தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கொழும்பு கோட்டை மற்றும் மட்டக்களப்பு க்கு இடையில்ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

இலங்கை புகையிரத சேவையினால் கொழும்பு கோட்டை மற்றும் மட்டக்களப்புக்கு இடையில் இயக்கப்படும் “மீனகயா” (Meenagaya) இரவு நேர நகரிடை கடுகதி ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையின் விபரங்கள் மார்க்கம்                                                    புறப்படும் நேரம்                   முக்கிய நிலையங்கள் (பொலன்னறுவை)                சென்றடையும் நேரம் கொழும்பு ➔ மட்டக்களப்பு                   இரவு 7.00 மணி         …

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வவுனியா, பறங்கியாற்றுப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு

வவுனியா, பறங்கியாற்றுப் பகுதியில் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த குடும்பஸ்தர் ஒருவர், நேற்று மாலை ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பறங்கியாற்றுப் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். நேற்று அதிகாலை வேளையில் பறங்கியாற்றுப் பகுதிக்குச் சென்ற இவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் கவலையடைந்த குடும்பத்தினர், அயலவர்களுடன் இணைந்து அப்பகுதி முழுவதும் தேடுதலில் ஈடுபட்டனர். இதன்போது, ஆற்றினுள் குறித்த நபர் சடலமாகக் கிடப்பது கண்டறியப்பட்டது.சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் காவல் துறைக்கு.தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, அவர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.குறித்த நபர் தற்செயலாக ஆற்றில் விழுந்து உயிரிழந்தாரா? அல்லது வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பியில் (Electric Trap) சிக்குண்டு உயிரிழந்தாரா? என்ற கோணத்தில்  காவல் துறை.தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சடலம்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

விரைவு ரயிலுடன் கெப் வாகனம் ஒன்று மோதியதில்,இருவர் உயிரிழந்துள்ளனர்.

காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற ‘காலி குமாரி’ விரைவு ரயிலுடன் கெப் வாகனம் ஒன்று மோதியதில், கெப் வாகனத்தில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று (22) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மூவர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 மற்றும் 28 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த ரயில் கடவையில் வர்ண சமிஞ்சை முறைமை சரியாக இயங்கவில்லை எனவும்,  முறையான பாதுகாப்பு கேட் பொருத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது இவ்வாறு ரயிலுடன் மோதிய கெப் வாகனம் அருகில் உள்ள நிர்மாணத் திட்டமொன்றில் பணிபுரியும் ஒருவருடையது என தெரியவந்துள்ள. ரயில் மோதியதையடுத்து கெப் வாகனம் சுமார் 50 மீற்றர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.இந்த விபத்தில் கெப் வாகனத்தின் சாரதி உட்பட மூன்று…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (21) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்ற விபத்து

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (21) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். ஹட்டன் பகுதியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த வர்த்தக லொறி ஒன்று, வட்டவளை சிங்கள பாடசாலைக்கு அருகில் உள்ள பாதாள மதகு ஒன்றிற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.லொறிக்குள் இறுகிய நிலையில் சிக்கிக்கொண்ட சாரதி மற்றும் உதவியாளரை, பொலிஸாரும் பொதுமக்களும் சுமார் 1 மணிநேரம் போராடி மீட்டனர்.காயமடைந்தவர்கள் முதலில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை களைப்பு காரணமாகவே இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பாக வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

இந்திய பிரதிநிதிக ளுக்கும்.தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரு க்கும் சந்திப்பொன்று நடை பெற்றுள்ளது

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வருகைதந்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயரஸ்தானிகர் சத்தியஞ்சல் பான்டே மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதர் (கொன்சூலர் ஜெனரல்) சாய் முரளி ஆகியோருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையில் இன்று காலை 11:30 மணிக்கு கச்சேரி நல்லூர் வீதியில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் சந்திப்பொன்று நடை பெற்றுள்ளது. குறித்த சந்திப்பின்போது – அனுர அரசாங்கம் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் கொண்டுவரவுள்ள புதிய ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு தொடர்பிலும் மற்றும் இந்த அரசாங்கத்தினால் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பௌத்த சிங்கள மயமாக்கல் செயற்பாடுகள், இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகள், ஒருகட்சி ஆட்சி முறையை நோக்கியதான ஜனநாயக விரோத போக்குகள் குறித்தும் இந்திய தூதரக பிரதிநிதிகளிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் தெளிவுபடுத்தப்பட்டது. இனப் பிரச்சினைக்கு தீர்வு என்னும் அடிப்படையில் புதிய அரசியல் அமைப்பு…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

அருச்சுனாவின் காணியால் மக்கள் தினமும் பல்வேறு அவஸ்தைகளுக்கு உள்ளாவதாக குற்றம்சாட்டு

வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் ஆளுகைக்குள் காணப்படும் பெரியவிளான் பகுதியில் உள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவின் காணியால் மக்கள் தினமும் பல்வேறு அவஸ்தைகளுக்கு உள்ளாவதாக குற்றம்சாட்டப்பட்டது. வலி. தென்மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் நடைபெற்றது. இதன்போது பெரியவிளான் வட்டார உறுப்பினரான எட்வேட் மரியவாசினி குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில், பெரியவிளானில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் காணியில் பற்றைகள் வளர்ந்துள்ளன. அங்கிருந்து பாம்புகள் வெளியே வந்து அருகில் இருக்கின்ற மக்களின் குடிமனைகளுக்குள் செல்கின்றது. இதனால் மக்கள் தினம்தினம் அச்சத்தில் வாழ்கின்றனர். ஒவ்வொரு நாளும் ஆறு ஏழு பாம்புகள் அங்கிருந்து வெளி வருகின்றன. இதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தவிசாளர் க.ஜெசீதன், பாதீனியம் உள்ள எத்தனை காணிகளுக்கு எதிராக வழக்கு…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

பலாலி விமான நிலையத்திற்கு வடக்கில் இருந்து அதிக பணியாளர்கள்! வடக்கு மாகாண ஆளுநர்

பலாலி விமான நிலையத்திற்கு வடக்கில் இருந்து அதிக பணியாளர்களை நியமிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.இன்றையதினம் பலாலி விமான நிலையத்திற்கு அமைச்சர்கள் குழாமுடன் விஜயம் செய்து, அபிவிருத்தியை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் பலாலி விமான நிலையத்திற்கு விமான துறை சார்ந்த பணியாளர்களை வடக்கில் இருந்து அதிகளவாக நியமித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்ற செயற்பாடுகளுக்காக விமானத்துறை அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் வருகை தந்து ஆளுநர் செயலகத்தில் கூட்டம் ஒன்றினையும் நடாத்தி இருந்தனர். அதன் பின்னர் பலாலி சர்வதேச விமான நிலையத்தையும் பார்வையிட்டனர். பலாலி விமான நிலையத்தின் விஸ்தரிப்பு மற்றும் வசதிகள் போதாமல் உள்ளமை தொடர்பாக அந்த இடங்களை பார்வையிட்டு, அபிவிருத்திகளை விரைவுபடுத்தல் போன்றன பற்றியும் இங்கே கலந்துரையாடினார்கள்.சர்வதேச விமான நிலையமாக இருக்கின்ற…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கை ஜனாதிபதி மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரசுமுறைப் பயணமாக இந்தியா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான தீர்க்கமான இருதரப்புப் பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில், புதுடில்லியில் நடைபெற்று வரும் ‘செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில்’ (AI Impact 2026) பங்கேற்பதற்காக ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார். இந்த உச்சிமாநாட்டின் ஒரு அங்கமாகவே இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலின் போது, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளைப் புதிய தளத்திற்கு இட்டுச் செல்வது குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது. அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார பிணைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு குறித்தும் தலைவர்கள் கவனம் செலுத்தவுள்ளனர். குறிப்பாக,…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 தமிழக மீனவர்கள் நேற்றிரவு கைது

இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பு அருகே 12 இராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு படகுகளுடனும் மன்னார் கடற்பரப்பில் 10 இராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு படகுகளுடனும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இவர்கள் இன்றைய தினம் ஊர்காவற்றுறை மற்றும் மன்னார் நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கொழும்பை புறக்கணித்து பெருந்தோட்டத்திற்கு படையெடுக்கும் மலையக இளைஞர்கள்!

கொழும்பை புறக்கணித்து பெருந்தோட்டத்திற்கு படையெடுக்கும் மலையக இளைஞர்கள்! கொழும்பு உணவகங்களில் (Hotels) பணிபுரிந்த பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த பலர் தங்களது வேலைகளைக் கைவிட்டு மீண்டும் பெருந்தோட்ட வேலைகளுக்கே சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் உணவகங்களை நடத்திச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டதே இதற்குக் காரணம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பெருந்தோட்டத் தொழிலாளி ஒருவரின் நாளாந்த ஊதியத்தை 1,750 ரூபாவாக உயர்த்த அரசாங்கம் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது. பொரள்ளை மற்றும் மருதானை உள்ளிட்ட கொழும்பின் பல உணவகங்களில் பணியாளர்கள் (Waiter), சமையல் கலைஞர்கள் (Chef) உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களில் பெரும்பாலானோர் பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், தற்போது அவர்கள் அதிக ஊதியம் காரணமாக மீண்டும் தோட்ட வேலைகளுக்கே சென்றுள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க