தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் ரவிகரன் எம்.பிக்குமிடையில் சந்திப்பு

இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் மெத்தியூ டக்வேர்திற்கும் ரவிகரன் எம்.பிக்குமிடையில் சந்திப்பு இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் மெத்தியூ டக்வேர்த் அவர்களுக்கும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்குமிடையில் 12.05.2026இன்று முல்லைத்தீவு – கள்ளப்பாடு வடக்கு பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது மக்கள் தொடர்பகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட வன்னிப்பிராந்தியத்தில் நிலவும் நிலஆக்கிரமிப்புக்கள், விவசாயிகள் மற்றும் மீனவமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மக்களின் வாழ்வாதார நிலமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. மேலும் இதன்போது முள்ளிவாய்கால் கஞ்சி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

அக்கரைப் பற்று. உதிரம் கொடுப் போம், உயிர் காப்போம்’ இரத்ததான முகாம்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை உட்பட இங்குள்ள இதர வைத்தியசாலைகளில் தற்போது நிலவி வரும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தினரால் அப்பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டு ‘உதிரம் கொடுப்போம், உயிர் காப்போம்’ என்ற தொனிப்பொருளின் கீழ்  இரத்ததான முகாம்  நேற்று நடைபெற்றது. பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில்  பொதுமக்கள் உட்பட பெருமளவு பிரதேச செயலக ஊழியர்கள்  மனமுவந்து தமது உதிரத்தை வழங்க முன்வந்தனர்.வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி டாக்டர் இஷான் குணவர்தன தலைமையிலான மருத்துவக் குழுவினர் தமது இரத்தத்தை வழங்க முன்வந்தோரின் உடல் பரிசோதனைகளை மேற்கொண்டதை அடுத்து அவர்களின் இரத்தத்தை பெற்றுக்கொண்டனர். இரத்தம் வழங்கிய நன்கொடையாளர்களின் இந்த கைங்கரியத்துக்கு தனது  நன்றியையும்  பாராட்டையும்   பிரதேச செயலாளர் அன்சார் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

சகல கிளினிக்கு களும் வழமை போன்று. சத்தியமூர்த்தி

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சகல கிளினிக்குகளும் வழமை போன்று நடைபெறுவதாக  வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சின் துரித நடவடிக்கையின் கீழ் கொழும்பு மத்திய மருந்துக் களஞ்சியத்திலிருந்து மூன்று பாரவூர்திகள் மூலம் மருந்துகள் கொண்டு வரப்பட்டன. இதனால் கொண்டு வரப்பட்ட அனைத்து மருந்துகளும் புதிதாக தற்காலிகமாக அமைக்கப்பட்ட மருந்துக் களஞ்சியத்தில் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டுள்ளன.இதனால் சகல சேவைகளும் வழமைபோன்று நடைபெறுகின்றன. மேலும் ஒரு தொகுதி மருந்துகள் எதிர்வரும் நாட்களில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படவுள்ளன. கிளினிக்குகளுக்கு வருகை தரும் நோயாளிகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளையும் வழங்குவதற்கான முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
தமிழ்நாடு இந்தியா செய்திகள் பொதுவான செய்திகள் 

மு.க.ஸ்டாலினை  சந்தித்து வாழ்த்து பெற்றார்.தமிழக முதல்வராக பொறுப் பேற்றுள்ள விஜய்

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் நேற்று சென்னையில்  முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை  சந்தித்து வாழ்த்து பெற்றார். இச்சந்திப்பு ஸ்டாலினின் இல்லத்தில் இடம்பெற்றது. முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க ஆழ்வார்பேட்டை இல்லத்துக்குச் சென்ற  ஜோசப் விஜய்யை, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்  வாசலுக்கே சென்று ஆரத் தழுவி வரவேற்றார். முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு ஜோசப் விஜய் பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார்.பதிலுக்கு ஸ்டாலினும் ஜோசப் விஜய்க்கு பொன்னாடை போர்த்தினார். உதயநிதி ஸ்டாலின் ஜோசப் விஜய்க்கு புத்தகம்  ஒன்றையும் அன்பளிப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கது இதனையடுத்து முதல்வர் ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறிது நேரம் உரையாடினர். இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, சேகர்பாபு உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.  

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

நிலவு பயணத்தின் பின் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ் II

ஆர்டெமிஸ் II (Artemis II) திட்டத்தின் கீழ் வரலாற்றுச் சிறப்புமிக்க நிலவுப் பயணத்தை மேற்கொண்ட ஒராயன் (Orion) விண்கலம், தனது நிலவு ஆய்வுப் பணிகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளது. அதன்படி, ஒராயன் விண்கலம் இலங்கை நேரப்படி இன்று (11) அதிகாலை 5.30 மணியளவில் கலிபோர்னியாவின் சென் டியாகோ கடற்கரைக்கு அப்பால் உள்ள பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. 10 நாட்கள் கொண்ட இந்த விண்வெளிப் பயணத்தை முன்னெடுத்து, ஒராயன் விண்கலம் கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி நிலவை நோக்கித் தனது பயணத்தை ஆரம்பித்திருந்தது.இந்தத் திட்டத்தின் கீழ், விண்வெளி வீரர்கள் 406,771 கிலோமீட்டர் (252,756 மைல்கள்) தூரத்தைக் கொண்ட நிலவுப் பயணத்தைப் பூர்த்தி செய்துள்ளனர்.மனிதகுலம் விண்வெளியில் இதுவரை பயணம் செய்த அதிகூடிய தூரம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.      

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

புத்தளம் -கற்பிட்டியில் 907 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மீட்பு

புத்தளம் – கற்பிட்டி பங்களாவத்தை மற்றும் சேதவாதீ ஆகிய கடலோரப் பகுதிகளில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 907 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் மீட்கப்பட்டுள்ளன. வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கிவரும் இலங்கை விஜய கடற்படைக் கப்பலின் ஆலங்குடா பிரிவினரால், நேற்று கற்பிட்டியவின் பங்களாவத்தை கடலோரப் பகுதியில் விஷேட தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்தனர். இதன்போது குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான இரண்டு உரப் பைகள் இருந்ததை அவதானித்த கடற்படையினர் அதனை சோதனை செய்தனர். குறித்த உரப் பைகளில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 80 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. மேலும், கற்பிட்டி சேதவாதீ கடற்கரைப் பகுதியில், இலங்கை கடற்படைக் கப்பலான விஜயவுடன் இணைந்து நடத்தப்பட்ட மற்றொரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கைவிடப்பட்ட…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வீட்டு வாடகை தகராறில் முதியவர் கொலை.!

வவுனியா மாவட்டத்தின் கூமாங்குளம் பகுதியில் 72 வயதுடைய முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணைகளில், வீட்டு வாடகை தொடர்பான தகராறே இந்தக் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.கூமாங்குளம் பகுதியில் வசித்து வந்த குறித்த முதியவர், தனது வீட்டின் மலசலகூடத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவர் மரணத்தில் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கினர். சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில், இது இயற்கை மரணம் அல்ல, திட்டமிட்ட படுகொலை என உறுதி செய்யப்பட்டது.இச்சம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். வாடகை பிரச்சினையை மையமாகக் கொண்டு இக்கொலை இடம்பெற்றதாக ஆரம்ப தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போது சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

அடையாள வேலைநிறுத்தம் நிறைவு.

அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்த 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் இன்று (11) காலை நிறைவடைந்ததாக சங்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் கருத்து தெரிவித்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என குறிப்பிட்டார்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வீதி சமிக்ஞைகளை விழிப்புணர்வு நிகழ்வு

வீதி சமிக்ஞைகளை கடைப்பிடிப்பதற்கு யாழ்ப்பாணத்தில் இன்று (10)விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை தடுப்பதற்கும் அது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துமுகமாக யாழ்ப்பாணத்தில் இன்று வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டது.யாழ்பாணம் பொலிசாரும் தன்னார்வ இளைஞர் அமைப்புக்களும் இணைந்து இன்று ஆரிய குளம் சந்தியிலுள்ள வீதிச் சமிக்ஞையில் இந்த விழிப்புணர்வு நிகழ்வை முன்னெடுத்தனர். இதன்போது சந்தியிலுள்ள சமிக்ஞையில் பாதசாரிகள் கடக்கும் கடவையில் அவர்களுக்கு இடையூறாக நிறுத்தியுள்ள வாகனங்களை அகற்றியும் அவர்களை எச்சரித்தும் விழிப்புணர்வில் ஈடுபட்டனர்.இதேவேளை, குறித்த நிகழ்வில் வித்தியாசமான முறையில் இவர்கள் வேடமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வவுனியா, விபத்தில், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் பரிதா பமாக உயிரிழப்பு.

வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பட்டாணிச்சூர் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் மீது, அவ்வழியாகச் சென்ற கனரக வாகனம் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த துவிச்சக்கர வண்டிப் பயணி, உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்  64 வயதுடைய  பாலகுகன்   என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார்.இந்தச் சம்பவம் குறித்து வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க