இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கையில் எந்த வொரு இடத்திலும் எவ்விதமான தமிழ் இனப்படு கொலையும் இடம்பெறவில்லை.!சன்ன ஜயசுமன

இலங்கையில் எக்காலத்திலும், எந்தவொரு இடத்திலும் எவ்விதமான தமிழ் இனப்படுகொலையும் இடம்பெறவில்லை.நாடாளுமன்றத்திற்குள் பயங்கரவாதிகள் நினைவுகூரப்படுவது குறித்தும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசு உடனடியாகத் தமது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் சன்ன ஜயசுமன வலியுறுத்தியுள்ளார். சர்வஜன அதிகாரம் கட்சியின் பொதுச்செயலாளர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ள விசேட கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மூன்று முக்கிய விடயங்கள் குறித்துக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:- “கடந்த மே மாதம் 18ஆம் திகதி வடக்கு மாகாணத்தின் பல இடங்களில் தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றதாகக் கூறி நினைவு தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. எமது நாட்டில் தமிழ் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்பதில்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. தாயகச் செய்தி 

மாகாணசபைத் தேர்தல் உடன் நடத்தப்படுவது அவசியம். ஞானமுத்து ஸ்ரீநேசன்

மாகாண சபை தேர்தலை இழுத்தடிப்பு செய்யாமல் அரசாங்கம் உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். பழைய தேர்தல் முறையில் மாகாணசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என 43 கட்சிகள் ஒன்றிணைந்து முடிவெடுத்திருக்கின்றனர். எனவே, அரசாங்கம் சாக்குப் போக்கு சொல்வதை விடுத்து விரைவாக அதனை நடத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் நேற்று வியாழக்கிழமை(28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஜே. வி. பி எதிர்க்கட்சியில் இருக்கும்போது மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என தெரிவித்திருந்தார்கள். 2018 ஆம் ஆண்டு கலைக்கப்பட்ட மாகாண சபை புதிய தேர்தல் மூலமாக இன்னும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு வரவில்லை. தாங்கள் நினைத்தால் மாகாண சபையை கொண்டு…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு ஜனாதிபதி அனுரா திசநாயக்க.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, தற்போது இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பொது அவசரகால நிலையை மேலும் நீடித்து ஒரு சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் என். எஸ். இந்த நீட்டிப்பு, ஜனாதிபதியால் கையொப்பமிடப்பட்டு, மே 28, 2026 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு எண் 2490/06 மூலம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொதுப் பாதுகாப்பையும் நாட்டின் முறையான செயல்பாட்டையும் உறுதி செய்வதற்கும், பொது வாழ்க்கைக்கு அத்தியாவசியமான விநியோகம் மற்றும் சேவைகளை தடையின்றி பராமரிப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி அந்த வர்த்தமானி அறிவிப்பில் சுட்டிக்காட்டுகிறார்.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

களுத்துறையில் ; துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் உயிரிழப்பு!

களுத்துறை, பள்ளிவாசல் வீதி, வெட்டுமக்கடை பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இதுதொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை சுமார் 8.59 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.காரில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் உடனடியாக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை தொடங்கியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.தாக்குதல் நடத்திய நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

மகா சங்கத்தின் ஒழுக்கக் கட்டுப்பாட்டைப் பேண விரைவில் புதிய சட்டம்! அநுரகுமார

மகா சங்கத்தினர் சங்க சமூகத்தை ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் பேணிச் செல்வதற்குத் தேவையான சட்டங்களை விரைவில் தயாரித்து வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். மாத்தறை, திஹகொட மிதெல்லவல புராதன ரஜமஹா விகாரையில் நேற்று நடைபெற்ற ‘2570 ஆவது ஸ்ரீ புத்த ஆண்டு அரச வெசாக் விழாவின்’ ஆரம்ப நிகழ்வில் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டில் நிலையான பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு மத மறுமலர்ச்சி இன்றியமையாததாகும். உன்னத புத்த சாசனத்தையும் தர்மத்தையும் எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பதற்காக, நமக்குள்ள பொறுப்புக்களைச் சரியாக இனங்கண்டு கைகோர்ப்பதே இந்த வெசாக் புண்ணிய தினத்தில் நாம் எடுக்கக்கூடிய சிறந்த உறுதிமொழியாகும். நாம் ஆன்மிக ரீதியாக வீழ்ச்சியடையும் போதெல்லாம் அதற்கு இணையாகப் பொருளாதார ரீதியாகவும், பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடையும் போது ஆன்மிக ரீதியாகவும் வீழ்ச்சியடைந்திருக்கின்றோம்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

அதிகரித்த டொலரின் பெறுமதி – இலங்கை ரூபா சரிந்தது

அமெரிக்க டொலரின் விற்பனை விலை இலங்கை ரூபாயின் அடிப்படையில் 330 ரூபாயைத் தாண்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று (27) வெளியிடப்பட்ட தினசரி நாணய மாற்று வீத அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 320.40 ரூபாயாகவும், விற்பனை விலை 330.81 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. நேற்று (26) இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 318.32 ரூபாயாகவும், விற்பனை விலை 328.69 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

சாதாரண தரப் பரீட்சை பெறு பேறுகள் -ஜூன் மாத நடுப் பகுதியில்

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் குறித்து கருத்து தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே, பெறுபேறுகள் வெளியாகும் திகதி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என கூறியுள்ளார். கடந்த பெப்ரவரி 17 முதல் 26 வரை நடைபெற்ற இந்தப் பரீட்சைக்கு 4,51,463 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். அவர்களில் 3,82,249 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்களும், 69,214 பேர் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுமாக இருப்பதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இந்தியாவின் அன்பளிப்பு; வடக்கு காவல் நிலையங் களுக்கு 134 வாகனங்கள்!

இந்தியா அரசாங்கம், இந்தியா–இலங்கை நட்பு திட்டத்தின் கீழ் இலங்கை  காவல்துறையினரின் பயன்பாட்டிற்காக 134 ஒற்றை கெப் (Single-Cab) வாகனங்களை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் இன்று (25) உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது. இந்த நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.சுமார் 300 மில்லியன் ரூபாய் பெறுமதியான இந்த வாகனங்கள் வட மாகாணத்திலுள்ள காவல் நிலையங்களில் சேவைக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, எதிர்காலத்திலும் இலங்கைக்கு இதுபோன்ற உதவிகளை வழங்க இந்தியா தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும் என தெரிவித்தார்.அதேவேளை, இந்த அன்பளிப்பை பாராட்டும் வகையில் காவல்துறை.மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்திய உயர்ஸ்தானிகருக்கு நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார். இந்த நிகழ்வில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பிரதியமைச்சர் சுனில் வட்டகல, அமைச்சின் செயலாளர் ரவி சேனவிரத்ன, டிமோ நிறுவனத்தின் பொது முகாமையாளர்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

அடுத்த 24 மணித்தியாலங்களில் வெள்ள அபாயம்! பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் களு கங்கையை அண்மித்த சில தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இங்கிரிய, ஹொரணை, தொடங்கொட, மில்லனிய, களுத்துறை, புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர ஆகிய பகுதிகளில் இந்த நிலைமை உருவாகும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆற்றங்கரையோர மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் சீரற்ற வானிலைக்கு மத்தியில், மண்சரிவு அபாய எச்சரிக்கைகளைப் புதுப்பிப்பதற்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், இன்று (24) முற்பகல் 6.00 மணி முதல் நாளை முற்பகல் 6.00 மணி வரை அமுலில் இருக்கும் வகையில் இந்த எச்சரிக்கைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, தெரணியகல,…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

சீரற்ற வானிலை காரணமாக இதுவரை யில் 28,000க்கும் அதிகமானோர் பாதிப்பு.

சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில் 28,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அந்நிலையம் விடுத்துள்ள புதிய அறிக்கையின்படி, அனர்த்தங்களினால் 7,482 குடும்பங்களைச் சேர்ந்த 28,933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். அங்கு 3,950 குடும்பங்களைச் சேர்ந்த 15,313 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு மரணமும் பதிவாகியுள்ளது. இதற்கு மேலதிகமாக, புத்தளம் மாவட்டத்தில் 1,219 குடும்பங்களைச் சேர்ந்த 4,265 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 1,051 குடும்பங்களைச் சேர்ந்த 4,566 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 1,204 குடும்பங்களைச் சேர்ந்த 4,558 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 141 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேரும், காலி மாவட்டத்தில் 09 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரும் மற்றும் வவுனியா மாவட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும்…

மேலும் படிக்க