தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வடக்கின் பெரும் நீர்ப்பாசனத்தை நசுக்கப் பெரும் சதி – இரணைமடு விவசாயிகள் அமைப்பு போர்க்கொடி!

வடக்கின் பெரும் நீர்ப்பாசனத்தை நசுக்கப் பெரும் சதி – இரணைமடு விவசாயிகள் அமைப்பு போர்க்கொடி! வடக்கின் பெரும் நீர்ப்பாசனமான இரணைமடு நீர்ப்பாசனத்தின் கீழ் இருக்கும் 28 கமக்காரர் அமைப்புகளின் மீது அர்ச்சுனா எம்.பி கூறும் குற்றச்சாட்டுக்களில் உண்மைகள் இல்லை என்று கூறும் கமக்காரர் அமைப்புகளின் தலைவர், குறித்த எம்.பி உண்மைகளை ஆராயாது அரசியல் கதிரையின் மீது கொண்ட ஆசை காரணமாக ஒருதலைப் பட்சமாக கருத்துக் கூறுவதை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறிய அவர் மேலும் கூறுகையில் -கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது இரணைமடு கமக்கார அமைப்புக்களின் நிர்வாகம் பெரும் நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும்,பதிவு செய்யப்படாத அமைப்பு என்றும், பல்வேறு குற்றச்சாட்டுக்களை அர்ச்சுனா எம்.பி முன்வைத்திருந்தார்.அவர் குறித்த கருத்தை கூறும் முன்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

குஞ்சுக்கால் வெளியில் உப்பளம் அமைக்க முயற்சி நிறுத்திவைக்க நடவடிக்கை!

குஞ்சுக்கால்வெளியில் பெரும்பான்மை இனத்தவர்கள் உப்பளம் அமைக்க முயற்சிக்கும் தமிழர்களின் பூர்வீக்காணிகளை மீட்டுத்தர ரவிகரன் எம்.பி வலியுறுத்து; பிரச்சினைக்கு தீர்வுகாணும்வரை உப்பளம் அமைக்கும் செயற்பாடுகளை நிறுத்திவைக்க நடவடிக்கை – மாவட்டசெயலர் தெரிவிப்பு முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளியில் பெரும்பான்மை இனத்தவர்களால் உப்பளம் அமைக்க முயற்சிக்கப்படும் காணிகள், தமிழ் மக்களின் அறுதி உறுதி தனியார் காணிள் எனவும், அந்தக்காணிகள் மீட்கப்பட்டு காணிகளுக்குரிய தமிழ் மக்களிடமே கையளிக்கப்படவேண்டுமெனவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் கொக்குத்தொடுவாய் கிராமமக்களால் முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரனிடம் எழுத்து மூலமான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், காணி ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எழுத்துமூலக் கோரிக்கை மற்றும் காணி ஆவணங்களின் பிரதியைப் பெற்றுக்கொண்ட மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரன், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும்வரை உப்பளம் அமைக்கும் முயற்சிகளை நிறுத்திவைக்குமாறு வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தம்மால் கடிதம் அனுப்பப்படுமெனவும், இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாமல் அந்தப்பகுதியில் எந்தச்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

ஈழத்தின் கிளிநொச்சி அக்கராயனில் நடந்தேறிய ‘ஏர் நிலம்’ உழைப்பாளர் மதிப்பளிப்பும் பொங்கல் விழாவும்

ஈழத்தின் கிளிநொச்சி அக்கராயனில் நடந்தேறிய ‘ஏர் நிலம்’ உழைப்பாளர் மதிப்பளிப்பும் பொங்கல் விழாவும். ‘எனது எழுபத்தெட்டாவது வயதில் கிடைத்த இந்த மதிப்பளிப்பு எனக்குள் உழைப்பின் காலத்து நினைவினை விதைத்தது’ என்று சொன்னார் மதிப்பளிப்பினை பெற்றுக் கொண்ட மூத்த விவசாயி ஒருவர் ‘ஏர் நிலம்’ தொண்டமைப்பின் ஊடாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்ற மூத்த உழைப்பாளர்கள் மதிப்பளிப்பும் பொங்கல் விழாவும் நிகழ்வானது 2026 ஆம் ஆண்டில் கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் கந்தபுரத்தில்அமைந்துள்ள இலக்கம் 01 அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் நடைபெற்றது. ‘ஏர் நிலம்’ தொண்டமைப்பும், அக்கராயன் பிரதேச பொது அமைப்புகளும் இணைந்து இந்த நிகழ்வினை ஒழுங்கமைத்திருந்தன. ஏற்கனவே முறிகண்டி தருமபுரம், மாங்குளம், கற்சிலைமடு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இந்நிகழ்வு இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. நிகழ்விற்கு ‘ஏர் நிலம்’ தொண்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட செயலாற்றுநர் கவிஞர் யே.லக்சிதரன் தலைமை வகித்தார்.…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

வவுனியா அபிவிருத்தித் திட்டங்களுக்காக ரூ. 950 மில்லியன் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களுக்காக ரூ. 950 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தலைவரும், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (26) இடம்பெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழ், வவுனியா நகர அபிவிருத்திப் பணிகளுக்காக ரூ. 250 மில்லியனும், பிரதேச அபிவிருத்தியின் கீழ் 36 வீதிகளை மேம்படுத்துவதற்காக ரூ. 250 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தில் உள்ள 9 பெரிய பாலங்களைப் புனரமைப்பதற்காக ரூ. 100 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.   மேலும், 500 மீற்றருக்கும் குறைவான நீளத்தைக் கொண்ட 21 கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக ரூ. 350 மில்லியன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.   இந்தக் கூட்டத்தின் போது,…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

குஞ்சுக்கால் வெளியில் பெரும்பான்மை இனத்தவர்களின் சட்டவிரோத உப்பளம்

குஞ்சுக்கால் வெளியில் பெரும்பான்மை இனத்தவர்களின் சட்டவிரோத உப்பளம் அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினார் ரவிகரன் எம்.பி; மாலை 03.00மணிக்கு முல்லை மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளி பகுதியில் பெரும்பான்மையினத்தவர்களால் சட்டவிரோதமாக உப்பளம் அமைக்கும் முயற்சியொன்று 27.02.2026இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கொக்குத்தொடுவாய்ப் பகுதி தமிழ் மக்கள், சட்டவிரோதமாக உப்பளம் அமைக்க முற்பட்ட பெரும்பான்மையினத்தவர்கள், வனஜீவராசிகள் திணைக்களம் ஆகிய தரப்பினரின் பங்கேற்புடன் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 27.02.2026இன்று மாலை 03.00மணிக்கு கலந்துரையாடல் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளி பகுதியில் வனஜீவராசிகள் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின்…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

அணுசக்தி சிவப்புக் கோடுகளும் ஐரோப்பாவின் எரிசக்தி சூதாட்டமும்

⧉▬▬▬▬▬▬▬▬▬▬அணுசக்தி சிவப்புக் கோடுகளும் ஐரோப்பாவின் எரிசக்தி சூதாட்டமும் நான்காம் ஆண்டுப் போர் அதன் மிகக் கொந்தளிப்பான கட்டத்தில்▬▬▬▬⧉ எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱═══════════════════⊰❉⊱ ✧. மொஸ்கோவின் அணுசக்தி சமிக்ஞை: “சந்தேகத்திற்கு இடமில்லை” போரின் நான்காம் ஆண்டில் மிகவும் ஆபத்தான மாற்றம் ஒன்று தென்படுகிறது: மொஸ்கோ மீண்டும் வெளிப்படையாக அணுசக்தி சொல்லாடலை முன்வைக்கிறது. Dmitry Medvedev, ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர், ஐக்கிய இராச்சியம் அல்லது பிரான்ஸ் உக்ரைனுக்கு அணுசக்தி தொடர்பான தொழில்நுட்ப உதவி வழங்கினால் அது “சூழ்நிலையை முற்றிலும் மாற்றிவிடும்” என்று எச்சரித்தார். ரஷ்யா தனது வசம் உள்ள எந்தவொரு ஆயுதத்தையும் — தந்திரோபாய அணு ஆயுதங்கள் உட்பட — பயன்படுத்தத் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் மொழிபெயர்ப்பின்றி தனிச்சிங்கள மொழியில் சீற்றமடைந்த ரவிகரன் எம்.பி

வவுனியா ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் மொழிபெயர்ப்பின்றி தனிச்சிங்களமொழியில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள்; சீற்றமடைந்த ரவிகரன் எம்.பி வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் 26.02.2026இன்று இடம்பெற்ற நிலையில், குறித்த கூட்டத்தில் நீண்டநேரமாக மொழிபெயர்ப்பின்றி தனிச் சிங்களமொழியில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன. இந்நிலையில் சீற்றமடைந்து சபையில் எழுந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இத்தகைய முறையற்ற செயற்பாட்டிற்கு தமது மிகக் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார். குறித்த வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டதரப்பினர்களில் பெருமளவானவர்கள் தமிழ் பேசுபவர்கள் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது சுட்டிக்காட்டினார். எனவே இவ்வாறு முறையற்ற விதத்தில் மொழிபெயர்ப்பின்றி நீண்ட நேரமாக சிங்களமொழியில் கலந்துரையாடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாதெனவும் நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது தெரிவிக்கப்பட்டது. அத்தோடு தமிழ் மொழிமூலமான மொழி பெயர்ப்பையும்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தையிட்டி விகாரை அமைப்பு தொடர்பான மூன்று வழக்குக்களுக்கான விசாரணை திகதிகள் பிற்போடப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம், சட்டவிரோத தையிட்டி விகாரை அமைப்பு தொடர்பான மூன்று வழக்குக்களுக்கான விசாரணை திகதிகள் பிற்போடப்பட்டுள்ளன. தையிட்டி விகாரை தொடர்பான வழக்குகள் மல்லாகம் நீதிமன்றில் நேற்று அழைக்கப்பட்டன.இதன்போது ஒரு வழக்கின் விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்கும் ஏனைய இரண்டு வழக்குகள் ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.தனியார் காணி ஒன்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த விகாரையை அகற்றக்கோரி போராடும் மக்களுக்கு எதிராக, பொலிஸார்  இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.இதேவேளை, காணி உரிமையாளர்களும், பொதுமக்களும் ஒவ்வொரு பூரணை தினத்தன்றும் தமது போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

நெடுங்கேணி பிரசேவைத்திய சாலைக்கு ரவிகரன் எம்.பி களவிஜயம்; குறைபாடுகள் குறித்து ஆராய்வு.

நெடுங்கேணி பிரசேவைத்தியசாலைக்கு ரவிகரன் எம்.பி களவிஜயம்; குறைபாடுகள் குறித்து ஆராய்வு. வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவிலுள்ள நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு 26.02.2026இன்று நேரடியாகச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வைத்தியசாலையிலுள்ள குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார். அந்தவகையில் நெடுங்கேணி வைத்தியசாலையின் வைத்தியர் மற்றும் நலன்புரிச்சங்கத்தினர், பிரதேசசபை உறுப்பினர்களான இ.கிரிதரன், பொ.தேவராஜா உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர், வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்தார். அத்தோடு வைத்தியசாலையில் காணப்படும் மிகவும் முக்கியமான பௌதீகவளப் குறைபாடொன்றைச் சீர்செய்வது தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை ஒன்றினை தம்மிடம் கைளிக்குமாறு வைத்தியரிடம் கேட்டுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், இம்முறை தமக்கு குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து வைத்தியசாலைக் குறைபாடொன்றை தீர்த்துவைப்பது தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனவுந் தெரிவித்தார்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் திரட்டப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப் படவுள்ளன.

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது அரசைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தி, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் திரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கையொப்பங்கள் இன்று நீதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன. வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட இந்த மாபெரும் கையெழுத்துப் போராட்டத்தின் ஆவணங்கள் கையளிக்கும் நிகழ்வு, நேற்று யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள அவ்வமைப்பின் சேகரிப்பு மத்திய நிலையத்தில் நடைபெற்றது. நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் வேலன் சுவாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஊடக சந்திப்பில், பிராந்திய சேகரிப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட கையொப்பப் பட்டியல்கள் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன. கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பொது அமைப்புகள் மற்றும்…

மேலும் படிக்க