தாயகச் செய்தி 

யாழ். சுன்னாகம் பகுதியில் தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயம்

யாழ். சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த சம்வம் நேற்று(23.03.2026) இடம்பெற்றுள்ளது.இது குறித்து மேலும் தெரியவருகையில்,இணுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு உடுவில் – மல்வம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவருடன் திருமணம் செய்துக்கொண்டுள்ளார். பின்னர் அங்கு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மனைவியை விட்டுவிட்டு இணுவில் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.இந்நிலையில் இதுகுறித்து கேட்பதற்காக அந்த பெண்ணின் உறவினர்கள் மூவர் இணுவில் பகுதியில் உள்ள குறித்த நபரின் வீட்டுக்கு சென்றுள்ளனர். இதன்போது குறித்த நபருக்கும் பெண்ணின் உறவினர்களுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. வீட்டுக்கு உள்ளே சென்ற நபர் புகையிலை வெட்டும் கத்தியை எடுத்து வந்து மூவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த தாக்குதலில் பெண் வீட்டை சேர்ந்த இருவர் படுகாயமடைந்ததுடன் மற்றையவர் சாதாரண காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையில் அவர்களும் குறித்த…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வெறுப்பு பேச்சுக் களை பேசும் தமிழ் மற்றும் அரசியல் வாதிகளுக்கு எதிராக போராட்டம்

வெறுப்பு பேச்சுக்களை பேசும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் போராட்டமொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்று காலை ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், இனவாதம் மற்றும் பிரதேச, சாதிய வாதங்களை பேசும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள், நாட்டின் சமூக ஒற்றுமை, ஜனநாயக பண்புகள் மற்றும் மக்கள் பாதுகாப்பை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பிலுள்ள அரசியல் பிரதிநிதிகள், சமீபத்தில் பொதுத் தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து எங்களது ஆழ்ந்த கவலையையும் கடுமையான கண்டனத்தையும் வலியுறுத்துகிறோம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் மனித மரியாதைக்கு எதிரான சொற்கள் பயன்படுத்தப்படுவது எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இத்தகைய வெறுப்பு தூண்டும் பேச்சுக்கள் சமூகங்களுக்கிடையேயான நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், பிரதேச மற்றும் இன அடிப்படையிலான…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

பாணின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானம்.!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின் புதிய விலை 130 ரூபாவாகும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஏனைய அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளையும் இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாவினால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

அழைப்பின் பேரில் ஈரானியக் கப்பல் ‘டெனா’ (DENA), இலங் கைக்கு வந்ததாக அலிரெசா தொல் கோஷ் தெரிவிப்பு.

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டெனா’ (DENA), இலங்கையின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்ததாக இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரெசா தொல்கோஷ் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள ஈரானியத் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், அந்தக் கப்பல் எந்தவொரு இராணுவ நோக்கத்திற்காகவும் நாட்டிற்குள் வரவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதன்படி, இலங்கையின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் வந்த கப்பலை, அமெரிக்கா எந்தவித முன்னறிவிப்பும் இன்றித் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில் 104 பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களில் பெரும்பாலானோர் இராணுவ சார்பற்ற ஓர் இசைக் குழுவின் உறுப்பினர்கள் ஆவர். அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீதான ஈரானின் தாக்குதல்கள், அந்த அண்டை நாடுகளின் இறையாண்மையை மீறுபவை அல்ல என்பதை வலியுறுத்த வேண்டும்…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

கத்தியின் முனையில் வளைகுடா: அமெரிக்கா–ஈரான் போர், ஹார்முஸ் நீரிணை நெருக்கடி மற்றும் ரஷ்யா–சீனா காரணி

கத்தியின் முனையில் வளைகுடா: அமெரிக்கா–ஈரான் போர், ஹார்முஸ் நீரிணை நெருக்கடி மற்றும் ரஷ்யா–சீனா காரணி ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுத்து: ✒️ ஈழத்து நிலவன் தமிழ் தேசிய வரலாற்றாசிரியர் | சர்வதேச அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ துணைத்தலைப்பு: ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் டிரம்ப் 48 மணிநேர காலக்கெடுவை விதித்துள்ள நிலையில், தெஹ்ரானுக்கு புதின் மீண்டும் உறுதி அளித்துள்ளார். எண்ணெய் சந்தைகள் அதிர்கின்றன; பிராந்தியம் ஒரு பலமுனை மோதலை நோக்கி நகர்கிறது. இது ஈரானைப் பற்றிய போர் மட்டுமல்ல தற்போதைய அமெரிக்கா–ஈரான் மோதல் மிகவும் ஆபத்தானதும் கணிக்க முடியாததுமான கட்டத்தை எட்டியுள்ளது. வாஷிங்டன், இஸ்ரேல் மற்றும் தெஹ்ரான் இடையேயான நேரடி இராணுவ மோதலாகத் தொடங்கிய இந்தச் சிக்கல், இப்போது ரஷ்யா, சீனா, வளைகுடா நாடுகள், ஐரோப்பிய சக்திகளின் தயக்கம், கடல் வர்த்தக வழித்தடங்கள் மற்றும்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கொள்கலன் போக்கு வரத்து கட்டணங் களை உயர்த்த தீர்மானம்.

நாட்டில் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, கொள்கலன் போக்குவரத்து கட்டணங்களை உயர்த்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்தின் தீர்மானத்தின்படி, இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் போக்குவரத்து கட்டணங்கள் 20 சதவீதத்தினால் (20%) அதிகரிக்கப்பட்டுள்ளன. எரிபொருள் விலையேற்றத்தினால் ஏற்படும் மேலதிக செலவினங்களைச் சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.இதேவேளை, இலங்கை சரக்கு போக்குவரத்து சேவைகள் சங்கமும் (SLFFA) கட்டண அதிகரிப்பு குறித்துத் தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்தச் சங்கத்தின் செயலாளர் இநாம் கபூர் தெரிவித்துள்ள முக்கிய விடயங்கள்: தாமதக் கட்டணங்களுடன் ஒப்பிடுகையில், கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் 350% முதல் 400% வரையான பாரிய அளவில் அதிகரிக்கக்கூடும். ஒரு கொள்கலனை விடுவிப்பதற்கு குறைந்தது 4 முதல் 5 நாட்கள் வரை ஆகிறது. இந்தக் காலப்பகுதியில் ஒரு…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

ஊரெழு பகுதியில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த 5,900 லீட்டர் எரிபொருள் மீட்பு

ஊரெழு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் களஞ்சியசாலை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவான எரிபொருட்களை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று மீட்டனர். யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பொறுப்பதிகாரி பிறேமதிலகா தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் ஊரெழு பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பல்பொருள் அங்காடியின் களஞ்சியசாலையில் அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.இந்தச் சோதனையின் போது, பாரிய பரல்களில் (Barrels) அடைத்து வைக்கப்பட்டிருந்த பின்வரும் எரிபொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன: டீசல் 4,700 லீட்டர், பெற்றோல்: 800 லீட்டர், மண்ணெண்ணெய்: 400 லீட்டர்சட்டவிரோத எரிபொருள் இருப்பு வைக்கப்பட்டிருந்தமை தொடர்பாக சம்பவ இடத்தில் இருந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விசாரணைகளின் நிறைவில், கைப்பற்றப்பட்ட எரிபொருட்கள்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற இளைஞர் இந்தியா வில் வைத்து கைது

யாழ்ப்பாணத்திலிருந்து நேபாளம் ஊடாக இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற இளைஞர் ஒருவர், மீண்டும் இலங்கை திரும்ப முற்பட்ட வேளையில் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். குடத்தனைப் பகுதியைச் சேர்ந்த மூவர், கடந்த ஜனவரி மாதம் சுற்றுலா விசா மூலம் நேபாளத்திற்குப் பயணித்துள்ளனர். அங்கிருந்து போலிக் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி இத்தாலிக்குச் செல்வதே இவர்களது திட்டமாக இருந்துள்ளது. நேபாளத்தில் வைத்து போலிக் கடவுச்சீட்டுகளைப் பெற்று இத்தாலிக்குப் பயணிக்க முற்பட்ட போது, அவர்களில் இருவர் அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, அவர்களுடன் சென்ற மற்றுமொரு இளைஞர் அங்கிருந்து தப்பி இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளார். இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதிக்கு வந்தடைந்த மேற்படி இளைஞர், அங்கிருந்து படகு மூலம் மீண்டும் இலங்கைக்குத் தப்பி வர முயன்றுள்ளார். இதன்போது இந்தியப் பாதுகாப்புப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டு, தற்போது…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

விமான கட்டணங்கள் இரண்டு மடங்காக அதிகரிக்கக் கூடும்! ஜனிதா ருவன் கொடித்துவக்கு

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால், இலங்கையில் விமான கட்டணங்கள் முந்தைய நிலையை விட இரண்டு மடங்காக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.இது குறித்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனிதா ருவன் கொடித்துவக்கு கருத்து வெளியிடுகையில், சர்வதேச சந்தையில் ஒரு கலன் விமான எரிபொருளின் விலை 2.25 டொலரிலிருந்து சுமார் 4 டொலராக உயர்ந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை (16) நிலவரப்படி, இலங்கையிடம் 28 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு காணப்பட்டது. தற்போது சுமார் 21 நாட்களுக்குத் தேவையான இருப்பு உள்ளது. ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் ஒரு எரிபொருள் கப்பல் வரவுள்ளது. அத்துடன் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் மற்றுமொரு கப்பல் வரவுள்ளதால், விநியோகத் தடைகள் ஏற்படாது என தெரிவித்தார். இதேவேளை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

காற்றாலை மின்சாரக் கேபிள்களில் சிக்கி 2 பிளமிங்கோ பறவைகள் உயிரிழப்பு

மன்னார் மாவட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து வருகை தந்த வெளிநாட்டு பறவை இனமான பிளமிங்கோ (Flamingo) பறவைகள் 3 வங்காலை பறவைகள் சரணாலய பகுதி ஊடாக அதி வலு கொண்ட காற்றாலை மின்சாரம் கொண்டு செல்லும் கேபிள்களில் சிக்கி விபத்துக்குள்ளாகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளாகிய பறவைகளில் 2 உயிரிழந்த நிலையிலும், ஒன்று பலத்த காயமடைந்த நிலையிலும் மன்னார் மாவட்ட வனவிலங்குப் பாதுகாப்பு திணைக்களத்தில் வைக்கப்பட்டுள்ளது.அத்தோடு காயமடைந்த பறவைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் உரிய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.தற்போது வெளிநாட்டு பறவைகள் மன்னார் தீவு பகுதிக்கு வருகை தரும் காலமாக உள்ளது. இந்நிலையில் வருகை தந்த பறவைகளில் மூன்று பறவைகள் மன்னாரில் காற்றாலை மின்சாரத்தை கொண்டு செல்லும் கேபிள்களில் சிக்கி விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டுப் பறவைகளான பிளமிங்கோ (Flamingo) போன்றவற்றை நேரில் காண்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்…

மேலும் படிக்க