செய்திகள் தாயகச் செய்தி 

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது. குறித்த இளைஞனின் சடலம் விடியல் விளையாட்டு மைதான கிணற்றில் இருந்து நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு 10ம் வட்டாரம் பகுதியில் வசித்து வரும் 24 வயதுடைய பாலசுப்பிரமணியம் சாம்சன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த 25 ஆம் திகதி இரவு சுமார் 7.30 மணியளவில், குறித்த இளைஞன் வீட்டிற்கு வந்த நபர் ஒருவர் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் குறித்த இளைஞனை ஏற்றி சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதன் பின்னர் அவர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும், இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் அவரது அம்மா, புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு பதிவு செய்திருந்தார். குறித்த முறைப்பாட்டையடுத்து சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் காணாமல் போன…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

முல்லை கடற்கரையில் மாபெரும் பட்டத்திருவிழா;

முல்லை கடற்கரையில் மாபெரும் பட்டத்திருவிழா; முல்லைத்தீவு சுற்றுலாக் கடற்கரையில் 25.01.2026 நேற்றையதினம். மாபெரும் பட்டத்திருவிழாஇடம்பெற்றது. அந்தவகையில் வட்டுவாகல் புலம்பெயர் உறவுகள் மற்றும் வட்டுவாகல் கிராமமக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த மாபெரும் பட்டத்திருவிழா நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார். அந்தவகையில் மரபுவழியில் விருந்தினர்களது வரவேற்புடன் தொடங்கிய இந்நிகழ்வில் தொடர்ந்து மங்கலவிளக்கேற்றல் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து பட்டத்திருவிழாவிற்கான பட்டங்கள் விருந்தினர்களால் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பட்டத்திருவிழா இனிதே ஆரம்பித்தது. அந்தவகையில் மிகவும் பெருந்திரளான மக்கள் இந்தப் பட்டத்திருவிழாவில் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் முல்லைத்தீவு கடற்கரையின் வான்பரப்பானது அழகிய வண்ணப் பட்டங்களால் நிறைந்திருந்தது. அந்தவகையில் இந்த மாபெரும் பட்டத்திருவிழாவில் விருந்தினர்களாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன்,. கரைதுறைப்பற்று பிரதேசசபையின் செயலாளர் திருமதி. இராஜயோகினி ஜெயக்குமார், கரைதுறைப்பற்று உதவிப் பிரதேசசெயலாளர் எனப் பலரும்…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

பிரித்தானிய குடிவரவு அமலாக்கம் – 2026 உள்ளூர் அளவிலான ஒடுக்குமுறைகள்,

பிரித்தானிய குடிவரவு அமலாக்கம் – 2026 உள்ளூர் அளவிலான ஒடுக்குமுறைகள், தேசியக் கட்டுப்பாடுகள் மற்றும் புதிய கைது கட்டமைப்பு ⧉═══════✦═══════⧉ அறிமுகம்: ஒரு புதிய அமலாக்கச் சகாப்தம் 2026-ஆம் ஆண்டுக்குள், ஐக்கிய இராச்சியம் குடிவரவு அமலாக்கத்தில் ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு காலத்தில் உள்துறை அமைச்சகத்தின் (Home Office) மையப்படுத்தப்பட்ட நடவடிக்கையாக மட்டுமே இருந்த இந்த அமைப்பு, இப்போது உள்ளூர் அதிகாரிகள், காவல்துறை, எல்லை முகமைகள், வேலை வழங்குநர்கள், வீட்டு உரிமையாளர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட ஒரு பல்முனை அமலாக்க அமைப்பாக மாறியுள்ளது. குடிவரவு கட்டுப்பாடு என்பது இனி எல்லை நுழைவுப் புள்ளிகளுடன் (Ports of Entry) முடிவடைவதில்லை. அது தங்குமிடம், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதார சேவைகள் மற்றும் உள்ளூர் நிர்வாகம் என சமூகத்தின் அனைத்து அடுக்குகளிலும் ஆழமாகப்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வு.

– உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக USD 5,000 எல்லையை கடந்துள்ளது. இதன் தாக்கம் இலங்கையிலும் தெளிவாகப் புலப்படுகிறது; இன்று கொழும்பு பெட்டா சந்தையில் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.🇱🇰 இலங்கை சந்தை நிலவரம் இன்றைய விலை (ஜனவரி 26, 2026): • 24 காரட் சவரன்: ரூ. 362,200 • 22 காரட் சவரன்: ரூ. 397,000 • விலை உயர்வு: ஒரு சவரனுக்கு சுமார் ரூ. 12,000 உயர்வு. • முன்னறிவிப்பு: பொருளாதார நிபுணர்கள் 2026 இறுதிக்குள் தங்க விலை USD 5,500 வரை செல்லக்கூடும் என கணிக்கின்றனர். செட்டியார் தெரு தங்க சந்தையின் தகவல்களுக்கு அமைய கடந்த வௌ்ளிக்கிழமை (23) ரூ. 385,000 ஆக காணப்பட்ட 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்றைய தினம் ரூ.…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

சட்டவிரோதமாக மணல் அகழ்வில் மூவருக்கு ரூ. 1 இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம்

சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டு கைப்பற்றப்பட்ட 3 உழவு இயந்திரம் உட்பட மூவருக்கு ரூ. 1 இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம் விதித்து சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறகர் பகுதியில் அனுமதி வழங்கப்படாத இடத்தில் மண் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கடந்த வியாழக்கிழமை(22) சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பொலிஸ் குழுவினரும் மல்வத்தை விசேட அதிரடிப்படையினரும் இணைந்து அப்பகுதியை சுற்றி வளைத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் போது மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் தப்பி செல்வதற்காக உழவு இயந்திரத்துடன் வீதி வழியாக சென்ற போது குறித்த சோதனை நடவடிக்கையில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதுடன் 3 உழவு இயந்திரங்கள் உட்பட 3 சந்தேகநபர்களையும் மணலுடன் கைது செய்து சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. பின்னர்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

வவுனியாவில் காவல்துறையினரை மோதி தள்ளிய வாகனம்

வவுனியா ஈரட்டை, களுகுன்னமடுவ பகுதியில் இன்று 24 இடம்பெற்ற சம்பவம் .கட்டளையை மீறி பயணித்த சிறிய லொறி ஒன்றை காவல்துறை அதிகாரிகள் இருவரும் பின்தொடர்ந்து சென்றபோதே, லொறி சாரதி  காவல்துறை அதிகாரிகளை விபத்துக்குள்ளாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாககாவல்துறையினர்  தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளை விபத்துக்குள்ளாக்கிய போது  காவல்துறை அதிகாரிகள் இருவரும் தூக்கி வீசப்பட்டு வீதியின் ஒரு ஓரத்தில் விழுந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் லொறியில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட காட்சியும் பின்னால் வந்த வாகனத்தில் இருந்த ஒருவரின் கையடக்கத் தொலைபேசியில் பதிவாகியிருந்தது. விபத்தில் காயமடைந்த இரண்டு  காவல்துறையினரை தற்போது வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூஓய பாலத்திற்கு அருகிலுள்ள இராணுவ முகாம் திசையில் சந்தேகநபர் தப்பிச் சென்றுகொண்டிருந்த போது, இராணுவத்தினர் அவரைக் கைது செய்து  காவல்துறையினரிடம்.  ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் லொறியும் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தைப்…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

போரின் சிவப்புக் கோடுகள்-ரஷ்யா, டொன்பாஸ் மற்றும் இராஜதந்திர மாயைகளின் சரிவு

போரின் சிவப்புக் கோடுகள் ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ ரஷ்யா, டொன்பாஸ் மற்றும் இராஜதந்திர மாயைகளின் சரிவு ✦ சமரசமற்ற கோடுகளால் வரையறுக்கப்பட்ட ஒரு போர் ✦ உக்ரைன் போரில் ரஷ்யா தனது கடுமையான புவிசார் அரசியல் கோட்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு நிபந்தனையை அது மிகத் தெளிவாக முன்வைத்துள்ளது: கிழக்கு டொன்பாஸ் (Donbas) பிராந்தியத்திலிருந்து உக்ரைன் படைகள் முழுமையாக விலகாதவரை, அமைதி சாத்தியமற்றது. இந்த அறிவிப்பு வெறும் வாய்மொழி மிரட்டல் அல்ல — இது ஒரு மூலோபாய ரீதியான “சிவப்புக் கோடு” (Red Line). டொன்பாஸை ஒரு பேரம் பேசும் பொருளாக ரஷ்யா பார்க்கவில்லை. மாறாக, தனது தேசிய பாதுகாப்பு, இராணுவ வியூகம் மற்றும் அரசியல் நம்பகத்தன்மையோடு பின்னிப்பிணைந்த நிரந்தர பிராந்திய இலக்காகவே மாஸ்கோ அதனை கருதுகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

கிளிநொச்சியில் இரண்டு வெடிக்காத குண்டுகள்.

கிளிநொச்சியில் இரண்டு வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பரந்தன் உமையாள்புரம் கிராம சேவையாளர் பிரிவின் விளாவோடை பகுதியில் உள்ள நெல் வயல் சாலையின் அருகே நேற்று (23-01-2026) இக்குண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. குறித்த பகுதியில், 60 மிமீ வெடிக்காத இரண்டு குண்டுகள் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர். இதையடுத்து, அவர்கள் இச்சம்பவம் தொடர்பாகக் கிளிநொச்சி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி காவல்துறையினர், குறித்த இடத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்தியதுடன் வெடிக்காத இரு குண்டுகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

பாலத்திலிருந்து குதித்த தாழங்குடா பகுதியைச் சேர்ந்த யுவதி உயிரிழப்பு

மட்டு கல்லடிப் பாலத்திலிருந்து குதித்த தாழங்குடா பகுதியைச் சேர்ந்த யுவதி உ+யிரிழப்பு மட்டக்களப்பு தலைமையக  காவல்துறை.பிரிவிற்குட்பட்ட கல்லடி பழைய பாலத்தில் இருந்து இன்றிரவு (23) 7 மணியளவில் குதித்த யுவதி ஒருவரை பிரதேச இளைஞர்கள் மற்றும் . காவல்துறையினர் மீட்டெடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தாழங்குடா சமூர்த்தி வங்கி வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளங்கோ விதுசாயினி எனும் யுவதி என அடையாளங்காணப்பட்டுள்ளது இவர் கடந்த வருடம் உயர் தர பரீட்சை எழுதியவர் எனவும் தெரிய வருகின்றது. மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக காவல்துறை. மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

வேகக் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்து

கிளிநொச்சி நோக்கி பயணித்த வேன் கட்டுப்பாட்டை இழந்து குடமுருட்டி பாலத்தில் மோதி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வேகக் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று காலை 9.30 மணியளவில் பரந்தன் பூநகரி வீதியில் இடம்பெற்றுள்ளது. விபத்திற்குள்ளான குறித்த வாகனத்தில் பயணித்த மூவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க