சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கிவுல் ஓயா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்; பெருந்திராளான மக்கள் பங்கேற்பு

கிவுல் ஓயா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்; பெருந்திராளான மக்கள் பங்கேற்பு தமிழ் மக்களின் இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கும் வகையில் மகாவலி அதிகாரசபையின் (எல்)வலயத்திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படும் கிவுல் ஓயாத் திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டப்பேரணியொன்று 02.02.2026இன்று இடம்பெற்றது. அந்தவகையில் ஒருங்கிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டப்பேரணியானது நெடுங்கேணி பேருந்து தரிப்பிடத்திலிருந்து ஆரம்பமாகி, வவுனியாவடக்கு பிரதேசசெயலகம் வரையில் இடம்பெற்றதுடன், வவுனியா வடக்கு பிரதேச செயலக முன்றலிலும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இவ்வார்ப்பாட்டப்பேரணியில் கலந்துகொண்டார் கிவுல் ஓயாத் திட்டம் வேண்டாம் என்பதை வலியுறுத்தும் கோசங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர். அதனைத் தொடர்ந்து கிவுல் ஓயாத் திட்டம் வேண்டாம் என்பதை வலியுறுத்தும் ஜனாதிபதிக்கான மகஜர் இதன்போது ஒருங்கிணைந்த தமிழ் கட்சிகளால் வவுனியா வடக்குபிரதேசசெயலரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. மேலும் இவ்வார்ப்பாட்டப் பேரணியில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

ஹார்முஸ் நெருப்புப் புள்ளி ஈரான் – அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றிய மோதல்:

ஹார்முஸ் நெருப்புப் புள்ளி (HORMUZ FLASHPOINT) ஈரான் – அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றிய மோதல்: மத்திய கிழக்கை ஒரு பிராந்தியப் போரின் விளிம்புக்கு தள்ளுகிறது ⧉════════❁════════⧉ “இந்த முறை இது ஒரு பிராந்தியப் போராக அமையும்” – காமேனியின் எச்சரிக்கை ஈரானின் உயரிய தலைவர் அயத்துல்லா அலி காமேனி, அமெரிக்காவை நோக்கி இதுவரை இல்லாத அளவில் மிக நேரடியானதும் ஆபத்தானதும் ஆன எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவால் தொடங்கப்படும் எந்தவொரு ராணுவ நடவடிக்கையும் ஒரு வரையறுக்கப்பட்ட மோதலாக இருக்காது என அவர் தெளிவுபடுத்தியுள்ளார். “அமெரிக்கர்கள் ஒரு போரைத் தொடங்கினால், இந்த முறை அது ஒரு பிராந்தியப் போராகவே மாறும்.” தேசிய அரசுத் தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், இந்த மோதலை வெறும் ராணுவச் சம்பவமாக மட்டும் பார்க்காமல், மேற்கத்திய ஆதிக்கத்திற்கு எதிரான வரலாற்றுப் போராட்டமாக காமேனி சித்தரித்தார். ஈரானின்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

நாட்டில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை தடை

நாட்டில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் வகையில் உத்தியோகபூர்வ முன்மொழிவொன்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சிடம் கையளித்து வைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் நன்மைகளை தடுப்பது இதன் நோக்கம் அல்லவென்பதுடன், சிறுவர்களின் ஆரோக்கியமான முன்னேற்றத்துக்கு உகந்த பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே இம்முன்மொழிவு கையளிக்கப்பட்டமைக்கான நோக்கமென்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். மேலும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவரும் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதியுமான இனோகா ரணசிங்க இதற்கான சட்ட ஏற்பாடுகளை தயாரிப்பதுடன், அதற்கான கால அவகாசம் தொடர்பிலும் தெரிவித்தார். இந்தத் தடையை நடைமுறைப்படுத்த நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், ஆரம்பகால சிறுவர் அபிவிருத்திக்கான தேசிய செயலகம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றின் ஆலோசனை அவசியப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 4 பிக்குகள் விளக்கமறியலில்

திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில், பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 4 பிக்குகள் மற்றும் மேலும் 6 சந்தேகநபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. திருகோணமலையிலுள்ள விகாரையொன்றில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்றை அகற்றுவதற்கு முற்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி அங்கு அமைதியற்ற சூழல் ஏற்பட்டிருந்தது. எனினும், குறித்த கட்டுமானங்கள் அனுமதி இன்றி முன்னெடுக்கப்பட்டதாகக் கூறி, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தது. இந்த நிலையில், புத்தர் சிலையை அகற்ற முயற்சித்த போது, பிக்குகள் மற்றும் பிரதேச மக்களிடமிருந்து பொலிஸாருக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இன்று (02) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சம்பந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, குறித்த குழுவினரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 09ஆம்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி செய்திகள் 

சுதந்திர தினம் கரிநாள்; பேரணிக்கு வலுசேர்க்க அழைப்பு –

சுதந்திர தினம் கரிநாள்; பேரணிக்கு வலுசேர்க்க அழைப்பு – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் போராட்டம் சுதந்திர தினம் கரிநாள் என பிரகடனபடுத்தி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணிக்கு அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்தனர். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (01), இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர், முகாமைத்துவ மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியத்தினர் இதற்கு அழைப்பு விடுத்தனர். மேலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகளும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவளிக்க அழைப்பு விடுத்தனர்.  

மேலும் படிக்க