போராட்டங்களை கைவிடாது தொடருமாறு அமெரிக்க ஜனாதிபதி மக்களை வலியுறுத்தியுள்ளார்.
மதகுருமார்களின் தலைமைத்துவத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை கைவிடாது தொடருமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்
ஈரானில் மதகுருமார்களின் தலைமைத்துவத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை கைவிடாது தொடருமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டு மக்களை வலியுறுத்தியுள்ளார்.
அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை ஈரானிய அரசாங்கம் கையாண்டு வரும் நிலையில், போராட்டக்காரர்களுக்குத் தேவையான உதவிகள் விரைவில் வந்து சேரும் என ஜனாதிபதி ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த உதவிகள் எத்தகையவை அல்லது அவை எப்போது வழங்கப்படும் என்பது குறித்த மேலதிக விபரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை.
ஈரானில் கடந்த பல வருடங்களில் இடம்பெற்ற மிகப்பெரிய மக்கள் எழுச்சியாகக் கருதப்படும் இப்போராட்டங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டுள்ள இந்த கருத்துக்கள் சர்வதேச ரீதியில் கவனத்தைப் பெற்றுள்ளன.
ஈரானில் நிலவிய கடும் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே இந்தப் போராட்டங்கள் ஆரம்பமாகின.
அமெரிக்காவின் இத்தகைய பகிரங்க ஆதரவு நிலைப்பாடானது, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இராஜதந்திர முறுகல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
போராட்டங்களைக் கட்டுப்படுத்த ஈரான் அரசாங்கம் சமூக ஊடகங்களுக்கான கட்டுப்பாடுகளை விதித்ததுடன், பாதுகாப்புப் படையினரைக் கொண்டு போராட்டங்களை ஒடுக்க முற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

