சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இடைக்கால அறிக்கை.

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட புலனாய்வு விசாரணையை நடத்திய நிபுணர்கள் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 03 அம்ச பரிந்துரைகளுடன் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சமன் பத்திரன ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின்படி, சம்பவத்தின் போது, மருத்துவமனை அறிக்கையில் குளறுபடிகள் ஏற்பட்டிருக்கலாம் என கருதும் பட்சத்தில் அது தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்யுமாறு நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. அத்துடன், அவசர சிகிச்சைப் பிரிவில் குறித்த நேரத்தில் கடமையில் இருந்த தாதிய உத்தியோகத்தரை, சாதாரண நோயாளர் விடுதிக்கு மாற்றுமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மருத்துவரை, தனியாக செயற்பட விடாது, மற்றுமொருவரின் கண்காணிப்பின் கீழ் செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரைகளை உடனடியாக…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

இயக்குநரான பாரதிராஜா திடீரென சுகவீனம் மருத்துவமனையில் அனுமதி.

தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இயக்குநரான பாரதிராஜா திடீரென சுகவீனமடைந்ததைத் தொடர்ந்து சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தற்போது அவர் சுகவீனமடைந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

அரசியலமைப்பு பேரவையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்  பதவிவிலக வேண்டும்

அரசியலமைப்பு பேரவையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்  பதவிவிலக வேண்டும் என்று பணிப்புரை வழங்குவதென இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பதில் செயலாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்   அரசியலமைப்பு பேரவையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்  பதவிவிலக வேண்டும் என்று பணிப்புரை வழங்குவதென இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பதில் செயலாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தாயகம் அலுவலகத்தில் இன்று(03) இடம்பெற்றது. இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்… அரசாங்கம் எல்லைமீள் நிர்ணயம் செய்தபின்னர் தான் மாகாணசபை தேர்தல் என்று கூறுவதை நாம் ஏற்கமுடியாது. தேர்தல் முறை மறுசீரமைப்பு என்பது ஒரு விடயம். ஆனால் மறுசீரமைப்பு செய்யப்படவில்லை…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

தையிட்டி திஸ்ஸ விகாராதிபதி அவர்களுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்

தையிட்டி திஸ்ஸ விகாராதிபதி அவர்களுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல் தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் 31.12.2025 ந் திகதி கலந்துரையாடலில் ஈடுபட்டதற்கு அமைவாக, திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் மட்டுப்பாடான அளவில் எல்லையிட்டு, அதனைத் தவிர்த்து ஏனைய காணிகளை கட்டம் கட்டமாக விடுவிப்பது தொடர்பாக – விகாராதிபதியுடன் அரசாங்க அதிபர் சந்தித்து தொடர் நடவடிக்கை எடுப்பது என கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. அத் தீர்மானத்திற்கமைய, இன்றைய தினம் (02.01.2025) அரசாங்க அதிபர் வணக்கத்திற்குரிய விகாராதிபதி அவர்களுடன் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, கொழும்பில் உயர்மட்ட கலந்துரையாடல் நடக்கவிருப்பதாகவும் அக் கலந்துரையாடலின் பின்னர் இது தொடர்பாக பொருத்தமான மேலதிக நடவடிக்கைகள் எடுக்க முடியும் எனவும் வணக்கத்திற்குரிய விகாராதிபதி அவர்கள் அரசாங்க அதிபர் அவர்களிடம் தெரிவித்தார். வணக்கத்துக்குரிய…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பொய்யான உறுதிகள் என கூறி, எமது போராட்டத்தை கேலி செய்யும் அர்ச்சுனா!

. பொய்யான உறுதிகள் என கூறி, எமது போராட்டத்தை கேலி செய்யும் பாராளுமன்ற ,உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், எமது உறுதிகள் பொய்யானவை என்பதனை நிரூபிக்கப்பட்டும் தையிட்டி விகாரைக்காக அபகரிக்கப்பட்டுள்ள எமது காணிகளுக்கான உறுதிகள் பொய்யான உறுதிகள் என கூறி, எமது போராட்டத்தை கேலி செய்யும் பாராளுமன்ற ,உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், எமது உறுதிகள் பொய்யானவை என்பதனை நிரூபிக்கப்பட்டும் என காணியை இழந்த உரிமையாளர்கள் பகிரங்க சவால் விடுத்துள்ளனர்.யாழ் ஊடக அமையத்தில், தையிட்டி விகாரையால் காணிகளை இழந்த காணி உரிமையாளர்கள் நடத்திய ஊடக சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.அவர்கள் மேலும் தெரிவிக்கையில், தையிட்டி விகாரை தொடர்பாக நாங்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். விகாரை உள்ள காணிக்கான உறுதிகள் அரச அதிகாரிகளிடம் எம்மால் பல தடவைகள் வழங்கப்பட்டுள்ளன. அமைச்சர் சந்திரசேகர் காணி உறுதிகள் சரிபார்க்கப்பட வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.ஆளுநர், அரச…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கல்லுமலையும், வெடுக்குநாறியும் எங்கள் சொத்து, வவுனியாவில் போராட்டம்

கல்லுமலையும், வெடுக்குநாறியும் எங்கள் சொத்து, எனத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் போராட்டம்   கல்லுமலையும், வெடுக்குநாறியும் எங்கள் சொத்து, எனத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் போராட்டம் ஒன்று நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. தையிட்டியில் ஜனநாயக ரீதியாக போராடியவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், வவுனியா உட்பட வடக்கு, கிழக்கில் புதிதாக அமைக்கப்படும் விகாரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், சட்டவிரோதமாக தையிட்டியில் அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடியவர்கள் மிலேச்சத்தனமாக கைது செய்யப்பட்டுள்ளனர். இது தமிழ் மக்கள் மீதான ஒரு அடக்குமுறை செயற்பாடாகவே உள்ளது. வடக்கில் குருந்தூர் மலை, வெடுக்குநாறி மலை, தையிட்டி தற்போது வவுனியா கல்லுமலை என்பன ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மறுக்கப்படும் எமது உரிமைகளை அடைவதற்காக நாம் தொடர்ச்சியாக போராட்டங்களை…

மேலும் படிக்க
காணொளி சிறப்புச் செய்தி 

வவுனியா சமனங் குளம் பிள்ளையார் ஆலய வளாகம் பெளத்த மயமாக்கப் படுகின்றது ஊடகசந்திப்பு

  வவுனியா சமனங்குளம் பிள்ளையார் ஆலய வளாகம் பெளத்த மயமாக்கப்படுகின்றது ஊடகசந்திப்பு

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

சிறுமி உயிரிழப்பு இரு மருத்துவர்கள் தற்காலிக இடைநிறுத்தம்!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் கடந்த 21 ஆம் திகதி உணவு ஒவ்வாமையினால் அனுமதிக்கப்பட்ட சிறுமி மருத்துவர்களின் சிகிச்சையின் பின்னர் உயிரிழந்துள்ளமை மருத்துவமனையின் நிர்வாகத்தின் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து முல்லைத்தீவு சமூகம் இன்று நீதி வேண்டிய கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் முன்பாக இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது இந்த போராட்டத்திற்கு மாவட்டத்தில் உள்ள சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட அமைப்பினர் ஆதரவினை தெரிவித்துள்ளார்கள். உயிரிழந்த சிறுமியின் உருவப்படங்களை தாங்கிய பதாதைகைள கையில் வதை;து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளார்கள். அதனை தொடர்ந்து  கோரிக்கை அடங்கிய மனு ஒன்றும் மாவட்ட மருத்துவமனை பணிப்பாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு வழங்கியுள்ளார்கள். மனுவில் உள்ள முக்கிய கோரிக்கையாக.. 1)டினோயாவுக்கு நடந்த கொலை தொடர்பிலான உண்மைத்தன்மையினை பணிப்பாளர் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். 2)இவ்வாறு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

ஈழத்து ஓவியக் கலையின் முகவரி,(ஓவியர் ரமணி)இயற்கை எய்தினர்

ஈழத்து ஓவியக் கலையின் முகவரி, தன்னிகரற்ற சிற்பி, எம்மையெல்லாம் கலைப் பாதையில் வழிநடத்திய மாபெரும் ஆசான் திருவாளர் வைத்தீஸ்வரன் சிவசுப்பிரமணியம் (ஓவியர் ரமணி) அவர்கள்  இயற்கை எய்தினர் அவரது கைவண்ணத்தில் உருவான சிலைகள் வெறும் கற்சிலைகள் அல்ல அவை எமது மண்ணின் வீரத்தையும் வரலாற்றையும் பேசும் சாட்சிகள். நெல்லியடி மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட மில்லர் சிலை மற்றும் தீருவிலில் அமைக்கப்பட்ட போராளிகளின் சிலைகளை அவர் வடித்திருந்தார், குறிப்பாக யாழ் இந்துக்கல்லூரியில் உள்ள ஆறுமுக நாவலர் பெருமான், தெல்லிப்பழை துர்க்கையம்மன் கோவிலில் உள்ள தங்கம்மா அப்பாக்குட்டி, சேர் பொன் இராமநாதன் மற்றும் எத்தனையோ மாமனிதர்களின் உருவங்களைச் சிலைகளாகச் செதுக்கி அழியாத புகழை ஈழ மண்ணில் நிலைநாட்டியவர் அவர். ஈழத்து இலக்கிய உலகில் சிறந்த அட்டைப்படங்களை வரைவதில் அவர் ஒரு சகாப்தம். அவரது விளக்கப்படங்களும், அட்டைப்படங்களும் பல நூல்களுக்கு உயிரூட்டின.…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

அபிவிருத்திக் குழுக் கூட்டங்களை முற்றாக புறக்கணிக்க நல்லூர் பிரதேச சபை ஏகமனதாக தீர்மானம்

நல்லூர் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களை முற்றாக புறக்கணிக்க நல்லூர் பிரதேச சபை ஏகமனதாக தீர்மானம் நல்லூர் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டங்களில் அனைத்து கௌரவ உறுப்பினர்களையும் பங்கெடுப்பதற்காக அழைப்பினை விடுக்காது இருப்பின் அக் கூட்டங்களினை முற்றாக புறக்கணிப்பது என்று இன்று நடைபற்ற பிரதேச சபைக் கூட்டத்தில் தவிசாளர் ம. மயூரன் அவர்கள் கொண்டு வந்த தீர்மானத்தினை சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது குறித்த தீர்மானம் தொடர்பாக தவிசாளர் தன்னுடைய உரையில் நல்லூர் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தவிசாளர், உப தவிசாளர் ஆகியோருடன் வேறு கட்சிகளின் இரு உறுப்பினர் மட்டுமே பங்குபற்ற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி சார்பில் பிரதிநிதிகளை அழைத்து பிரச்சனைகளைக் கேட்பதற்கு பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் ஒன்றும் கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பான கூட்டம் அல்ல. அது மக்களின் குறை நிறைகளைத் தீர்க்கின்ற, பிரதேசங்களினை…

மேலும் படிக்க