அண்மை செய்தி தாயகச் செய்தி 

டிப்பர் வாகனத்தை இடைமறித்து சாரதி மீது தாக்குதல்

மாங்குளத்திற்கும், முறிகண்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் டிப்பர் வாகனத்தை இடைமறித்து சாரதி மீது மது போதையில் வந்த இருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் இன்று(10) இடம் பெற்றுள்ளது.சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுவரும் இருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சட்டவிரோத மணல் அகழ்வில் தாங்கள் ஈடுபடும் தகவலை பொலிஸாருக்கு வழங்கினார் எனத் தெரிவித்தே தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட தரப்பு தெரிவித்துள்ளது.இதுதொடர்பான காணொளி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

யாழ். மருத்துவ பீடத்தில் நவீன நரம்புத் தூண்டல் முறை குறித்து கலந்துரையாடல்

நவீன நரம்புத் தூண்டல் முறையான Transcranial Magnetic Stimulation (TMS) தொடர்பான கலந்துரையாடல், யாழ். பல்கலைக்கழக மருத்துவப்பீட CTRB மண்டபத்தில் இன்று  இடம்பெற்றது.அமெரிக்காவைச் சேர்ந்த “நவீன நரம்புத் தூண்டல்” (TMS)  வைத்திய நிபுணர் தாரிக் பெரேரா வளவாளராக கலந்துகொண்டிருந்தார். இதன்போது TMS முறையின் அடிப்படை கோட்பாடுகள், மருத்துவப் பயன்பாடுகள் மற்றும் மனநலத் துறையில் அதன் எதிர்கால பங்கு குறித்து விளக்கமளிக்கப்பட்டது.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் மனநல மருத்துவத் துறை ஏற்பாட்டில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது

மேலும் படிக்க
அண்மை செய்தி உலக அரசியல். கட்டுரை 

அமெரிக்கா–ஈரான் போர், முஜ்தபா காமெனியின் எழுச்சி மற்றும் பழைய உலக ஒழுங்கின் வீழ்ச்சி

புதிய உலகளாவிய மகா யுத்தம் : அமெரிக்கா–ஈரான் போர், முஜ்தபா காமெனியின் எழுச்சி மற்றும் பழைய உலக ஒழுங்கின் வீழ்ச்சி ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுதியவர் : ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாளர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ ✧ உலக ஒழுங்கை மாற்றியமைக்கும் மத்திய கிழக்கு போர் மத்திய கிழக்கு பிராந்தியம் 21-ஆம் நூற்றாண்டின் மிக ஆபத்தான இராணுவ மோதல்களில் ஒன்றுக்குள் நுழைந்துள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தீவிரமடைந்து வரும் இந்தப் போர், தற்போது இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள், ரஷ்யாவின் மூலோபாய ஆதரவு மற்றும் சீனாவின் உளவுத்துறை கண்காணிப்பு ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்து, ஒரு பிராந்திய மோதலிலிருந்து உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய மோதலாக வேகமாக உருவெடுத்து வருகிறது. ஈரானின் இராணுவ மற்றும் அணுசக்தி உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

யாழ் – இளவாலை பகுதியில் இளம் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு.

யாழ்ப்பாணம் – இளவாலை பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக  மீட்கப்பட்டுள்ளார். டச்சுவீதி, பெரியவிளான், இளவாலை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,அவரது குடும்பத்தினர் நேற்றுமுன்தினம் காங்கேசன்துறை பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்வுக்கு சென்றுள்ளனர். பின்னர் நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்து பார்த்தவேளை குறித்த குடும்பஸ்தர் சடலமாக தூக்கில் தொங்கியவாறு காணப்பட்டுள்ளார். இது குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், சடலத்தை மீட்ட இளவாலை பொலிஸார் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
அண்மை செய்தி சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

துப்பாக்கிச் சூட்டுக் குப் பலியான சிறுவனின் கொலை க்கு நீதி வேண்டி போராட்டம்

கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதியன்று அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையினரின் துப்பாக்கிச்  சூட்டுக்குப் பலியான அல்பினோ அருள் ஃபயாஸ் சிறுவனின் கொலைக்கு நீதி வேண்டி இன்று ஊர்காவற்றுறை காவல்துறை நிலையம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மனித உரிமை ஆர்வலர் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில், சிறுவனின் உறவுகள் காவல்துறைனருக்கு எதிரான கோசங்கள் தாங்கிய பதாகைகளுடன் கலந்துகொண்டனர். குறித்த போராட்டம் ஊர்காவற்றுறை நீதிமன்றின் முன்பாக காலை 11 மணிக்கு ஆரம்பமானது.போராட்டம் ஆரம்பமான சில நிமிடங்களில், நீதிமன்ற காவல்துறையினரால் நீதுமன்றுக்கு முன்பாக போராட்டம் நடத்த முடியாது எனக் கூறி நீதிமன்ற வளாகத்தை கடந்து போராட்டத்தை முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது. காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்ற போராட்டக்காரர்கள், ஊர்காவற்றுறை காவல்துறை நிலையம் முன்பாக ஒன்றுகூடி போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன்போது,  காவல்துறையினரின் செயலைக் கண்டித்து பல்வேறு சுலோங்கள் தாங்கி கோசமிட்டு தமது எதிர்ப்பை காட்டிய…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் புதிய செயலாளராக குணதாச சமரசிங்க

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் புதிய செயலாளராக குணதாச சமரசிங்க நியமிக்கப்பட்டார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நேற்று திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளித்தார்.இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான குணதாச சமரசிங்க, இந்தப் பதவிக்கு நியமிக்கப்படும்போது கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராகப் பணியாற்றி வந்தார்.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

பேருந்து கட்டணங் களை அதிகரிக்க வேண்டும் தனியார் பேருந்து சங்கங்கள் கோரிக்கை

எரிபொருள் விலை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என்று தனியார் பேருந்து சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்த விலை உயர்வை கருத்திற்கொண்டு பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என்று தனியார் பேருந்து சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.இந்தநிலையில் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலன் மிராண்டா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
அண்மை செய்தி உலக செய்திகள் 

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான இராணுவ நடவடிக் கையை பிரான்ஸ் ஜனாதிபதி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்கான ஒரு “முன்னோடியில்லாத” இராணுவ நடவடிக்கையை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் அறிவித்துள்ளார். சர்வதேச எரிசக்தி மற்றும் வர்த்தகப் போக்குவரத்தை உறுதி செய்வதற்காக, பிரான்ஸ் தனது கடற்படையின் ஒரு பெரும் பகுதியை மத்திய கிழக்கு கடற்பரப்பில் நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளது.இது ஒரு தற்காப்பு மற்றும் பாதுகாப்பு ரீதியான நடவடிக்கை என பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க
அண்மை செய்தி சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

ஈரானின் தற் போதைய போக்கு ஈழத்தமிழர் மீதான இனப்படு கொலை யினை மீளவும் நினைவு படுத்துகிறது: சிறீதரன்

ஈரானின் தற்போதைய போக்கு ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலையினை மீளவும் நினைவுபடுத்துகிறது: சிறீதரன் எம்.பி தெரிவிப்பு……! ​”சர்வதேச போர் விதிகளை மீறி ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நிகழ்த்திய அதே கொடூரமான கொத்துக்குண்டுத் தாக்குதல்களை, இன்று ஈரான் இஸ்ரேல் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது” எனப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கவலை வெளியிட்டுள்ளார். ​”சுதந்திரப்பறவைகள்” மகளிர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற பன்னாட்டு மகளிர் தின நிகழ்வில், முதன்மை அழைப்பாளராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ​அவர் மேலும் தெரிவிக்கையில்: ​”ஈழப் போராட்ட வரலாற்றில் பெண்கள் வெறும் சாட்சிகளாக மட்டுமல்ல, களத்தில் நின்ற போராளிகளாகவும், குடும்பத்தைத் தாங்கும் தூண்களாகவும் விளங்கியவர்கள். உலகமே வியந்து பார்த்த ஒரு போரியல் வாழ்வை வாழ்ந்தவர்கள் ஈழத்தமிழ்ப் பெண்கள். இன்றும் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்காக எட்டு ஆண்டுகள் கடந்தும் தாய்மார்கள் வீதியில் நின்று…

மேலும் படிக்க
அண்மை செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

திருச்சியில் திமுக மாநாடு! 10 லட்சம் பேர் பங்கேற்பு!

திருச்சி: திருச்சி சிறுகனூரில், ‘ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்’ எனும் பெயரில் திமுக மாநாடு இன்று (மார்ச் 9) நடைபெறுகிறது. 10 லட்சம் பேர் பங்கேற்கும் இந்த மாநாட்டில், முதல்வர் மு.க. ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிடவிருக்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் நடக்கும் இம்மாநாடு, திமுகவுக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாடு பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கும். திரைப்பட இசையமைப்பாளர் தேவா மற்றும் இசைக் கலைஞர் அப்துல் குத்தூஸின் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். மாலை 5.30 மணிக்கு மாநாட்டு திடலுக்கு வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரம்மாண்ட கொடிக் கம்பத்தில் கட்சிக்கொடியை ஏற்றி, தொண்டர்களின் வரவேற்பைப் பெற்றுக் கொண்டு மேடைக்குச் செல்வார். மாநாட்டிற்காக 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 3 லட்சம் பேர் அமரவும், 7 லட்சம் பேர்…

மேலும் படிக்க