தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தம்பல காமம் பிரதேச செயலாளராக கந்தவனம் சதிசேகரன் நியமிக்க ப்பட்டுள்ளார்.

திருகோணமலை , தம்பலகாமம் பிரதேச செயலாளராக இலங்கை நிருவாக சேவை அதிகாரியான கந்தவனம் சதிசேகரன்  நியமிக்கப்பட்டுள்ளார். அவர்  (13) வெள்ளிக்கிழமை  உத்தியோகபூர்வமாக கடமையினை பொறுப்பேற்றார்.தம்பலகாமம் பிரதேச செயலாளராக இருந்து வந்த  ஜெ.ஸ்ரீபதி திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க  அதிபராக பதவி உயர்வு பெற்றுச் சென்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டார். காரைதீவைச் சேர்ந்த சதிசேகரன்( சதீஷ்) இறுதியாக லாகுகல உதவிப் பிரதேச செயலாளராக பணியாற்றியிருந்தார்.புதிதாக நியமிக்கப்பட்ட பிரதேச செயலாளர் சதீஷ் , காரை தீவில் பயின்று,  திருகோணமலை இலங்கைத்துறை முகத்துவாரம் இந்து கல்லூரியில் 2012 முதல், ஆசிரியராக முதல் நியமனம் பெற்றார். பின்னர், காரைதீவு பிரதேச செயலகத்தில் 2013- 2015 காலப் பகுதியில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வந்தவேளை  இலங்கை நிருவாக சேவை போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று  இலங்கை நிருவாக சேவையில் இணைந்தார்.2015- 2019 காலப்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

10 சந்தேகநபர்களை, 7 நாட்கள் தடுப்புக் காவலில் புதுக்கடை நீதவான் நீதிமன்றம்

தென் கடற்பரப்பில் சுமார் 10 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மற்றும் நவீன ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களை, 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 12ஆம் திகதி ஆழ்கடலில் இரண்டு மீன்பிடி படகுகளை முற்றுகையிட்ட கடற்படையினர், அவற்றில் இருந்த 10 சந்தேகநபர்களையும் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் திக்ஓவிட்ட துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். கைப்பற்றப்பட்ட படகிலிருந்து 176 கிலோ ஹெரோயின் மற்றும் 478 கிலோ ‘ஐஸ்’ (மொத்தம் 654 கிலோ).8 பிஸ்டல்கள், 2 டி-56 ரக துப்பாக்கிகள், ஒரு எம்-16 ரக துப்பாக்கி மற்றும் அவற்றுக்கான மெகசின்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன. 22 முதல் 49 வயதுக்கு இடைப்பட்ட இரணவில, மஹவெவ, நீர்கொழும்பு, தங்காலை மற்றும் கந்தர உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஏற்றிய விமானம் ஈரானுக்கு புறப்பட்டது.

இலங்கையின் தெற்கே கடலில் ‘IRIS DENA’ கப்பல் மீது மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க தாக்குதலில் இறந்த 84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஏற்றிய விமானம் ஈரானுக்கு புறப்பட்டது.மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து குறித்த விமானம் நேற்று இரவு 09.29 மணிக்கு (13) புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறத இலங்கையில் உள்ள ஈரானிய தூதரகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் இறந்த மாலுமிகளின் உடல்கள் இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளன.கடந்த 4 ஆம் திகதி காலி துறைமுகத்திலிருந்து 40 மைல் தொலைவில் சுமார் 180 பேருடன் ஒரு ஈரானிய கப்பல் தாக்குதலுக்கு உள்ளானது.அதனைதொடர்ந்து, சுமார் 84 மாலுமிகளின் உடல்கள் மீட்கப்பட்டதுடன், 35 பேர் உயிருடன் மீட்கப்பட்டு கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஒரு டார்பிடோவைப் பயன்படுத்தி சர்வதேச கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக அமெரிக்க உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ரஷ்யா விடமிருந்து எரிபொருளைப் பெற்றுக் கொள்வது குறித்து விரிவாகக் கலந்துரை யாடல்

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யனுக்கும் (Levan S. Dzhagaryan), வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சருக்கும் இடையிலான அவசர சந்திப்பொன்று இன்று (13) நண்பகல் அமைச்சில் நடைபெற்றது. ​மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக எரிபொருள் விநியோகக் கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குத் தீர்வாக ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. ​அதற்கமைய, இலங்கையின் எரிபொருள் விநியோகத்தைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக, ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வது குறித்து ரஷ்யத் தூதுவருடன் வெளிநாட்டு விவகார அமைச்சர் விரிவாகக் கலந்துரையாடினார். ​இலங்கையின் இந்தக் கோரிக்கையை உடனடியாக ரஷ்ய அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்துவதற்குத் தூதுவர் இணக்கம் தெரிவித்தார். அத்துடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து இதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தருவதாகவும் அவர் உறுதியளித்தார். ​இலங்கைக்குத் தேவையான…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஹிங்கு ரங்கொட பகுதியில் இராணுவ சீருடை , கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் ஒருவர் கைது

ஹிங்குரங்கொட பகுதியில் இராணுவ சீருடை , கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் என்பனவற்றை தன்வசம் வைத்திருந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை விசேட பொலிஸ் அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். அரச புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய விசேட பொலிஸ் அதிரடிப் படையின் அரலகங்வில முகாம் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரை கைது செய்துள்ளனர். சந்தேக நபரான முன்னாள் இராணுவ வீரரின் வீட்டில் ஒரு கைக்குண்டு , பல்வேறு வகையான வெடிபொருட்கள், வெற்றுத் தோட்டாக்கள் மற்றும் 36 பயிற்சி தோட்டாக்கள் பல சீருடைகள் , நான்கு கெமா தொப்பிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக விசேட பொலிஸ் அதிரடிப் படையினர் தெரிவித்தனர். ஹிங்குரங்கொட கிம்புலாவல பகுதியில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைத்திருந்த நிலையில் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட இந்த இராணுவ உபகரணங்கள்…

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

ஈரானின் சட்டபூர்வ உரிமை களை மதித்து, இழப்பீடு களை வழங்க! ஈரான் ஜனாதிபதி

போரை நிறுத்த வேண்டுமானால் ஈரானின் சட்டபூர்வ உரிமைகளை மதித்து,இழப்பீடுகளை வழங்க இஸ்ரேலும் அமெரிக்காவும் முன்வர வேண்டுமென ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார். போரை நிறுத்துமாறு தொடர்ச்சியாக விடப்படும் வேண்டுகோளுக்கு பதிலளித்துள்ள ஈரான் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;எதிர்கால ஆக்கிரமிப்பைத் தடுக்க உறுதியான சர்வதேச உத்தரவாதங்கள் அவசியம். அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் இருப்பையும் உரிமையையும் அங்கீகரிக்க வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட காசா பகுதியிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும்.வலிந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் ஏற்பட்ட அழிவுகளுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.இவற்றை செய்தால் மாத்திரமே போரை நிறுத்துவது சாத்தியப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.இரு தரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்தாலும் ஈரானின் நிலைப்பாடு இன்னும் மாறாதுள்ளதையே இந்நிபந்தனைகள் வௌிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.அயல்நாடுகளை தாக்குவதில்லை என ஈரான் அறிவித்த பின்னரும் சில நாடுகள் தாக்கப்படுவதை சுட்டிக்காட்டிய ஈரான் ஜனாதிபதி, சில சதிகளை அரங்கேற்றி போரின் போக்கை மாற்றுவதற்கு அமெரிக்கா…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கைக்குண்டு, தோட்டாக்கள் என்பவற்றினை வைத்திருந்த முன்னாள் இராணுவ வீரர் கைது

இராணுவ சீருடை மற்றும் கைக்குண்டு, தோட்டாக்கள் என்பவற்றினை வைத்திருந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். அரச புலனாய்வு துறை அதிகாரிகளினால் கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அரலகங்வில முகாம் அதிகாரிகளினால்நேற்று (10) ஹிங்குரன்கொட பொலிஸ் பிரிவின் கிம்புலாவள பகுதியிலுள்ள வீடொன்றில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன் இராணுவ சீருடை மற்றும் கைக்குண்டு,தோட்டாக்களை அதிரடிப்படையினர் செய்யப்பட்டவர் 46 வயதுடைய ஹிங்குரன்கொட,கிம்புலாவள பகுதியை வசிப்பிடமாக கொண்ட முன்னாள் இராணுவ வீரர் என்பது தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் பொலிஸ் அதிரடிப்படையினர் சந்தேகநபரை ஹிங்குரன்கொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஹிங்குரன்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் அதிகாரி எல்லேபொள தலைமையில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் ஹிங்குரன்கொட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

அந்தோனியார் ஆல யத்திற்கு ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து விபத்துஉயிரிழந் தோரின் எண்ணி க்கை அதிகரித்து ள்ளது. 

யாழ்ப்பாணம் – பாலைதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பாலைதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவிற்காக கடந்த 06ஆம் திகதி குருநகர் இறங்கு துறையில் இருந்து பக்தர்களை ஏற்றி சென்ற படகு விபத்துக்கு உள்ளானது. இதன்போது கடலில் மூழ்கி அன்றைய தினம் இருவர் உயிரிழந்ததுடன், சிறுவன் உள்ளிட்ட 13 பேர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த உரும்பிராய் பகுதியை சேர்ந்த 64 வயதுடைய எட்வேட் உதயகுமாரி  என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம்  உயிரிழந்துள்ளார். இதேவேளை முன்னதாக  நாவற்குழி பகுதியை சேர்ந்த 57 வயதுடைய  ஸ்டீபன் பிரான்சிஸ், குருநகர், பழைய பூங்கா சாலையை சேர்ந்த  80 வயதுடைய எம். ஜோசப் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து அதிக சுமை காரணமாக…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை பொதுவான செய்திகள் 

அமெரிக்கா-ஈரான்- இஸ்ரேல் போர் 2026: முழு அளவிலான மோதலின் மத்திய கிழக்கு

அமெரிக்கா-ஈரான்-இஸ்ரேல் போர் 2026: முழு அளவிலான மோதலின் விளிம்பில் மத்திய கிழக்கு ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுத்தாக்கம்: ஈழத்து நிலவன் | தமிழ் தேசிய வரலாற்றாளர் & சர்வதேச அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ ◆. ரிஷான் லெட்சியோன் மீது ஏவுகணைத் தாக்குதல்: இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலின் தீவிரம் ரிஷான் லெட்சியோன், இஸ்ரேல் — திங்கட்கிழமை அதிகாலை, ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் இஸ்ரேலின் கடலோர நகரமான ரிஷான் லெட்சியோனில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இடைமறிக்கப்பட்ட ஏவுகணைகளின் சிதறல்கள் குடியிருப்புப் பகுதிகளில் விழுந்ததில் பெண் ஒருவர் காயமடைந்ததுடன், வாகனங்கள் மற்றும் கடைகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மரணத்திற்கு பழிவாங்கும் “ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 4” இன் ஒரு பகுதியாக இதற்கு ஈரான் புரட்சிகர காவல்படை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழில் பெருந் தொகை தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட இருவரை கடற் படையினர் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து பெருந்தொகை தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்கு படகொன்றில் தங்கம் கடத்தி செல்லப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த படகினை கடலில் வழிமறித்து கடற்படையினர் சோதனையிட்ட வேளை படகில் இருந்து 6 கிலோ 85 கிராம் தங்க கட்டிகளை மீட்டுள்ளனர்.அதனை அடுத்து படகில் இருந்து இருவரையும் கடற்படையினர் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட இருவரையும் , மீட்கப்பட்ட தங்கத்தையும் , தங்கத்தை கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட படகினையும் மேலதிக நடவடிக்கைக்காக காங்கேசன்துறை சுங்க அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்

மேலும் படிக்க