சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

சங்கீத்ஷனை விடுவிக்கா விட்டால் வடக்கு, கிழக்கு போராட்டங்கள் வெடிக்கும் சிறீதரன்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்ஷனை உடனடியாக விடுவிக்காவிட்டால், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போராட்டங்கள் வெடிக்குமென, தமிழரசுக்கட்சி எம்.பி. சிவஞானம் சிறீதரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அவசரகாலசட்ட நீடிப்பு தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக மீண்டும் இந்த நாட்டில் பயங்கரமான, துயரமான சம்பவங்கள் இடம்பெறத்தொடங்கியுள்ளன. யாழ்ப்பாணத்தில் வைத்து கிளிநொச்சி உதயநகர் கிழக்கை சேர்ந்த கணேஷ்குமார் சங்கீத்ஷன் என்ற இளம்பாடகர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் . நாட்டில் ஒரு பாடல் பாடியதற்காக,ஒரு காலத்தின் செய்தியை கண்ணாடியாக சொல்கின்ற ஒரு கலைஞன் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். நாட்டில் 1978 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் என்பது சிங்கள, தமிழ் இளைஞர்களை மிக மோசமாக பாதித்திருந்தது. இன்று…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

ஆடி அமாவாசை தினத்தை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துக – ரவிகரன்

ஆடி அமாவாசை தினத்தை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துக – ரவிகரன் எம்.பி கோரிக்கை; கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்கிறார் –  அமைச்சர் ஹினிதும சுனில் செனவி இந்துக்களின் புனித நாளான ஆடி அமாவாசை தினத்தை அரச பொதுவிடுமுறை நாளாக பிரகடனப்படுத்துமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரின் குறித்த கோரிக்கையை உரியவகையில் பரிசீலித்து, விரைவில் முடிவை அறிவிப்பதாக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி பதிலளித்துள்ளார். பாராளுமன்ற குழு அறையில் 09.06.2026இன்று இடம்பெற்ற புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள்பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

பாடல் பாடியதால் கைது இல்லை; விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் பதிவே காரணம்

கிளிநொச்சி இளைஞன் மேடையில் பாடல் பாடியதற்காக கைது செய்யப்படவில்லை.  விடுதலை புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் வார்த்தைகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்த காரணத்தால் தான்  கைது செய்யப்பட்டார்.  பேச்சு சுதந்திரம் என்று குறிப்பிட்டுக்கொண்டு முறையற்ற வகையில் செயற்பட கூடாது  என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகால சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வோம் என்று நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை  நிறைவேற்றுவோம். பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்து அதற்கு பதிலாக புதிய சட்டமொன்றை இயற்றுவதற்கான நடவடிக்கைகள் நிறைவடையும் கட்டத்தில் உள்ளன. இன்னும் ஓரிரு மாதங்களில் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும். மேடையில் பாடல் பாடியதற்காக தமிழ் இளைஞர் கைது செய்யப்பட்டதாக எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஒருவர்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்

தமிழ் திரையுலகிற்கு மண்வாசனையையும், எதார்த்தத்தையும் கொண்டு வந்து புரட்சி செய்த மாபெரும் கலைஞன், ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா (84) அவர்கள் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (ஜூன் 10, 2026) அதிகாலை சென்னையில் காலமானார் என்ற செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும், திரையுலகையும் பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவின் ஸ்டுடியோக்கள் சார்ந்த நிலையை மாற்றி, கேமராக்களை கிராமத்து மண்ணை நோக்கித் திருப்பியவர். “என் இனிய தமிழ் மக்களே…” என்ற அவரது கம்பீரக் குரலும், ’16 வயதினிலே’, ‘முதல் மரியாதை’, ‘கிழக்குச் சீமையிலே’ போன்ற காலத்தால் அழியாத காவியப் படைப்புகளும் என்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத ஒரு பெரும் இழப்பாகும். மாபெரும் கலை ஆளுமைக்குத் தமிழ் திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மோப்ப நாய்களின் உதவியுடன் அதிகாலை சோதனை தீவிரம்!

2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பம் முதல் இன்று வரை திடீர் சோதனைகள் முக்கிய சந்திகள் பிரதான வீதிகளில் அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை  இடம்பெற்று வருகின்றன. போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது கல்முனை காரைதீவு நிந்தவூர் மற்றும் அக்கரைப்பற்று பகுதிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதிகாலை வேளையில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கைகளில் பொலிஸ் மோப்ப நாய்கள் பங்கேற்றதுடன்  குறிப்பாக அதிகாலை வேளைகளில்  நெடுந்தூர சேவையில் கொழும்பிலிருந்து அம்பாறை மாவட்டத்திற்கு வருகின்ற  பேருந்துகளும் பயணிகளும் இதன்போது   சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அத்துடன் அதிகாலை வேளையில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கையில் கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜயசுந்தரவின் பணிப்பரைக்கமைய   அம்பாறை மாவட்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேதமுல்ல…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழில் குடியிருப்புக்குள் புகுந்த சருகு புலி – மடக்கிப்பிடித்த மக்கள்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி  காவல் துறை பிரிவுக்குட்பட்ட நுணாவில் மேற்கு பகுதியில் பொதுமக்களின் குடியிருப்புக்குள் புகுந்த சருகு புலி ஒன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அழிவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதுடன் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த சருகு புலி, அண்மைக் காலமாக குடியிருப்பு பகுதிகளில் நடமாடி கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளை வேட்டையாடி வந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு கிராம மக்கள் மற்றும் சாவகச்சேரி காவல்துறையினருடன் இணைந்து.மேற்கொண்ட நடவடிக்கையின் போது குறித்த சருகு புலி பாதுகாப்பாகப் பிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில், கிளிநொச்சியில் இருந்து மயக்கமருந்து மற்றும் கொண்டு செல்லும் கூடு போன்ற  உபகரணங்கள் இன்றி வந்தவர்கள் நாளை வருவதாக கூறி செல்லமுற்பட்ட வேளை ஊரவர்கள் குழப்பம் அடைந்ததை அடுத்து, மற்றுமொரு வனஜீவராசிகள்…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

உக்ரைன் போர் ஒரு தீர்மானகரமான திருப்புமுனையில்

உக்ரைன் போர் ஒரு தீர்மானகரமான திருப்புமுனையில் உக்ரைனின் ஏவுகணை இலட்சியங்கள், உறைந்த போர்முனைகள், நேட்டோ விரிவாக்கம் மற்றும் அமைதியின் நிச்சயமற்ற எதிர்காலம் ⊰❉⊱══════════════════⊰❉⊱ எழுதியவர் ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ அறிமுகம்: புதிய கட்டத்தை நோக்கி நகரும் போர் ரஷ்யா–உக்ரைன் போர் 2022 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து மிகவும் முக்கியமான மற்றும் தீர்மானகரமான கட்டத்தை தற்போது அடைந்துள்ளது. போர்க்களத்தில் கடுமையான மோதல்கள் தொடர்ந்தாலும், அதே நேரத்தில் மாஸ்கோ, கீவ், பிரஸ்ஸல்ஸ், வாஷிங்டன் மற்றும் நேட்டோவுக்கு இடையே ஒரு தீவிரமான இராஜதந்திரப் போட்டியும் உருவாகியுள்ளது. உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி தற்போதைய போர்முனைகளை உறைய வைப்பதற்கான சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்தியுள்ளதுடன், உக்ரைன் தனது சொந்த பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்தை வேகமாக முன்னெடுத்து வருவது…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகியவை நடைபெறும் திகதிகளை இலங்கை பரீட்சைத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இவ்வருடத்துக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகதி நடைபெறும். அன்றைய தினம் பரீட்சைக்கான நேர அட்டவணை பின்வருமாறு திட்டமிடப்பட்டுள்ளது: இரண்டாம் பகுதி வினாத்தாள்: முற்பகல் 09.30 மணி முதல் 10.45 மணி வரை. முதலாம் பகுதி வினாத்தாள்: முற்பகல் 11.15 மணி முதல் பிற்பகல் 12.15 மணி வரை.இதனைத் தொடர்ந்து, 2026ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகி, செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இவற்றுக்கான விரிவான கால அட்டவணையும் பரீட்சைத் திணைக்களத்தினால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளமை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மூடப்பட்டுள்ள உப்புமால் வீதியைத் திறந்து மக்கள் பாவனைக்கு கையளியுங்கள் – ரவிகரன்

மூடப்பட்டுள்ள உப்புமால் வீதியைத் திறந்து மக்கள் பாவனைக்கு கையளியுங்கள் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிற்பாடு மூடப்பட்டுக் காணப்படுகின்ற முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு அருகிலுள்ள உப்புமால் வீதியைத் திறந்து மக்கள் பாவனைக்காக கையளிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு அருகில் இருந்த உப்புமால் வீதி தற்போது பயன்படுத்தப்படாது மூடப்பட்டுக் காணப்படுகின்றது. கடற்கரைப் பகுதிகளில் இயற்கை அனர்த்தங்கள் ஏதேனும் ஏற்பட்டால், அந்தந்தப் பகுதிகளிலுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு தேவையான ஒரு வீதியாகவும் அந்த வீதி காணப்படுகின்றது. எனவே மூடப்பட்டுள்ள அவ்வீதியைத் திறந்து மக்கள் பாவனைக்காக விடுமாறு இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் வலியுறுத்தப்பட்டது. இதன்போது முல்லைத்தீவுமாவட்ட…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் திருத்தவேலைகளைத் துரிதப்படுத்துமாறு ரவிகரன்

தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் திருத்தவேலைகளைத் துரிதப்படுத்துமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து விஜயரத்தினம் சரவணன் தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் திருத்த வேலைகளைத் துரிதப்படுத்துமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற ஊறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் விபரங்கள் மத்திய அரசிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான நிதி கிடைத்தவுடன் பாடசாலைகளின் திருத்த வேலைகள் விரைவாக அரம்பிக்கப்படுமெனவும் வடக்குமாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் பதிலளித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தித்வா புயலினால் முல்லைத்தீவு கல்விவலயத்தில் 32பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகளிலிருந்து அறியக்கூடியதாகவுள்ளது. அதில் 09பாடசாலைகளின் திருத்த வேலைகள் 2025இல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தோடு இந்த ஆண்டில் 15பாடசாலைகள் திருத்த வேலைகளுக்காக உள்ளீர்க்கப்பட்டிருந்தன. அதாவது சிறு திருத்த வேலைகளுக்காக  ஒதுக்கப்பட்ட நிதியில்தான் அந்த…

மேலும் படிக்க