தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வெளிக்குளத்தில் கொட்டப்பட்ட குப்பைகள்: துரத்திப் பிடித்த இளைஞர்கள்

வவுனியா மாநகரசபை எல்லைக்குட்பட்ட வெளிக்குளம் பகுதியில், நேற்றயதினம்  இரவு டிப்பர் வாகனம் ஒன்றின் மூலம் சட்டவிரோதமாகக் கொட்டப்பட்ட கட்டிட இடிபாட்டுக் குப்பைகள் மற்றும் மரக்கழிவுகள், அப்பகுதி இளைஞர்கள் மற்றும் மாநகர சபை உறுப்பினரின் துரித நடவடிக்கையால் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன. வெளிக்குளம் பகுதி வயல் கரையோரங்களைச் சூழவுள்ள இயற்கையான சூழலில் அடையாளம் தெரியாத நபர்களால் நேற்றிரவு டிப்பர் வாகனம் மூலம் பெருமளவிலான கட்டிட இடிபாட்டுக் குப்பைகளும் மரக்கழிவுகளும் கொட்டப்பட்டன. இதனை அவதானித்த அப்பகுதி கிராமத்து இளைஞர்கள் உடனடியாகச் செயற்பட்டு, குப்பைகளைக் கொட்டிவிட்டு தப்பிச்செல்ல முயன்ற டிப்பர் வாகனத்தை சினிமா பாணியில் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர் இது குறித்து வவுனியா மாநகர சபை உறுப்பினர் அருணனுக்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகர சபை உறுப்பினர் அருணன், சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்களைக் கடுமையாக எச்சரித்தார்.…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் இடைத்தரகர்கள் ஆதிக்கமா? மக்கள் குற்றச்சாட்டு

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில், கடவுச்சீட்டு பெறுவதற்காக விண்ணப்பிக்கும் பொதுமக்களிடம் முறையற்ற வகையில் பணம் கோரப்படுவதாகவும், இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ​சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: மன்னார்  மாவட்டத்தை சேர்ந்த தாய் ஒருவர்,கணவன் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் தனது 10 வயதிற்குட்பட்ட இரண்டு பிள்ளைகளுக்கு கடவுச்சீட்டு பெறுவதற்காக வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அங்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தபோது, ஆவணங்களில் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி, அவற்றைச் சரிசெய்து கடவுச்சீட்டு தர 250,000 ரூபா பணம் கோரப்பட்டுள்ளது. ​எனினும், அந்தத் தாய் எவ்வித மேலதிகப் பணத்தையும் வழங்க மறுத்து, அதே விண்ணப்பங்களுடன் கொழும்பில் உள்ள பிரதான கடவுச்சீட்டு அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அங்கு எவ்வித குறைபாடுகளும் இன்றி, எவ்வித மேலதிகக் கட்டணமும் இன்றி, ஒரே நாளில் அவசர சேவையின் கீழ் தனது இரு பிள்ளைகளுக்கும் கடவுச்சீட்டுக்களைப்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மட்டு. நகரில் அதிகாலை பயங்கர தீ! வர்த்தக நிலையங்கள் தீக்கிரை

மட்டக்களப்பு நகர மத்தியிலுள்ள பல வர்த்தக நிலையங்களில் இன்று (07) அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சுமார் ஐந்து கடைகள் தீக்கிரையாகி கடுமையான சேதமடைந்துள்ளன. இன்று அதிகாலை சுமார் 5.00 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ, ஒன்றுக்கொன்று அண்மையில் அமைந்திருந்த வர்த்தக நிலையங்களுக்கு வேகமாகப் பரவியதாக தெரிவிக்கப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர், பொலிஸார் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ஐந்து வர்த்தக நிலையங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் மற்றும் ஏற்பட்டுள்ள சொத்து சேதத்தின் முழுமையான விபரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதற்கிடையில், கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு பகுதியில் தொடர்ச்சியாக தீ விபத்துகள்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

தடைசெய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து

அரிசி அல்லது நெல்லை கால்நடைத் தீவன உற்பத்திக்காகப் பயன்படுத்துவதைத் தடைசெய்து  வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் இரத்து செய்துள்ளது. ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த மேற்படி வர்த்தமானியை இரத்து செய்வதாக குறிப்பிடும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று நுகர்வோர் விவகார அதிகாரசபையினால்  வெளியிடப்பட்டுள்ளது. புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம், அரிசி அல்லது நெல்லை கால்நடைத் தீவன உற்பத்திக்காக நேரடியாகப் பயன்படுத்துவதற்கோ அல்லது வேறு ஏதேனும் வகையில் கால்நடைத் தீவன உற்பத்திக்கான மூலப்பொருளாகப் பயன்படுத்துவதற்கோ, விற்பனை செய்வதற்கோ, விற்பனைக்காக காட்சிப்படுத்துவதற்கோ, களஞ்சியப்படுத்துவதற்கோ,  விநியோகிப்பதற்கோ அல்லது கொள்வனவு செய்வதற்கோ மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேற்படி நடைமுறை கடந்த ஜூன் 24ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் விடுத்துள்ள கலந்துரையாடல் அழைப்பு

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் தரவு சேகரிப்பு, அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டாளர்களுடனான திறந்த கலந்துரையாடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறவுள்ளதாக, வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜேம்ஸ் சுதீபன் போல் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் திங்கட்கிழமை  நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பான சரியான தகவல்கள் தரவுகள் இதுவரை இல்லை நாம் வேலை வாய்ப்புக்களை கோரும் போது தரவுகள் கையசம் இருந்தாலே, வேலை வாய்ப்பை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும். செப்டெம்பர் மாதமளவில் அபிவிருத்தி உத்தி யோகத்தர்களுக்கான ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அது போட்டி பரீட்சை இன்றி நடைபெறவுள்ளதாகவும் அறிகிறோம், எனவே பட்டதாரிகள் பட்டப்படிப்பினை முடித்து வெளியேறிய ஆண்டு, அவர்களின் துறை சார்ந்த தரவுகள் கையசம் இருந்தாலே வேலை வாய்ப்பினை சிக்கல்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மன்னார் காற்றாலை மின் நிலைய நிர்மாணப் பணிகள் முன்னெடுப்பு வலுசக்தி அமைச்சு 

மன்னார் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் 50 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக வலுசக்தி அமைச்சு  தெரிவித்துள்ளது. இவ்வாண்டு ஜனவரி மாதம்   ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் முதல் கட்ட காற்றாலை டர்பைன்கள் சில வாரங்களுக்கு முன்பு இலங்கையை வந்தடைந்தன. மீதமுள்ள அனைத்து உபகரணங்களும் தற்போது திருகோணமலை துறைமுகம் வந்தடைந்துள்ளதுடன், அவற்றை இறக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாட்டின் மொத்த மின்சாரத் தேவையில் 70 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களின் மூலம் பூர்த்தி செய்வதற்கான அரசின் இலக்கை நோக்கிச் செல்லும் முக்கிய ஆரம்ப நடவடிக்கையாக இந்த மன்னார் காற்றாலை மின் நிலையத் திட்டம் கருதப்படுகிறது. மேலும், 2050 ஆம் ஆண்டுக்குள் இலங்கை அடைய எதிர்பார்க்கும் ‘நிகர பூஜ்ஜிய கார்பன் வெளியேற்ற’ (Net Zero…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

700 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த சுமார் 700 கைதிகள், அங்குள்ள நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கையாக அகுணகொலபெலஸ்ஸ, போகம்பர, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (05) முதல் நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிலவும் அமைதியற்ற சூழலைக் கருத்தில் கொண்டு இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

எரிபொருளுக்கான கியூ.ஆர் குறியீட்டு முறைமை தொடரும்!

எரிபொருள் விநியோக முறைமை எந்தவித தடையுமின்றி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை நிறுத்துவதற்கு அரசாங்கம் எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். நாட்டில் எதிர்காலத்திலும் தடையின்றி எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே, தற்போதைய விநியோக முறைமையில் மாற்றங்கள் ஏற்படலாம் எனப் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. எரிபொருள் ஒதுக்கீட்டு அளவை அதிகரிப்பதற்கோ அல்லது குறைப்பதற்கோ எந்தவித முடிவுகளும் எடுக்கப்படவில்லை. மறுஅறிவித்தல் வரை தற்போதைய ஒதுக்கீட்டு எல்லைகளே தொடர்ந்து அமுலில் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நீர்கொழும்பு சிறையில் ரத்தக்களரி! 25 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) மதியம் வெடித்த கைதிகள் மோதல், இன்று (06) காலை மீண்டும் உச்சகட்டத்தை எட்டிய நிலையில் இதுவரை 25பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அதன்படி இந்த வன்முறைச் சம்பவங்களில் 5  சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதற்கிடையில், சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பலரது உடல்களில் துப்பாக்கிக் காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆரம்ப விசாரணைகளின்படி, சுமார் 1,800 கைதிகள் உள்ள இந்தச் சிறைச்சாலையில்  “பூரு மூனா” பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சுரேஷ் என்ற போதைப்பொருள் கடத்தல்காரரின் செல்வாக்கின் கீழ் இந்த மோதல் நடைபெற்றதாக பொலிஸார்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

காவல். நிலையத்தில் தடுத்து வைக்கப் பட்டிருந்த சந்தேக நபர் உயிரிழப்பு

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் காவல். லையத்தில், போதைப்பொருள் தொடர்பில் கைதான நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் நிந்தவூர் காவல். நிலையத்திற்கு, உதவி காவல்துறை. அத்தியட்சகர், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வருகை தந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க