உலக அரசியல். கட்டுரை 

ரஷ்யா–உக்ரைன் போர்: ஆபத்தான புதிய கட்டத்தை நோக்கி நகரும் ஐரோப்பா

ரஷ்யா–உக்ரைன் போர்: ஆபத்தான புதிய கட்டத்தை நோக்கி நகரும் ஐரோப்பா தீவிரமடைந்து வரும் போர், மூலோபாய அச்சுறுத்தல்கள், ஐரோப்பியப் பிளவுகள் மற்றும் அமைதிக்கான நிச்சயமற்ற பாதை உலக ஒழுங்கை மறுவடிவமைக்கும் இராணுவ, இராஜதந்திர மற்றும் புவிசார் அரசியல் நகர்வுகளின் விரிவான மதிப்பீடு ⊰❉⊱══════════════════⊰❉⊱ எழுதியவர் ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ அறிமுகம்: தீர்மானகரமான திருப்புமுனையை நோக்கி நகரும் போர் ரஷ்யா–உக்ரைன் போர், 2022 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து பல்வேறு வடிவங்களில் பரிணமித்து வந்தாலும், தற்போது அது மிகவும் ஆபத்தான மற்றும் கணிக்க முடியாத கட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் நிலப்பரப்பைக் கைப்பற்றும் பாரம்பரிய இராணுவ நடவடிக்கையாகத் தோன்றிய இந்த மோதல், இன்று ட்ரோன் தாக்குதல்கள், நீண்ட தூரத் துல்லிய ஏவுகணைத் தாக்குதல்கள்,…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

புதுக்குடியிருப்பு குணா கலைக் கல்லூரியில் மாணவர் மதிப்பளிப்பு நிகழ்வு; ரவிகரன் எம்.பி பங்கேற்பு

புதுக்குடியிருப்பு குணா கலைக்கல்லூரியில் மாணவர் மதிப்பளிப்பு நிகழ்வு; ரவிகரன் எம்.பி பங்கேற்பு முல்லைத்தீவு – குணா கலைக்கல்லூரியில் பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மற்றும் அண்மையில் வெளியாகியுள்ள க.பொ.த சாதாரணதரப் பரீட்சை முடிவுகளின்படி சிறப்புச்சித்தி பெற்ற மாணவர்களையும் மதிப்பளிக்கும் நிகழ்வானது 20.06.2026இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார். இந்நிகழ்வானது விருந்தினர் மற்றும் சாதித்த மாணவர்கள் ஆகியோரது வரவேற்புடன் ஆரம்பமானது. அந்தவகையில் விருந்தினர்களும், சாதனை மாணவர்களும் மலர்மாலை அணிவிக்கப்பட்டு, தவில், நாதஸ்வர இசை முழக்கத்துடன் மலர்தூவி வரவேற்று அழைத்துவரப்பட்டனர். அதனையடுத்து மங்கலவிளக்கேற்றல் இடம்பெற்றதுடன், அதனையடுத்து பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மற்றும் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சிறப்புச் சித்திபெற்ற மாணவர்களும் மதிப்பளிக்கப்பட்டனர். அதனையடுத்து விருந்தினர்களது உரை, மாணவர்களது கலை நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றன. மேலும் இந்நிகழ்வில் விருந்தினர்களாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

நெடுந்தீவில் கடற்படைக்கு ஒரு ஏக்கர் காணி பிடிப்பு..கயேந்திர குமாரின் கேள்வி

நெடுந்தீவில் கடற்படைக்கு ஒரு ஏக்கர் காணி பிடிப்பு..கயேந்திர குமாரின் கேள்வியால் திண்டாடிய நெடுந்தீவு பிரதேச செயலாளர் குழப்பம் விளைவித்த என்பிபி ஆதரவாளர்கள். * பொலிஸார் வரவழைப்பு *அனுர அரசின் போலி வக்குறுதிகள் *யுத்தத்துக்கு பின்னரும் காணி பிடிப்பு தொடர்கிறது. *போலி வாக்குறுதிகளை வழங்கும் அனுர அரசு.. கயேந்திரகுமார் காட்டம் யாழ் நெடுந்தீவு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் அரச காணியை கடற் படையின் தேவைக்காக யாழ் மாவட்ட செயலக காணி பயன்பாட்டு குழு வழங்கிய விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எழுப்பிய கேள்வியால் குழப்பநிலை ஏற்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் இடம் பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போதை இவ்வாறான நிலை ஏற்பட்டது. குறித்த விடையம் தொடர்பில் பாராளுமன்ற…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

காணாமற் போன ஆட்கள் தொடர்பாக 7,000க்கும் மேற் பட்டோரின் அடிப் படைத் தகவல்கள் சேகரிப்பு

காணாமற்போன ஆட்கள் தொடர்பாக 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) ஆணையாளர் தெரிவித்துள்ளார செம்மணி மனித புதைகுழி பகுதியை நீதி அமைச்சருடன் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனை கூறியுள்ளார் மேலும் அவர், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அலுவலகம் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சட்டம், சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) ஆகியவற்றின் வழிகாட்டல்களுக்கு அமைவாக முழுமையாக சட்டப்பூர்வமாக இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார் அரச நிதியுடன் செயல்பட்டாலும், இது எந்தவொரு இராணுவ பிரிவு, பொலிஸார் அல்லது அரசியல் தரப்புக்கும் சார்பாக செயல்படாத சுயாதீன ஆணைக்குழு எனவும் அவர் வலியுறுத்தினார். பாதிக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வடக்கு – கிழக்கு மாகாண சபையின் பொறுப்புகளைப் போராளிகளிடம் ஒப்படையுங்கள்: சிறீதரன்

வடக்கு – கிழக்கு மாகாண சபையின் பொறுப்புகளைப் போராளிகளிடம் ஒப்படையுங்கள்: சிறீதரன் எம்.பி அறைகூவல்! “நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து, வடக்கு – கிழக்கு மாகாண சபையின் பொறுப்புகளைப் போராளிகளிடம் ஒப்படைத்து, சிறந்ததொரு அரசியல் சூழலை உருவாக்குவதற்கும், அதற்காக முன்னின்று உழைப்பதற்கும் நான் தயாராக இருக்கிறேன். இத்தகைய வரலாற்றுப் பணியைச் செய்ய எல்லோரும் தயாரா? ” என போராளிகள் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருது வழங்கள் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது சிறீதரன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார். ஆளுமையுள்ள போராளிகளை வெறுமனவே அரசியலுக்குப் பயன்படுத்துவதோ அல்லது வாக்குக் கேட்பதற்கான கருவிகளாக மாற்றுவதோ எமது நோக்கமல்ல. அவர்களை மீண்டும் இந்த மண்ணின் உண்மையான பங்காளிகளாக, நம்முடைய தலைவர்களாக மாற்ற வேண்டும்; அவர்கள் போர்க்களங்களில் நின்று எந்த இலட்சியத்திற்காகப் போராடினார்களோ, அதனை இப்போதும் செய்யட்டும். 2010ஆம் ஆண்டுகளிலும் அதற்குப்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

2025 O/L தேர்வு முடிவுகள் வெளியீடு – 2,25,748 மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சை முடிவுகளின்படி, 2,25,748 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வருடத் தேர்வில் 11,790 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ‘A’ சித்தியைப் பெற்று சிறந்த சாதனையைப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 11,651 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்களாகவும், 139 பேர் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களாகவும் உள்ளனர். அதேவேளை, 7,419 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு விடைத்தாள்களை மறுபரிசீலனை செய்ய விரும்பும் மாணவர்கள் ஜூன் 25 முதல் ஜூலை 08 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 O/L தேர்வு முடிவுகள் நேற்று (19) நள்ளிரவில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

படகு ஓடு பாதையை ஆழப்படுத்து மாறு மீனவர் சங்கத்தினர் ரவிகரன் எம்.பியிடம் கோரிக்கை

படகு ஓடுபாதையை ஆழப்படுத்துமாறு கீலிக்கரையான்பிட்டி மீனவர்சங்கத்தினர் ரவிகரன் எம்.பியிடம்கோரிக்கை மீன்பிடித் தொழிலுக்குப் பயன்படுத்தும் படகு ஓடுபாதையினை ஆழப்படுத்தித் தருமாறு மன்னார் – மாந்தை மேற்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட வேட்டையாமுறிப்பு, கீலிக்கரையான்பிட்டி மீனவர்சங்கத்தினர் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். கீலிக்கரையான்பிட்டி மீனவர்சங்கத்தினரின் கோரிக்கைக்கு அமைவாக, கீலிக்கரையான்பிட்டி களப்பு பகுதிக்கு நேரடியாகச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்தார். இதன்போதே மீனவர் சங்கத்தினரால் மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,குறித்த கீலிக்கரையான்பிட்டி களப்புப் பகுதியில் 09கிராமங்களைச்சேர்ந்த 60வரையான மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் மீன்பிடித் தொழிலுக்குப் பயன்படுத்தும் 02கிலேமீற்றர் தூரமான படகு ஓடுபாதை சீரின்றிக் காணப்டுவதால் தாம் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதாக கீலிக்கரையான்பிட்டி மீனவர்கள் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். இவ்வாறு…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாட்டில் டெங்கு நோய் பரவல் தீவிரம்.!

நாட்டில் டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியொன்றை உடனடியாக அமைக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அந்தச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் ஜமீல் விஜேசிங்க இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அவரின் தகவலின்படி, 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான டெங்கு தொற்று நிலைக்கு ஒப்பான அளவில் தற்போது நோயாளர்கள் பதிவாகி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் சுமார் 8,600 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில், ஜூன் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களிலேயே 9,000 க்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், கொழும்பு மாவட்டத்தில் வாராந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 200 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பதிவாகும் மொத்த…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

‘ஐஸ்’ போதைப் பொருள் கடத்தல்.! ஒருவர் கைது

கடவத்தையில் விசேட அதிரடிப்படையினர் (STF) மேற்கொண்ட சிறப்பு சுற்றிவளைப்பில் பெருமளவிலான ‘ஐஸ்’ வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (19) கடவத்தை, புனித அந்திரேயா அக்வில்லினோ தேவாலயத்திற்கு முன்பாக உள்ள வீதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டியொன்றில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட நிலையில் சுமார் 6 கிலோ 288 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் சந்தை பெறுமதி 10 கோடி ரூபாயை விட அதிகமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் 38 வயதுடையவர் எனவும், கணேமுல்ல, கேந்தலியத்தபாலுவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கும்பல் தலைவர்கள் ‘பொடி சுரேஷ்’ மற்றும் ‘சங்க சமீர’ ஆகியோரின் இலங்கை வலையமைப்பை இயக்கும் முக்கிய நபராக செயல்பட்டதாகவும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபரிடமிருந்து போதைப்பொருள் எடைபோட பயன்படுத்தப்பட்ட…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

எரிபொருள் விநியோகத்தின் QR குறியீட்டு முறை நீக்கப்படுமா?

எரிபொருள் விநியோகத்தின் போது பயன்படுத்தப்படும் QR குறியீட்டு முறை நீக்கப்படுவது தொடர்பாக தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்ட அதன் தலைவர் டி. ஜே. ராஜகருணா, உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்த அளவிற்கு இணையாக உள்ளூர் சந்தையில் விலை குறையவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தற்போது எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு எந்தவிதமான தடைகளும் இல்லை எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். எரிபொருள் விநியோக முறையை மேலும் எளிமைப்படுத்தும் நோக்கில் QR முறை தொடருமா அல்லது மாற்றப்படுமா என்பது குறித்து அதிகாரிகள் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க