சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

எந்தவொரு பயங்கரவாத் தடுப்புச் சட்டமும் தேவையில்லை சாவகச்சேரி நகரசபையில் தீர்மானம்

சனநாயகத்திற்கு விரோதமாகவும், அடிப்படை மனித உரிமைகளைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் தற்பொழுதும் வலுவிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கோர முகத்தினை நேரடியாக அனுபவித்த மக்கள் என்ற அடிப்படையில்; முன்மொழிப்பட்டுள்ள பயங்கரவாத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைபினை மீளப் பெறவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்கவும், எந்தவொரு பயங்கரவாத் தடுப்புச் சட்டமும் தேவையில்லை என சாவகச்சேரி நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகராட்சி மன்றின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் தவிசாளர் வ.ஶ்ரீபிரகாஸ் தலைமையில் இடம்பெற்றது.இதன்போது உபதவிசாளர் ஞா.கிஷோர் புதிய பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான பிரேரணையினை சபையில் முன்வைத்து உரையாற்றினார்.இதன்போது தேசிய மக்கள் சக்தியின்  உறுப்பினர்கள் சபை நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாத குறித்த விடயத்தினை சபையில் பிரேரிக்க முடியாது என தமது எதிர்ப்பை வெளியிட்டனர். எனினும் தேசிய மக்கள் சக்தியின் 3 உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனைய உறுப்பினர்களின் ஆதரவோடு பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

வீதியில் குப்பை கொட்டுவதை அவதானித்து நடவடிக்கை

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் வீதியில் குப்பை கொட்டுவதை அவதானித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு வீதிகளில் பல இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படுவதாக பிரதேசசபையின் தலைவர் பாலேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் இவர் மேலும் தெரிவிக்கையில்,சுற்றுச்சூழல் மாசு மற்றும் வீதியோர கழிவு அகற்றுவதில் ஏற்படுகின்ற பல்வேறு நெருக்கடிகளை கருத்தில் கொண்டு எமது பிரதேச சபைகக்குட்பட்ட 57 இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் இன்று பூட்டப்பட்டன. வீதியோரங்களில் குப்பை கொட்டுவோரை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்கும் நோக்கோடு குறித்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டதோடு பல்வேறு சட்ட விரோத செயற்பாடுகளும் இதன் ஊடாக கண்காணிக்கப்படும் எனவும் பிரதேசசபையின் தலைவர்தெரிவித்தார்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இரா.நல்லகண்ணு காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இரா.நல்லகண்ணு காலமானார் அவருக்கு வயது 101. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், ” நல்லகண்ணு உடல் நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 24 தினங்களாக சிகிச்சையின் போது அவரது உடல் நிலையில் ஏற்றதாழ்வுகள் இருந்து வந்தன. ” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,” பல்துறை மருத்துவக்குழு தீவிர சிகிச்சையையும், அதிதீவிர கண்காணிப்பையும் தொடந்து வந்தனர். இன்று அதிகாலை முதல் மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைந்து, அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது.” என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ‘அதிதீவிர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்ததால், நல்லக்கண்ணு 25. 02. 2026 அன்று பிற்பகல் 1. 55 மணியளவில் காலமானார்.’ என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க