உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

ஈரானின் IRIS Dena கப்பல், ஆயுதங்களற்ற நிலையில் ஈரானின்! மறுத்துள்ளஅமெரிக்க.

இலங்கை கடற்பரப்பிற்கு அண்மையில் அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளான ஈரானின் IRIS Dena கப்பல், ஆயுதங்களற்ற நிலையில் இருந்ததாக வெளியாகும் தகவல்களை அமெரிக்க இந்தோ-பசுபிக் கட்டளைப்பீடம் மறுத்துள்ளது. சர்வதேச சட்டங்களின்படி அந்தப் போர்க்கப்பல் ஒரு முறையான இராணுவ இலக்கு (Legitimate Military Target) என்றும் அந்தப் போர்க்கப்பலை அழிப்பதற்குப் பலத்தைப் பிரயோகிக்க அனுமதி உண்டு எனவும் அமெரிக்கத் தரப்பு விளக்கமளித்துள்ளது. இதற்கமைய அந்த கப்பல் அழிக்கப்பட்டதாகவும், ஆயுத மோதல் சட்டங்களுக்கு இணங்க, இச்சம்பவத்தில் உயிர் தப்பியவர்களுக்கு இலங்கை தரப்பினால் உயிராபத்து ஏற்படாத வகையில் மனிதாபிமான உதவி மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஒபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) நடவடிக்கையின் கீழ், ஈரானிய இராணுவச் சொத்துக்கள் அனைத்தும் இலக்கு வைக்கப்படுவதாக அமெரிக்கா முன்னரே எச்சரித்திருந்தது. சர்வதேச கடல்சார் சட்டங்களின்படி, ஒரு நாட்டின் போர்க்கப்பல்…

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

குவைத்தில் அமைந்து ள்ள அமெரிக்க இராணுவ முகாமான ‘அரிப்ஜான் மீது. குறிவைத்து தாக்குதல்

குவைத்தில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ முகாமான ‘அரிப்ஜான்’ (Arifjan) தலைமையகத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மிகவும் துல்லியமாக இலக்குகளைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் இராணுவம் புதிய பதிலடித் தாக்குதல் தொடர் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இந்த புதிய தாக்குதலானது “உண்மை வாக்குறுதி” நடவடிக்கையின் 27 ஆவது அலை என ஈரான் இராணுவம் பெயரிட்டுள்ளது.இதேவேளை குவைத் சர்வதேச வானூர்தி நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கிகள் மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதன்போது எரிபொருள் தாங்கிகள் தீக்கிரையாகியுள்ளன. குவைத் சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள எரிபொருள் தாங்கிகள் மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குவைத் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்று அதிகாலை வானூர்தி நிலைய வளாகத்தில் உள்ள எரிபொருள் களஞ்சிய முனையத்தை இலக்கு வைத்து இந்த…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

தற்போது ஆகஸ்ட் மாதம் வரை போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசரகால திட்டங்களை இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் தயாரித்துள்ளது. தற்போது ஆகஸ்ட் மாதம் வரை போதுமான அளவு மசகு எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் கையிருப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்ய இந்தியாவிடம் இருந்து அதிகப்படியான எரிபொருளைக் கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கான பேச்சுவார்த்தைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்துச் செலவு குறைவு என்பதால் இந்திய நிறுவனங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சிங்கப்பூர் ஊடாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் திறந்தே உள்ளது.இதேவேளை, வளைகுடா பிராந்தியத்தில் போர் நீடித்தால், இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

13 இலட்சம் ரூபா பெறுமதியான உணவு பொருட்கள் அழிப்பு நீதிமன்றம் உத்தரவு

மன்னாரில் உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போது உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையம் ஒன்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேர்ட், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நகரசபை சுகாதார பரிசோதகர் இணைந்து மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது, கலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்தியமை, அழுகிய மரக்கறி பழங்களை காட்சிப்படுத்தியிருந்தமை, உணவு பொருட்களை உரிய வகையில் களஞ்சியப்படுத்தாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பிரபல வர்த்தக நிலையம் ஒன்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த நிலையில், வர்த்தக நிலையத்தின் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் வர்த்தக நிலையத்திற்கு ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், கைப்பற்றப்பட்ட உணவு பொருட்களையும் உடனடியாக அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. மேற்படி 13 இலட்சம் ரூபா பெறுமதியான…

மேலும் படிக்க