தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மன்னார் நகர சபைத் தவிசாளர் தொடர்பான விசாரணை: நீதிமன்ற வழக்கு முடிவுறுத்தம்!

மன்னார் நகர சபைத் தவிசாளர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக வடக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் கால எல்லை நாளையுடன் (04ஆம் திகதி) நிறைவடைவதால், அந்த வர்த்தமானியை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை முடிவுக்குக் கொண்டுவர, எதிர்மனுதாரர்கள் குறிப்பிடப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான அரச சட்டவாதி மன்றில் கோரிய நிலையில், மனுதாரர் தரப்புச் சட்டத்தரணியின் இணக்கத்துடன் வழக்கு உத்தியோகபூர்வமாக முடிவுறுத்தப்பட்டது. மன்னார் நகர சபைத் தவிசாளரால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த வழக்கின் இன்றைய அமர்வில், எதிர்மனுதாரர்கள் சார்பில் அரச சட்டவாதி முன்னிலையாகியிருந்தார். இதன்போது மன்றுக்கு விடயங்களைத் தெளிவுபடுத்திய அரச சட்டவாதி, குறித்த விசாரணையை முன்னெடுப்பதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஆங்கில மற்றும் சிங்கள மொழியாக்கங்களில் ‘நகர சபை’ என்பதற்குப் பதிலாக ‘மாநகர சபை’ எனத் தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், தமிழ்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரை சாட்சி யத்திற்கு அழைக்க இடைக் காலத் தடை

மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரை சாட்சியத்திற்கு அழைக்க இடைக்காலத் தடை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கு ஒன்றில் சாட்சியமளிப்பதற்காக, அவிசாவளை மேல் நீதிமன்ற நீதிபதி சஹன் மாபா பண்டாரவுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணைக்கு அமைய நடவடிக்கை எடுப்பதைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணிகளான உதித இகலஹேவா, ஃபர்மான் காசிம் மற்றும் சட்டத்தரணி சுகத் கல்தேரா ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒன்றில்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

கோயம்பேடு கேளிக்கை விடுதி தகராறு; யான்சியைத் தொடர்ந்து சிறுமியும் உயிரிழப்பு

சென்னை – கோயம்பேட்டில் உள்ள கேளிக்கை விடுதிக்கு வெளியே ஏற்பட்ட மோதலில், மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது திட்டமிட்டு காரை ஏற்றி விபத்து ஏற்படுத்தப்பட்ட சம்பவத்தில், படுகாயமடைந்த 17 வயது சிறுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முன்னதாக இந்த கொடூர சம்பவத்தில் ‘யான்சி’ என்ற 18 வயது இலங்கை அகதி பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த யான்சி (18) என்ற இளம்பெண், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலமாக சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். தனது தோழியை நேரில் சந்திப்பதற்காக யான்சி சென்னைக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு, அவர்கள் கோயம்பேட்டில் உள்ள ஒரு பிரபல கேளிக்கை விடுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு இருந்த மற்றொரு தரப்பினருடன்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில்.திருத்தம்

லிட்ரோ சமையல் எரிவாயுவின் ஜூன் மாதத்துக்கான விலை திருத்தம் குறித்த அறிவிப்பு, நாளை மறுதினம் வியாழக்கிழமை வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூன் 5 ஆம் திகதி எரிவாயு விலையை திருத்தியமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மாதாந்த எரிவாயு விலை திருத்தத்திற்குத் தேவையான அறிக்கைகள் தற்போது நிதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் இறுதி அறிக்கை நாளை மறுதினம் வியாழக்கிழமை கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். உலக சந்தையில் நிலவும் விலை நிலவரங்களுக்கு அமையவே இம்முறை எரிவாயு விலையைத் திருத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

உழவு இயந்திரத்துடன் மோதி இளைஞர் பலி.

வவுனியா, கனகராயன்குளம்  காவல்துறை பிரிவிற்குட்பட்ட குருசுட்டுக்குளம் பிரதேசத்தில் உழவு இயந்திரம் ஒன்றில் மோதி படுகாயமடைந்த இளைஞர் ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதா    காவல் துறையினர்.தெரிவித்துள்ளனர். நேற்று (02) மாலை இடம்பெற்ற இந்த விபத்து குறித்து கனகராயன்குளம்  காவல் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இவ்விபத்தில் குருசுட்டுக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞர் குருசுட்டுக்குளம் கோயிலுக்குச் சொந்தமான காணியைச் சுத்தப்படுத்துவதற்காக உழவு இயந்திரத்தை இயக்க முற்பட்டபோது, அதில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் அந்த உழவு இயந்திரத்தைத் திருத்திக் கொண்டிருந்தபோது, அது திடீரென முன்னோக்கி நகர்ந்துள்ளது. இதன்போதே அவர் உழவு இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளார் என இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் உடனடியாக புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

மாவீரர் லெப்டினன் கேணல் அசோக் குமாரின் தந்தை இயற்கை எய்தினர்.

யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் யோகராசா. அவர்கள் 01-06-2026 [திங்கட்கிழமை] அன்று இறைபதம் அடைந்தார். அன்னாரின் ஈமைக் கிரியைகள் 04-06-2026 வியாழக்கிழமை 10 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைக்காக நீர்வேலி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். குறைப்பு. மாவீரர் லெப்டினன் கேணல் அசோக் குமாரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

டீசல் விலை உயர்வு.பேருந்து சங்கங்கள் இன்று அவசரக் கூட்டம்

டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை உயர்த்தாதது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக, பேருந்து சங்கப் பிரதிநிதிகள் இன்று (02) கூடவுள்ளனர். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு பேருந்து சேவைகளைத் தொடர்வது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். அனைத்து பேருந்து சங்கப் பிரதிநிதிகளும் இன்று காலை ஒன்றுகூடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், இன்று எங்கள் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய சங்கப் பிரதிநிதிகள் வரவுள்ளனர். குறிப்பாக, இந்த எரிபொருள் சிக்கலில் இருந்து எமது தொழிலை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து கலந்துரையாடவுள்ளோம். அரசாங்கத்திடமிருந்து இதுவரை எந்தப் பதிலும் இல்லை. அவர்கள் ஒரு கொள்கையில் உள்ளனர். எவ்வாறாயினும், தற்போது இந்தத் தொழிலை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதால்,…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வவுனியா கந்தபுரம் கிராமத்தில் நெல் உலர்த்தும் தளம் அமைக்க அடிக்கல் நடுகை!

தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் “வளமான நாடு அழகான வாழ்க்கை” சமூக சக்தி வேலைத்திட்டத்தின் கீழ், வவுனியா கந்தபுரம் கிராமத்தில் நெல் உலர்த்தும் தளம் மற்றும் களஞ்சியசாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று (02) இடம்பெற்றிருந்தது. கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் நிதி ஒதுக்கீடு மற்றும் வழிகாட்டலின் கீழ் குறித்த தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் மற்றும் வவுனியா பிரதேச செயலாளர் இ. பிரதாபன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர். இவ்விழாவில் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர், அரச அதிகாரிகள் மற்றும் கந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இத்திட்டத்தின் மூலம் அப்பகுதி விவசாயிகளின் நீண்டகால தேவையாக இருந்த நெல்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

ஒரு கோடியே 15 இலட்சம் ரூபா கொள்ளையடித்த குற்றச் சாட்டில் இருவர் கைது

யாழ்- வல்வெட்டி, கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபா பணத்தைக்  கொள்ளையடித்த குற்றச்சாட்டில் பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுங்கேணியைச் சேர்ந்த மற்றொருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் சந்தேகநபரைத் தேடி  காவல்துறையினர்.விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 27 ஆம் திகதி பகல் வேளையில் வீட்டில் ஆள்கள் இல்லாத நேரத்தில் வீட்டின் புகைக்கூட்டை உடைத்து உள்ளிறங்கிய இருவரும் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய வல்வெட்டித்துறை காவல்துறையினர். விசாரணையை துரிதப்படுத்தி கண்காணிப்பு கமராக்களை ஆராய்ந்ததில் மேற்படி  சந்தேகநபர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர். கெருடாவிலைச் சேர்ந்த 16 வயது சிறுவன், 19 வயது இளைஞர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்களில் ஒருவர் வல்லைச் சந்தியிலும், மற்றொருவர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியிலும் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் மேற்படி…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

மெதிரிகிரியை பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர்,வெட்டிப் படுகொலை

பொலன்னறுவை மாவட்டம், மெதிரிகிரியை பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர், அவரது அயல் வீட்டு இளைஞரினால் கோரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூரச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. தனியார் வங்கியொன்றில் ஊழியராகக் கடமையாற்றி வந்த மெதிரிகிரியைப் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவராவார். படுகொலை செய்யப்பட்ட யுவதியை அவரது அயல் வீட்டில் வசிக்கும் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் நீண்டகாலமாகக் காதலித்து வந்துள்ளார். எனினும், மேற்படி இளைஞரின் காதலை அந்த யுவதி தொடர்ச்சியாக மறுத்து வந்துள்ளார். இதனால் கடும் மனவிரக்தியடைந்திருந்த அந்த இளைஞர், நேற்று மாலை யுவதி மீது கூரிய ஆயுதத்தால் வெட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு படுகொலை செய்துள்ளார். இந்தக் கொலைச் சம்பவத்தின் பின்னர் சந்தேகநபரான 28 வயதுடைய இளைஞர் அந்தப் பிரதேசத்தை விட்டுத் தப்பியோடியுள்ளார். அவரைக்…

மேலும் படிக்க