தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வடக்கின் பெரும் நீர்ப்பாசனத்தை நசுக்கப் பெரும் சதி – இரணைமடு விவசாயிகள் அமைப்பு போர்க்கொடி!

வடக்கின் பெரும் நீர்ப்பாசனத்தை நசுக்கப் பெரும் சதி – இரணைமடு விவசாயிகள் அமைப்பு போர்க்கொடி! வடக்கின் பெரும் நீர்ப்பாசனமான இரணைமடு நீர்ப்பாசனத்தின் கீழ் இருக்கும் 28 கமக்காரர் அமைப்புகளின் மீது அர்ச்சுனா எம்.பி கூறும் குற்றச்சாட்டுக்களில் உண்மைகள் இல்லை என்று கூறும் கமக்காரர் அமைப்புகளின் தலைவர், குறித்த எம்.பி உண்மைகளை ஆராயாது அரசியல் கதிரையின் மீது கொண்ட ஆசை காரணமாக ஒருதலைப் பட்சமாக கருத்துக் கூறுவதை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறிய அவர் மேலும் கூறுகையில் -கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது இரணைமடு கமக்கார அமைப்புக்களின் நிர்வாகம் பெரும் நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும்,பதிவு செய்யப்படாத அமைப்பு என்றும், பல்வேறு குற்றச்சாட்டுக்களை அர்ச்சுனா எம்.பி முன்வைத்திருந்தார்.அவர் குறித்த கருத்தை கூறும் முன்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தையிட்டி விகாரை அமைப்பு தொடர்பான மூன்று வழக்குக்களுக்கான விசாரணை திகதிகள் பிற்போடப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம், சட்டவிரோத தையிட்டி விகாரை அமைப்பு தொடர்பான மூன்று வழக்குக்களுக்கான விசாரணை திகதிகள் பிற்போடப்பட்டுள்ளன. தையிட்டி விகாரை தொடர்பான வழக்குகள் மல்லாகம் நீதிமன்றில் நேற்று அழைக்கப்பட்டன.இதன்போது ஒரு வழக்கின் விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்கும் ஏனைய இரண்டு வழக்குகள் ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.தனியார் காணி ஒன்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த விகாரையை அகற்றக்கோரி போராடும் மக்களுக்கு எதிராக, பொலிஸார்  இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.இதேவேளை, காணி உரிமையாளர்களும், பொதுமக்களும் ஒவ்வொரு பூரணை தினத்தன்றும் தமது போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வாழ்வோம் வளம்பெறுவோம் கட்டம் 73இல், 61 பயனாளிகள் உள்ளீர்ப்பு.

வாழ்வோம் வளம்பெறுவோம் கட்டம் 73இல், 61 பயனாளிகள் உள்ளீர்ப்பு. வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் முன்னெடுக்கப்படும் வாழ்வோம் வளம்பெறுவோம் செயற்றிட்டத்தின் எழுபத்திமூன்றாம் கட்டமானது கடந்த 23.02.2026 அன்று முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள அவரது மக்கள் தொடர்பகத்தில் முன்னெடுக்கப்பட்டது. இக்கட்டத்தில் தாயகத்தைச் சேர்ந்த 61 குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டு அவர்களுக்கு அரிசிப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், வாழ்வோம் வளம்பெறுவோம் என்ற பெயரிலான செயற்றிட்டமானது குறுங்கால வாழ்வுடமை ஊக்குவிப்பு நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. குறித்த செயற்றிட்டமானது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் கடந்த 17.05.2014 அன்று முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது. அந்தவகையில் நடைபெற்று முடிந்த எழுபத்திமூன்றாம் கட்டத்துடன் இதுவரையில் 3,936 குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன. மேலும் வாழ்வோம் வளம் பெறுவோம் 73ஆம் கட்டத்திற்குரிய நிதி…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் வளிமண்டலவியல் திணைக்களம்

இன்றையதினம் (25) நாட்டின் தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, மொணராகலை, களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய மாகாணங்களிலும் அநுராதபுரம், காலி, மாத்தறை, மொணராகலை, மன்னார், வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.காலியிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை…

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் இறுதிக் கலந்துரையாடல்!

வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் யாழ்ப்பாண  மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன்  தலைமையில் இன்றைய தினம் காலை 09.00 மணிக்கு மாவட்ட செயலக அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மறைமாவட்ட குரு முதல்வர் ஆயர் வணக்கத்துக்குரிய  அருட்தந்தை P.J. ஜெபரட்ணம், வடமாகாண கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே இந்திய துணைத் தூதரக அதிகாரி செல்வி. சி. எஸ். றம்மியா ஆகியோர் பங்குபற்றினார்கள். இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரச அதிபர், வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதற்கான சகல ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான இறுதிக் கலந்துரையாடலாக…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கொழும்பு கோட்டை மற்றும் மட்டக்களப்பு க்கு இடையில்ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

இலங்கை புகையிரத சேவையினால் கொழும்பு கோட்டை மற்றும் மட்டக்களப்புக்கு இடையில் இயக்கப்படும் “மீனகயா” (Meenagaya) இரவு நேர நகரிடை கடுகதி ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையின் விபரங்கள் மார்க்கம்                                                    புறப்படும் நேரம்                   முக்கிய நிலையங்கள் (பொலன்னறுவை)                சென்றடையும் நேரம் கொழும்பு ➔ மட்டக்களப்பு                   இரவு 7.00 மணி         …

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வவுனியா, பறங்கியாற்றுப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு

வவுனியா, பறங்கியாற்றுப் பகுதியில் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த குடும்பஸ்தர் ஒருவர், நேற்று மாலை ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பறங்கியாற்றுப் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். நேற்று அதிகாலை வேளையில் பறங்கியாற்றுப் பகுதிக்குச் சென்ற இவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் கவலையடைந்த குடும்பத்தினர், அயலவர்களுடன் இணைந்து அப்பகுதி முழுவதும் தேடுதலில் ஈடுபட்டனர். இதன்போது, ஆற்றினுள் குறித்த நபர் சடலமாகக் கிடப்பது கண்டறியப்பட்டது.சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் காவல் துறைக்கு.தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, அவர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.குறித்த நபர் தற்செயலாக ஆற்றில் விழுந்து உயிரிழந்தாரா? அல்லது வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பியில் (Electric Trap) சிக்குண்டு உயிரிழந்தாரா? என்ற கோணத்தில்  காவல் துறை.தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சடலம்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

விரைவு ரயிலுடன் கெப் வாகனம் ஒன்று மோதியதில்,இருவர் உயிரிழந்துள்ளனர்.

காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற ‘காலி குமாரி’ விரைவு ரயிலுடன் கெப் வாகனம் ஒன்று மோதியதில், கெப் வாகனத்தில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று (22) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மூவர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 மற்றும் 28 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த ரயில் கடவையில் வர்ண சமிஞ்சை முறைமை சரியாக இயங்கவில்லை எனவும்,  முறையான பாதுகாப்பு கேட் பொருத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது இவ்வாறு ரயிலுடன் மோதிய கெப் வாகனம் அருகில் உள்ள நிர்மாணத் திட்டமொன்றில் பணிபுரியும் ஒருவருடையது என தெரியவந்துள்ள. ரயில் மோதியதையடுத்து கெப் வாகனம் சுமார் 50 மீற்றர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.இந்த விபத்தில் கெப் வாகனத்தின் சாரதி உட்பட மூன்று…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (21) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்ற விபத்து

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (21) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். ஹட்டன் பகுதியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த வர்த்தக லொறி ஒன்று, வட்டவளை சிங்கள பாடசாலைக்கு அருகில் உள்ள பாதாள மதகு ஒன்றிற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.லொறிக்குள் இறுகிய நிலையில் சிக்கிக்கொண்ட சாரதி மற்றும் உதவியாளரை, பொலிஸாரும் பொதுமக்களும் சுமார் 1 மணிநேரம் போராடி மீட்டனர்.காயமடைந்தவர்கள் முதலில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை களைப்பு காரணமாகவே இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பாக வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

இந்திய பிரதிநிதிக ளுக்கும்.தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரு க்கும் சந்திப்பொன்று நடை பெற்றுள்ளது

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வருகைதந்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயரஸ்தானிகர் சத்தியஞ்சல் பான்டே மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதர் (கொன்சூலர் ஜெனரல்) சாய் முரளி ஆகியோருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையில் இன்று காலை 11:30 மணிக்கு கச்சேரி நல்லூர் வீதியில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் சந்திப்பொன்று நடை பெற்றுள்ளது. குறித்த சந்திப்பின்போது – அனுர அரசாங்கம் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் கொண்டுவரவுள்ள புதிய ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு தொடர்பிலும் மற்றும் இந்த அரசாங்கத்தினால் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பௌத்த சிங்கள மயமாக்கல் செயற்பாடுகள், இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகள், ஒருகட்சி ஆட்சி முறையை நோக்கியதான ஜனநாயக விரோத போக்குகள் குறித்தும் இந்திய தூதரக பிரதிநிதிகளிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் தெளிவுபடுத்தப்பட்டது. இனப் பிரச்சினைக்கு தீர்வு என்னும் அடிப்படையில் புதிய அரசியல் அமைப்பு…

மேலும் படிக்க