இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

தேவேந்திரமுனையில் மீனவர் வீடு மீது துப்பாக்கிச் சூடு;

மாத்தறை – தேவேந்திரமுனை, கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏதண்ட வீதியில் அமைந்துள்ள மீனவர் ஒருவரின் வீடு மீது இன்று (22) அதிகாலை மர்ம நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் தகவலின்படி, கார் ஒன்றில் வந்த சிலர் கைத்துப்பாக்கி மூலம் வீட்டை இலக்காகக் கொண்டு  துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் அல்லது உயிர்ச் சேதம் ஏற்படவில்லை என்றும், வீட்டுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வீதி புனரமைப்புப் பணிகளுக்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல்.

வீதி புனரமைப்புப் பணிகளுக்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின் ஆளுகைக்குட்பட்ட கிருஷ்ணபுரம்–விநாயகபுரம் வீதி மற்றும் கோவில்காடு பிரதான வீதி ஆகியவற்றைப் புனரமைப்பதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல் இன்று (21.07.2026) செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. தெரிவுசெய்யப்பட்ட வீதிகளை புனரமைப்புப் பணிகளுக்காக உரிய திணைக்களங்களிடம் கையளித்தல், அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் பணிகளை துரிதமாக ஆரம்பிப்பது தொடர்பாக இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர், பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர், கணக்காளர், கரைச்சி பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், கரைச்சி பிரதேச சபை உபதவிசாளர், கரைச்சி பிரதேச சபைச் செயலாளர்,…

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

யாழில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுடன் தமிழ் அரசியல் கட்சிகள் சந்திப்பு

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளை தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்து முக்கிய கலந்துரையாடலை மேற்கொண்டனர். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடும் நோக்கில் யாழ்ப்பாணம் வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர், நேற்று  தனியார்  விடுதியில் தமிழ் அரசியல் தரப்பினரைச் சந்தித்து கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி. மதிவதனி, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மாநகர சபை உறுப்பினர்கள், நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் மயூரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் அக்கட்சியின் கலாநிதி க. சர்வேஸ்வரனும் கலந்துகொண்டு, செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விடயங்கள் மற்றும் தமிழர் சமூகத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுடன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

யாழ் வந்த அவுஸ்ரேலிய அமைப்பு – அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கருத்து.

யாழ்ப்பாணத்தில் கல்வி பொருளாதார சமூக முன்னேற்றங்களுக்கான செயற்பாடுகளை மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக அவுஸ்ரேலியாவைத் தளமாகக் கொண்ட அரச சார்பற்ற நிறுவனமான ‘நூல்’ அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே குறித்த அமைப்பின் ஸ்தாபகரான டேஷ் பாலசுப்ரமணியம் இதனைத் தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர், யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை வரையிலான ஆயிரம் கிலோமீட்டர் சைக்கிள் பயணத்தை அவுஸ்ரேலிய பிரஜைகள் உட்பட்ட நூல் அமைப்பின் தோழர்களோடு தாம் நிறைவு செய்துள்ளதாகவும், குறித்த பயணம் தமது சமூக சிந்தனைகளை மேம்படுத்த உதவுவதாகவும் குறிப்பிட்ட அதேவேளை குறித்த பயணத்திற்கான ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் வெளிநாட்டு வாழ் மக்களின் நிதி அன்பளிப்புகள் கிடைக்கப்பெறுவதாகவும் குறித்த உதவி மூலம் இங்குள்ள செயற்றிட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இவ்வாறான செயற்பாடுகள் அடுத்த வருடம் ஜூலை மாதமும் நடாத்தப்படும் எனவும்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

காணி விடுவிப்பில் இனவாத அரசியல் வேண்டாம்” – வடக்கு ஆளுநர்

போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை. இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீண்டும் மக்களிடமே கையளிக்கப்படும் போது, தென்னிலங்கையில் சிலர் ‘இராணுவத்தினரின் காணிகளை மக்களுக்கு வழங்குவதாக’ இனவாத நோக்கில் குரல் எழுப்புகின்றனர். ஆனால், இராணுவம் விடுவிப்பது அந்த மக்களின் சொந்தக் காணிகளையே தவிர இராணுவத்தினரின் காணிகளை அல்ல. இந்த அரசாங்கம் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கான செயன்முறைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள், வடக்கு மாகாண ஆளுநரை ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர். இச்சந்திப்பின் போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். வடக்கு மாகாணத்தின் சமகால நிலவரங்கள் மற்றும் அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

வடமராட்சியில் மீண்டும் தீ வைப்பு: வயல் வேலிகள், பனை மரங்கள் தீக்கிரை

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை வல்லிபுரக் கோவிலை அண்மித்த மருதங்கேணி – பருத்தித்துறை வீதியின் தெற்குப் பகுதியில் விஷமிகளால் தீ வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தால் வயல் வேலிகள், புற்தரைகள் மற்றும் பனை மரங்கள் எரிந்து வருகின்றன. தீ பரவியதால் அப்பகுதியில் உள்ள வயல் வேலிகள், மேய்ச்சல் நிலங்கள் மற்றும் பனை மரங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மைக்காலமாக வடமராட்சி பகுதியில் அடிக்கடி இவ்வாறான தீவைப்பு சம்பவங்கள் பதிவாகி வருவதாகவும், இதன் காரணமாக பல ஏக்கர் மேய்ச்சல் நிலங்கள், வயல் நிலங்கள் மற்றும் வயல் வேலிகள் தீக்கிரையாகி பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த தொடர்ச்சியான தீவைப்பு சம்பவங்களைத் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

ஆழிப்பேரலை நினைவுக் கிண்ணத்தை தனதாக்கியது வட்டுவாகல் உதயசூரியன்

ஆழிப்பேரலை நினைவுக்கிண்ணத்தை தனதாக்கியது வட்டுவாகல் உதயசூரியன் முல்லைத்தீவு – கள்ளப்பாடு உதயம் விளையாட்டுக்கழகத்தினால் அமரர் நாகேஸ்வரன் றமணா ஞாபகார்த்தமாக ஆழிப்பேரலை நினைவுக்கிண்ண கால்பந்தாட்ட சுற்றுத்தொடர் ஒன்று நடாத்தப்பட்டது. குறித்த கால்பந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டியில் வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக்கழக அணியும், அளம்பில் இளந்தென்றல் விளையாட்டுக்கழக அணியும் மோதின. இந்நிலையில் இறுதிப்போட்டியில் வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக்கழக அணியினர் வெற்றியீட்டி கிண்ணத்தை தமதாக்கிக்கொண்டனர். இந்நிகழ்வில் விருந்தினர்களாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், செ.திலகநாதன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் மகாதேவா குணசிங்கராசா, முல்லை மறைக்கோட்டத்தின் பங்குத்தந்தை எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முள்ளிவாய்க்கால் பிலவுவெளி கமவீதியின் சீரமைப்பு பூர்த்தி;

ரவிகரன் எம்.பியின் கடும் பிரயர்த்தனத்தினால் முள்ளிவாய்க்கால் பிலவுவெளி கமவீதியின் சீரமைப்பு பூர்த்தி; மக்கள் பாவனைக்காகத் திறந்துவைக்கப்பட்டது. வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுடைய கடுமையான தொடர்முயற்சியின் பலனாக, முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கமக்கார அமைப்பிற்குட்பட்ட பிலவெளி, கமவெளி, புறக்கட்டு வெளி, கோயில்தறைவெளி உள்ளடங்கலான வயல்நிலங்களுக்குச் செல்வதற்குப் பயன்படுத்தும் பிலவுவெளி கமவீதியின் சீரமைப்புப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளது. இந்நிலையில் சீரமைப்புப் பணிகள் பூர்த்தியடைந்த குறித்த பிலவுவெளி கமவீதியானது 20.07.2026இன்று மக்கள் பாவனைக்காக இன்று திறந்துவைக்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு- முள்ளியவளை கமநலசேவைநிலயப் பிரிவிலுள்ள, முள்ளிவாய்க்கால் கிழக்கு கமக்கார அமைப்பிற்குட்பட்ட பிலவெளி, கமவெளி, புறக்கட்டு வெளி, கோயில்தறைவெளி உள்ளடங்கலான வயல்நிலங்களுக்குச் செல்வதற்குப் பயன்படுத்தும் பிலவுவெளி கமவீதி மற்றும் அரசடி கமவீதி என்பன சீரின்றிக்காணப்பட்டது. இத்தகையசூழலில் அவ்வீதிகளைப் பயன்படுத்தும் விவசாயிகள் விதைநெல், உரம் உள்ளிட்ட விவசாய உள்ளீடுகளை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

பயங்கர வாதத் தடைச்சட்டம் விரைவில் நீக்கப்படும்! ஹர்ஷன நாணயக்கார

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) விரைவில் நீக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், பல தசாப்த கால பழமையான சட்டத்தை ஒழிப்பதற்கான தீர்க்கமான நடவடிக்கையாக புதிய சட்டமூலம் ஏற்கனவே அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், பயங்கரவாதத் தடைச் சட்டம் ஒழிக்கப்படும் என அமைச்சர் உறுதிப்படுத்தினார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் இன்றி நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் சம்பந்தப்பட்ட மேல் நீதிமன்றத்தின் ஊடாகப் பிணை கோரி விண்ணப்பிக்கலாம் என்றும் விளக்கமளித்தார். பிணை வழங்குவது அரசாங்கத்தின் கொள்கை முடிவு அல்ல என்றும், இதுபோன்ற விவகாரங்களில் நீதித்துறை சுதந்திரமாகச் செயற்படுகிறது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

குவைத்துக்கான ஸ்ரீலங்கன் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தம்!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, குவைத் நாட்டிற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது இதன்படி, நேற்று (20) முதல் ஜூலை 26 ஆம் திகதி வரை குவைத்திற்கான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 1979 என்ற அவசர தொலைபேசி இலக்கம் மூலமாகவோ அல்லது +94 11 777 1979 அல்லது +94 74 444 1979 ஆகிய வாட்ஸ்அப் (WhatsApp) இலக்கங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியோ பெற்றுக்கொள்ள முடியும். அல்லது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். இதேவேளைமத்திய கிழக்கு பிராந்தியத்தில் திடீரென தீவிரமடைந்துள்ள பாதுகாப்புப் பதற்றம் காரணமாக, முக்கிய நகரங்களுக்கான தனது விமான சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக…

மேலும் படிக்க