இலங்கை செய்தி. செய்திகள் 

ஐரோப்பிய ஒன்றியத்தின் 2.35 மில்லியனுக்கும் அதிகமான யூரோ இலங்கைக்கு உதவி

இலங்கையை மீட்டெடுக்கும் செயல்முறைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் வகையில், யூரோ 2.35 மில்லியனுக்கும் அதிகமான மனிதாபிமான நிவாரணப் பொருட்களை இந்நாட்டிற்கு அனுப்பியுள்ளது. இலங்கைக்கும் – ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வலுவான பங்குதாரர்கள் மற்றும், இலங்கையை மீட்டெடுக்கும் செயல்முறைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் வகையில், யூரோ 2.35 மில்லியனுக்கும் அதிகமான மனிதாபிமான நிவாரணப் பொருட்களை இந்நாட்டிற்கு அனுப்பியுள்ளது. இதில் IFRC இனால் யூரோ 500,000 மற்றும் DG-European Civil Protection and Humanitarian Aid Operations (ECHO) பங்குதாரர்கள் WFP மற்றும் UNICEF இனால் யூரோ 1.85 மில்லியன் ஆகியவை அடங்கும். மேலும், Union Civil Protection Mechanism (UCPM) சேர்ந்த 37 நாடுகள், 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், அல்பேனியா, பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, ஐஸ்லாந்து, மோல்டோவா, மோண்டினீக்ரோ, வடக்கு மெசிடோனியா, நோர்வே, சேர்பியா, துருக்கி…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

சிலாபம் கடல் பகுதியில் கடற்படையினர் கைப்பற்றிய பீடி இலைகள்

சிறப்பு தேடுதல் நடவடிக்கை கடந்த புதன்கிழமை (10), சிலாபம் கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் செயல்படுத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போது, நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் 1740 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன. மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் ரங்கலவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.   சட்ட நடவடிக்கைகள் மற்றும் அடுத்த கட்டம் கைப்பற்றிய பீடி இலைகள் தற்போது மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுகத்தில் உள்ள சுங்கத் தடுப்பு அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. நாட்டின் சட்டங்களை மீறுபவர்களுக்கு உரிய நடவடிக்கைகள் நடைபெறுவதற்காக, பீடி இலைகளின் உரிமையாளர்கள் கண்டறியப்படும் மற்றும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்து.

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஏப்ரல் நடுப்பகுதியில்

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் சில பாடங்கள் இயற்கை பேரிடரால் ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும் எதிர்வரும் ஏப்ரல் நடுப்பகுதியில் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் சில பாடங்கள் இயற்கை பேரிடரால் ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும் எதிர்வரும் ஏப்ரல் நடுப்பகுதியில் பெறுபேறுகள் வெளியிடப்படுமென பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் பத்தாம் திகதி ஆரம்பமாகின. டிசம்பர் முதலாம் திகதி இப்பரீட்சைகள் முடிவடையவிருந்தன.இநநிலையில்,திடீரென இயற்கை அனர்த்தத்துக்கு முகங்கொடுக்க நேர்ந்ததால்,சில பாடங்களுக்கான பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.இதன் பிரகாரம் மீதமுள்ள பாடங்களுக்கான பரீட்சையை ஜனவரி 12 ஆம் திகதி முதல் நடத்த பரீட்சை திணைக்களம் முடிவு செய்துள்ளது.இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களின் மதிப்பீடு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் பரீட்சை முடிவுகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

நிவாரண நிதியத்துக்கு ரூ. 3,421மில்லியன் இதுவரை நிதி உதவி.

நாட்டை கட்டியெழுப்பும் நிவாரண நிதியத்துக்கு ரூ. 3,421மில்லியன் இதுவரை நிதி உதவி வாரண நிதியத்துக்குஇதுவரை ரூ. 3,421 மில்லியன் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த துறைகள் மற்றும் மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கும் பொருட்டு இந்த நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளதாவது; உள்ளூர் வர்த்தகத் தலைவர்கள்,வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த உதவிகளை வழங்கியுள்ளன. இதன்பிரகாரம் இந்நிதியத்துக்கு இதுவரை 3,421மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது.இது 11 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகும்.வெளிநாட்டு நாணயங்களாக 4.1 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளது.நாற்பது நாடுகளிலிருந்து நிதி உதவி பெறப்பட்டுள்ளதாகவும், அதில் அமெரிக்கா மிகப்பெரிய பங்களிப்பை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க
காணொளி சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

தேசத்தின் புதல்வி துவாரகா அவர்கள் திருகோணமலை குச்சவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆற்றிய உரை

தேசத்தின் புதல்வி துவாரகா அவர்கள் நேற்றைய தினம் திருகோணமலை குச்சவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆற்றிய உரை  இது தேசத்தின் புதல்வி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் ஆகும்:     ‘எனது அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே, இன்று மாவீரர் நாள். தமிழீழ மண்ணில் மட்டுமன்றி, உலகெங்கும் இன்று தமிழினம் தலைநிமிர்ந்து நிற்கின்றது என்றால் அதற்குக் காரணமானவர்கள் எமது மாவீரர்கள். தம்மையும், தமது வாழ்வையும் பற்றியே மட்டும் சிந்திக்கும் மனிதர்களின் மத்தியில் தமது மக்கள் வாழ வேண்டும், எதிர்காலச் சந்ததி தலைநிமிர்ந்து நிற்க வேண்டும், தமிழ்த் தாயின் துயர் துடைக்கப்பட வேண்டும் என்ற உன்னத சிந்தனையோடு தம்மையே ஈகம் செய்தவர்கள் எமது மாவீரர்கள். தமது உயிரையே வேலியாக்கி, எமது மண்ணையும், மக்களையும், மொழியையும் காத்த அந்த அற்புதப் பிறவிகள் மண்ணிலும், கடலிலும், வான்வெளியிலும் புரிந்த சாதனைகளை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

தொண்டைமானாறு ஆற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு.!

சற்றுமுன் தொண்டைமானாறு ஆற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு.! தொண்டைமானாறு கடல் நீர் ஏரியிலிருந்து இன்று மாலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். மீன்படி நடவடிக்கைக்கு வந்த மீனவர்கள் சடலம் ஒன்று மிதந்து இருப்பதைக் கண்டு அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் வழங்கியிருந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

மேலும் படிக்க
காணொளி சிறப்புச் செய்தி 

தலைவர் அவர்கள் இருப்பு குறித்து மூத்த போராளிகள் கருத்து வீரவணக்க நிகழ்வை புறக்கணிக்க வேண்டுகோள்

தலைவர் அவர்கள் இருப்பு குறித்து மூத்த போராளிகள் கருத்து வீரவணக்க நிகழ்வை புறக்கணிக்க வேண்டுகோள்

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி 

விளக்குக் கொளுத் தும் இழுக்குப் பிறவிகளே! இரண்டகர் கள் வரிசையில் இடம் பெற்றீர்! காசி ஆனந்தன்

விளக்குக் கொளுத்தும் இழுக்குப் பிறவிகளே! இரண்டகர்கள் வரிசையில் இடம் பெற்றீர்! இழிவுற்றீர! காசி ஆனந்தன் அறிக்கை உலக வரலாற்றில் முதல் தடவையாக உயிரோடு வாழும் ஓர் விடுதலை இயக்கத் தலைவனுக்கு விளக்குக் கொளுத்தும் உணர்ச்சியற்ற இழிபிறவிகளின் ஒன்று கூடல். மனம் துடிக்கிறது. சினம் வெடிக்கிறது.. “தலைவர் இல்லை” என்று சொல்கிறவர்கள் இரண்டு வகை. “ தலைவர் இல்லை” என்று நினைப்பவர்கள் சிலர். “தலைவர் இருக்கக்கூடாது” என்று நினைப்பவர்கள் சிலர். “ தலைவர் இல்லை” என்று நினைப்பவர்கள் ‘தலைவருக்கு எதற்காக விளக்குக் கொளுத்த வேண்டும்?’ என்று தலைவர் மீதுள்ள பற்றால்-பாசத்தால் விளக்குக் கொளுத்திகளை எதிர்க்கிறார்கள். “தலைவர் இருக்கக்கூடாது” என்று நினைப்பவர்கள் தலைவருக்கு விளக்குக் கொளுத்தியே தீருவது என்று தலைக்கனத்தோடு திமிர் கொண்டு குதிக்கிறார்கள். “தலைவர் இருக்கக்கூடாது” என்று நினைப்பவர்கள் யார்? இயக்கத்தின் அமைப்பு விதிகளுக்கு எதிராகத் தவறிழைத்து புலிகள்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிக்கான திகதி அறிவிப்பு

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழி அகழ்வு வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று (15) எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு தொடர்பான விடயங்களை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தற்பரன் தெரிவித்தார். சட்டத்தரணி தற்பரன் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், ”அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள செம்மணி மனித புதைகுழி அகழ்வில் முதலாவதாக எடுத்த புதைக்குழியில் 63 எலும்புக்கூடுகளும், அதற்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட புதைக்குழியில் இருந்து 2 எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டு மொத்தமாக 65 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டது. சிறுபிள்ளை என சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடு சம்பந்தமாக மேலதிகமான ஆய்வுகளை செய்து தருமாறு நீதிமன்றினால் கூறப்பட்டதற்கு அமைவாக அது சம்பந்தமான அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்பட்டது.…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

வடக்கு, கிழக்கை மீளக் கட்டியெழுப்பு வதற்கு கனடா உதவும்; யாழில் கனேடிய தூதுவர்

போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கை மீளக் கட்டியெழுப்புவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு கனடாவும் தம்மால் முடிந்த ஒத்துழைப்பை வழங்கும் என அந்நாட்டு தூதுவர் உறுதியளித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இலங்கைக்கான கனடா தூதுவருக்கும், தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெ.ரஜீவன், ஸ்ரீபவானந்தராஜா ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. இதன்போது யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலைவரம், காணி பிரச்சினை, வடக்கை இலக்காகக் கொண்டு அமையவுள்ள முதலீட்டு வலயங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு தேசிய மக்கள் சக்தியால் நிச்சயம் தீர்வுகள் முன்வைக்கப்படும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தூதுவரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், வடக்கு,…

மேலும் படிக்க