அண்மை செய்தி தாயகச் செய்தி 

வெற்றிலைக்கேணி பகுதியில் பனைமரத்தை கடத்த முற்பட்ட மூவர் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் அதிகளவான பனைமரத்தை கடத்த முற்பட்ட மூவர் மருதங்கேணி  காவல் துறையினரால்.நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் பனைமரங்கள் அழிக்கப்பட்டு வெளி இடங்களுக்கு பனைமரங்கள் அதிகளவாக கடத்தப்படுவதாக மருதங்கேணி காவல் துறைக்கு அதிகளவான முறைப்பாடு கிடைத்திருந்தது. இதனடிப்படையில் விசாரணையை மேற்கொண்டிருந்த காவல் துறைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து நேற்று (7) இரவு குறித்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டது.  குறித்த சுற்றிவளைப்பில் அனுமதிபத்திரம் இன்றி கடத்துவதற்காக மறைத்துவைக்கப்பட்ட பனை மரங்களை கண்டறிந்ததுடன் அதனுடன் தொடர்புடைய மூவரை மருதங்கேணி  காவல் துறையினர். கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தமிழின படுகொலை யைச்செய்த ராஜபக்சர்கள் தற்போது மனிதாபி மானி வேடம் தரித்து நடிப்பதா? ரவிகரன் எம்.பி

தமிழின படுகொலையைச்செய்த ராஜபக்சர்கள் தற்போது மனிதாபிமானி வேடம் தரித்து நடிப்பதாக ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையைச்செய்த கொடூரர்களான ராஜபக்ச தரப்பினர் தற்போது மனிதாபிமானிகளாகமாறி மத்தியகிழக்கின் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலுக்கு அனுதாபங்களைத் தெரிவிப்பது வேடிக்கையாக இருப்பதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். தமிழினப்படுகொலையாளர்கள் தற்போது மனிதாபிமானி வேடந்தரித்து தமது உலகமகா நடிப்புத்திறன்களை வெளிப்படுத்திவருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். முல்லைத்தீவில் 08.03 2026இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்பது வருடங்களைக் கடந்துள்ளது. பத்தாவது வருடம் ஆரம்பிக்கின்றது. தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியைக்கேட்டு அவர்களின் போராட்டம் தொடர்கின்றது. அவ்வாறு…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

13 இலட்சம் ரூபா பெறுமதியான உணவு பொருட்கள் அழிப்பு நீதிமன்றம் உத்தரவு

மன்னாரில் உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போது உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையம் ஒன்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேர்ட், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நகரசபை சுகாதார பரிசோதகர் இணைந்து மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது, கலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்தியமை, அழுகிய மரக்கறி பழங்களை காட்சிப்படுத்தியிருந்தமை, உணவு பொருட்களை உரிய வகையில் களஞ்சியப்படுத்தாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பிரபல வர்த்தக நிலையம் ஒன்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த நிலையில், வர்த்தக நிலையத்தின் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் வர்த்தக நிலையத்திற்கு ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், கைப்பற்றப்பட்ட உணவு பொருட்களையும் உடனடியாக அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. மேற்படி 13 இலட்சம் ரூபா பெறுமதியான…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

உரும்பிராய் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென தீ

கோப்பாய் காவல்துறை.பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென தீப்பற்றியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.எரிபொருள் தாங்கியானது இன்றையதினம் உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் எரிபொருள் கிடங்கிற்கு எரிபொருளை நிரப்ப முயற்சித்தது. எரிபொருளை  இறக்கிக் கொண்டிருந்த பொழுது மோட்டரில் தீப்பிடித்து   விபத்து ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.குறித்த தீ விபத்தில் 25 இலட்சம் ரூபா பெறுமதியான இயந்திரம் முழுமையாக சேதமடைந்ததாக தெரிய வருகிறது.தீ விபத்து தொடர்பில்  கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

அத்துமீறிய உப்பளம் அமைக்கும் முயற்சி; மகாவலி பணிப்பாளர் நாயகத்திற்கு – ரவிகரன் எம்.பி கடிதம்

கொக்குத்தொடுவாயில் தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகரின் அத்துமீறிய உப்பளம் அமைக்கும்முயற்சி; சட்டவிரோதமான அத்துமீறல்களை உடனடியாக தடுக்குமாறு மகாவலி பணிப்பாளர் நாயகத்திற்கு – ரவிகரன் எம்.பி கடிதம். முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் குஞ்சுக்கால்வெளி பகுதியிலுள்ள தமிழ்மக்களின் பூர்வீக தனியார்காணிகளை, மகாவலி அதிகார சபை தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள வர்த்தகருக்கு சட்டவிரோதமாக குத்தகைக்கு வழங்கியுள்ளது. இந்நிலையில் மகாவலி அதிகாரசபையிடமிருந்து சட்டவிரோத குத்தகை அனுமதியைப் பெற்றுக்கொண்ட குறித்த பெரும்பான்மையின வர்த்தகர் தமிழ்மக்களின் தனியார்காணிகளில் அத்துமீறி நுழைந்து உப்பளம் அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதால் இனமுறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சட்டவிரோதமான அத்துமீறிய செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மாகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு 07.03.2026 இன்று கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கல்வி திணைக்களத்தின் அநீதியான செயற்பாடு . நீதிமன்றை நாடவுள்ள ஆசிரியர் சங்கம்

வடமாகாண கல்வி திணைக்களத்தின் அநீதியான செயற்பாடுகளுக்கெதிராக வரும் வாரத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கம் என்ற வகையில்  ஆசிரியர்களின் உரிமைகளை நிலைநாட்ட இறுதிவரை போராடுவோம் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில்  நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். சேவையின் தேவை இடமாற்றம் என்ற பெயரில் தொழிற்சங்கங்களின் பங்களிப்பின்றி வடமாகாண கல்வி திணைக்களத்தால், முன்னெடுக்கப்படும் சட்டவிரோத இடமாற்ற செயற்பாடுகளுக்கு துணைபோகும் வகையில் வடமாகாண ஆளுநர் செயற்படுகிறார். இலங்கை ஆசிரியர் சங்கம் வடமாகாண ஆணைக்குழுவுக்கும் சட்ட ஏற்பாடுகள் குறித்து முறையிட்டிருந்தும், சட்ட முரண் குறித்த விடயங்களுக்கு பதிலளிக்காமல் மழுப்பலான செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது என்பது வடமாகாண ஆணைக்குழுவும் சுயாதீனமாக இயங்கவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. இன்றைய ஆளுநர் முன்னர் அரச அதிபராக இருந்துபோது, தனக்கு வழங்கப்பட்ட இடமாற்றம்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

யாழ்- தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியானது இன்றையதினம் கல்லூரியின் மைதானத்தில் நடைபெற்றது. ஆரம்பத்தில் விருந்தினர்கள் மேற்கத்திய இசை வாத்தியங்கள் முழங்க மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அதனைத்தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டு, அணிநடையுடன் போட்டி ஆரம்பமானது. தொடர்ந்து சுவட்டு நிகழ்வுகள், இடைவேளை நிகழ்வு, பரிசில்கள் வழங்கல் என்பன இடம்பெற்றன. கல்லூரியின் முதல்வர் ரி.வரதன் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டியில் பிரதம விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவனான வைத்தியர் ரி.நந்தகுமார் கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினர்கள், கௌரவ விருந்தினர்கள், ஆசிரியர்கள், அயற்பாடசாலை அதிபர்கள் – ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

பருத்தித்துறை  காவல் துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் “போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் பருத்தித்துறை  காவல் துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்றிட்ட நிகழ்வுகள் போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை (2026.03.01 முதல் 2026.03.07 வரை) முன்னிட்டு, பருத்தித்துறை  காவல் துறையினரால்.பொதுமக்களிடையே வலுவான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் போது “விற்கின்ற -அடிமையான அனைவருக்குமான அறிவித்தல்”- அகன்று செல்” எனும் வாசகத்தினை மையமாகக்கொண்டு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், முச்சக்கர வண்டிகளில் ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன. பொதுமக்களுக்கு போதைப்பொருள் ஆபத்துக்கள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன் வாகனங்களில் ‘போதை ஒழிப்பு’ ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. மேலும் அரச அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. போதைப்பொருள் இல்லாத, ஆரோக்கியமான இளம் சமூகத்தை உருவாக்குவதே நமது இலக்கு. இந்த வாரம்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

படகு விபத்து: அவசர விசாரணை முன்னெடுக்குமாறு பணிப்புரை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

யாழ்ப்பாணத்தில் நடந்த படகு விபத்தின் முழுமையான காரணங்களைத் துல்லியமாகக் கண்டறிவதற்காக கடற்படையினரும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் பணிப்புரை விடப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இதற்கான அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அவர் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளதோடு, துயரத்தில் உள்ள குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதி செய்துள்ளார். மேலும், விபத்துக்குள்ளான படகு பயணத்திற்கு பாதுகாப்பான நிலையில் இருந்ததா, பயணிகளின் எண்ணிக்கை விதிமுறைகளுக்கு உட்பட்டதா, கடல் பயணத்திற்கான பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பன குறித்து விரிவாக ஆராய்ந்து  அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடமும், பொலிஸார் மற்றும் கடற்படையினருடன் அமைச்சர் அவசர கலந்துரையாடலையும் மேற்கொண்டுள்ளார். கடலில் சிக்கியிருக்கக்கூடியவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணிகளை தீவிரப்படுத்துமாறு அவர்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

அவசர கால நிலை வட,கிழக்கு தமிழர்களின் உரிமைகளையும், அன்றாட வாழ்வையும் நசுக்குவதாக அமையக்கூடாது – ரவிகரன் எம்.பி

அவசர கால நிலை வட,கிழக்கு தமிழர்களின் உரிமைகளையும், அன்றாட வாழ்வையும் நசுக்குவதாக அமையக்கூடாது – ரவிகரன் எம்.பி வலியுறுத்து விடுதலைப்போராட்ட காலத்தில் அவசர கால விதிமுறைக்குள்ளாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டது. அத்தகைய அவசரகாலநிலை தற்போது மீண்டும் இந்தநாட்டில் அறிமுகப்படுத்தப்படும்போது, தமது உரிமைகளை நசுக்கும் மற்றொரு வல்லாதிக்க கருவியாக தமிழ் மக்கள் இந்த அவசரகால நிலையையும் நோக்குவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் இந்த அவசரகாலநிலை தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்கியுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். எனவே சட்ட ஏற்பாட்டுடனான மக்கள் மயப்பட்ட நடவடிக்கைகள், வடக்கு கிழக்குத் தமிழ் மக்களின் உரிமைசார்ந்த போராட்டங்கள் மற்றும் அவர்களின் இயல்பு வாழ்வைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த அவசரகால நிலை ஒழுங்குவிதிகள் பயன்படுத்தாதிருப்பதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்,…

மேலும் படிக்க