விஜயம் செய்து, அபிவிருத்தியை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் பலாலி விமான நிலையத்திற்கு விமான துறை சார்ந்த பணியாளர்களை வடக்கில் இருந்து அதிகளவாக நியமித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்ற செயற்பாடுகளுக்காக விமானத்துறை அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் வருகை தந்து ஆளுநர் செயலகத்தில் கூட்டம் ஒன்றினையும் நடாத்தி இருந்தனர். அதன் பின்னர் பலாலி சர்வதேச விமான நிலையத்தையும் பார்வையிட்டனர். பலாலி விமான நிலையத்தின் விஸ்தரிப்பு மற்றும் வசதிகள் போதாமல் உள்ளமை தொடர்பாக அந்த இடங்களை பார்வையிட்டு, அபிவிருத்திகளை விரைவுபடுத்தல் போன்றன பற்றியும் இங்கே கலந்துரையாடினார்கள்.சர்வதேச விமான நிலையமாக இருக்கின்ற…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கை ஜனாதிபதி மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரசுமுறைப் பயணமாக இந்தியா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான தீர்க்கமான இருதரப்புப் பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில், புதுடில்லியில் நடைபெற்று வரும் ‘செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில்’ (AI Impact 2026) பங்கேற்பதற்காக ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார். இந்த உச்சிமாநாட்டின் ஒரு அங்கமாகவே இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலின் போது, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளைப் புதிய தளத்திற்கு இட்டுச் செல்வது குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது. அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார பிணைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு குறித்தும் தலைவர்கள் கவனம் செலுத்தவுள்ளனர். குறிப்பாக,…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 தமிழக மீனவர்கள் நேற்றிரவு கைது

இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பு அருகே 12 இராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு படகுகளுடனும் மன்னார் கடற்பரப்பில் 10 இராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு படகுகளுடனும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இவர்கள் இன்றைய தினம் ஊர்காவற்றுறை மற்றும் மன்னார் நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கொழும்பை புறக்கணித்து பெருந்தோட்டத்திற்கு படையெடுக்கும் மலையக இளைஞர்கள்!

கொழும்பை புறக்கணித்து பெருந்தோட்டத்திற்கு படையெடுக்கும் மலையக இளைஞர்கள்! கொழும்பு உணவகங்களில் (Hotels) பணிபுரிந்த பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த பலர் தங்களது வேலைகளைக் கைவிட்டு மீண்டும் பெருந்தோட்ட வேலைகளுக்கே சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் உணவகங்களை நடத்திச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டதே இதற்குக் காரணம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பெருந்தோட்டத் தொழிலாளி ஒருவரின் நாளாந்த ஊதியத்தை 1,750 ரூபாவாக உயர்த்த அரசாங்கம் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது. பொரள்ளை மற்றும் மருதானை உள்ளிட்ட கொழும்பின் பல உணவகங்களில் பணியாளர்கள் (Waiter), சமையல் கலைஞர்கள் (Chef) உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களில் பெரும்பாலானோர் பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், தற்போது அவர்கள் அதிக ஊதியம் காரணமாக மீண்டும் தோட்ட வேலைகளுக்கே சென்றுள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வடக்கில் இந்துநாகரீம் மற்றும் சங்கீத பாட ஆசிரிய ஆட்சேர்ப்பு விண்ணப்பங்கள் கோரப்படவேண்டும் – ரவிகரன்

வடக்கில் இந்துநாகரீம் மற்றும் சங்கீத பாட ஆசிரிய ஆட்சேர்ப்பு விண்ணப்பங்கள் கோரப்படவேண்டும் – ரவிகரன் எம்.பி வேண்டுகோள்; சமச்சீரற்ற ஆசிரிய வளப் பரவலாக்கத்தை சீர்ப்படுத்துமாறும் வலியுறுத்து. பட்டதாரிகளைஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளபோதும், கர்நாடக சங்கீதம், இந்துநாகரீக பாடங்களுக்கான விண்ணப்பங்கள் வடமாகாணத்தில் இதுவரை கோரப்படவில்லை என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சரும், பிரதமருமான ஹரிணி அமரசூயவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். கர்நாடக சங்கீத பாடத்திற்கு யாழ்ப்பாணத்தில் 81ஆசிரியர்கள் மிகையாக உள்ளபோதும் வன்னியில் 46ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுவதாகவும், அதேபோல இந்துநாகரீக பாட ஆசிரியர்களும் வடமாகாணத்தில் சமச்சீரற்ற விதத்தில் சமச்சீரற்ற விதத்தில் பரவலாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது சுட்டிக்காட்டினார். எனவே வடக்குமாகாணத்தில் நிலவும் இவ்வாறான சமச்சீரற்ற ஆசிரியர் வளப்பரவலாக்கத்தை சீர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமர் ஹரிணி…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

டைனமைட் வெடிபொருள் பாவித்து மீன் பிடியில் ஈடுபட்ட ஒருவர் மீனுடன் கைது

மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக டைனமைட் வெடிபொருள் பாவித்து மீன் பிடியில் ஈடுபட்ட ஒருவர் மீனுடன்  நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளார். ஓலைத்தொடுவாய்  பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக  நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த நபரிடம் இருந்து டைனமைட் வெடிபொருள் பாவித்து பிடிக்கப்பட்ட சுமார் 450 கிலோ மீன் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட மீன், வாகனம் ஒன்றும், மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கிரான் பாலத்தினை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் மட்டு கிரான் பாலத்தினை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கன மழையால் தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்க ஆரம்பித்துள்ளதுடன் போக்குவரத்துப் பாதைகளிலும் நீர் தேங்க ஆரம்பித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முதல் பெய்து வரும் கன மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெரும்போக அறுவடைகள் நடைபெற்றுவருவதன் காரணமாக விவசாயிகள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதையும் காணமுடிகின்றது. அறுவடை செயற்பாடுகள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதுடன் அறுவடை செய்தவர்கள் நெல்லை பாதுகாப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

க.பொ.த சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கு ஆட்பதிவு திணைக்களம் விசேட அறிவிப்பு

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, இதுவரை தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெற்றுக்கொள்ளாத தரப்பினருக்காக ஆட்பதிவுத் திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.drp.gov.lk என்ற தளத்திற்குச் சென்று, குறித்த விபர உறுதிப்படுத்தல் கடிதங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏதேனும் பரீட்சார்த்திகள் இருப்பின், அவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களை வழங்குவதற்காக மாத்திரம் இன்று (14) ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மாகாண அலுவலக கிளைகளை முற்பகல் 8.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை திறந்து வைக்கவும் அத்திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதுவரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத, இம்முறை  க.பொ.த…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ் பல்கலைக்கழக இலச்சினையை அனுமதி இல்லாமல் பயன்படுத்துவது குற்றமாகும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இலச்சினையை அனுமதி இல்லாமல் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும், அனுமதி பெறாமல் இலச்சினையைப் பயன்படுத்தும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கெதராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பல்கலைக்கழகப் பதிவாளர் வி. காண்டீபன் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம், எதிர்வரும் 2026, பெப்ரவரி மாதம், 19,20,21,22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதன் போது பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் பல்கலைக்கழக இலச்சினை பொறிக்கப்பட்ட கழுத்துமாலை, பட்டச் சான்றிதழ் சுருள் மற்றும் பல்கலைக்கழகப் இலச்சினை பொறிக்கப்பட்ட பரிசுப் பொருட்கள் என்பன தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களினால் விற்பனை செய்யப்படுவதாகப் பலகலைக்கழக நிர்வாகம் அறிகிறது. இது சட்டப்படி குற்றச்செயலொன்றாகும். பல்கலைக்கழக மூதவை மற்றும் பேரவையின் அனுமதியுடன், நடைமுறைகளின் ஊடாக பல்கலைக்கழக இலச்சினையைப் பயன்படுவதற்குப் பதிவாளரிடமிருந்து உரிய ஒப்புதல்கள் பெறப்பட வேண்டும்.…

மேலும் படிக்க