தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கொழும்பு கோட்டை மற்றும் மட்டக்களப்பு க்கு இடையில்ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

இலங்கை புகையிரத சேவையினால் கொழும்பு கோட்டை மற்றும் மட்டக்களப்புக்கு இடையில் இயக்கப்படும் “மீனகயா” (Meenagaya) இரவு நேர நகரிடை கடுகதி ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் சேவையின் விபரங்கள்

மார்க்கம்                                                    புறப்படும் நேரம்                   முக்கிய நிலையங்கள் (பொலன்னறுவை)                சென்றடையும் நேரம்
கொழும்பு ➔ மட்டக்களப்பு                   இரவு 7.00 மணி                                     அதிகாலை 2.14 மணி                                                                 அதிகாலை 4.51 மணி
மட்டக்களப்பு ➔ கொழும்பு                   இரவு 8.00 மணி                                      இரவு 10.44 மணி                                                                            அதிகாலை 5.31 மணி

இந்த ரயிலானது கம்பஹா, வேயங்கொடை, குருநாகல், மாஹோ, கல்ஓயா, ஹிங்குராக்கொடை, பொலன்னறுவை, புனானை, வாழைச்சேனை மற்றும் ஏறாவூர் உள்ளிட்ட பல நிலையங்களில் நிறுத்தப்படும்.

பயணிகளின் வசதிக்காக இந்த ரயிலில் முதல்தர குளிரூட்டப்பட்ட (A/C) பெட்டிகள் மற்றும் இரண்டாம், மூன்றாம் வகுப்பு ஆசன முன்பதிவு வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. பயணிகள் தமது ஆசனங்களை https://seatreservation.railway.gov.lk என்ற இணையத்தளம் ஊடாகவோ அல்லது முன்பதிவு வசதியுள்ள ரயில் நிலையங்களுக்குச் சென்றோ ஒதுக்கிக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அன்மைச் செய்தி

Leave a Comment