இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

வாரத்திற்கு குறைந்தது 35 லிட்டர் எரிபொருள் தேவைப் படுவதாக முச்சக்கர வண்டி சாரதிகள்

QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் மேலாண்மை அமைப்பின் கீழ் ஒதுக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு தங்கள் செயல்பாடுகளைத் தக்கவைக்க போதுமானதாக இல்லை என்று  முச்சக்கர வண்டி சாரதிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஒதுக்கீடு அதிகரிக்கப்படாவிட்டால் போராட்டங்களைத் தொடங்க நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.இந்த முறையின் கீழ் முச்சக்கர வண்டிகளுக்கு தற்போது வாரத்திற்கு 15 லிட்டர் எரிபொருள் ஒதுக்கப்படுவதாக சாரதிகள் குறிப்பிட்டனர்.ஆனால் வாகனத்தை முதன்மை வருமான ஆதாரமாக நம்பியிருப்பவர்களுக்கு இந்தத் தொகை போதுமானதாக இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர். முச்சக்கர வண்டிகள் வழக்கம் போல் இயங்க, சாரதிகள் வாரத்திற்கு குறைந்தது 35 லிட்டர் எரிபொருள் தேவைப்படுவதாக முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.ஒதுக்கீடு திருத்தப்படாவிட்டால், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் முச்சக்கர வண்டி சாரதிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் எச்சரித்தனர். இதற்கிடையில், பாடசாலை போக்குவரத்து இயக்குநர்கள் மற்றும் தனியார் பேருந்து…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

பாடசாலை மாணவர்களுக்கான உதவித்திட்டம் முன்னெடுப்பு…!

பாடசாலை மாணவர்களுக்கான உதவித்திட்டம் முன்னெடுப்பு…! ஜேர்மன் நாட்டில் வசிக்கும் திரு. சுஜித்குமார் மற்றும் அந்நாட்டின் லேயர் வோக்கோஸ்ற் பகுதியில் வசிக்கும் ஈழத் தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த நிதிப் பங்களிப்பில், திரு. நிமலன் பிருந்தாபன் மற்றும் மேனாள் வட மாகாண சபை உறுப்பினர் திரு. பரஞ்சோதி ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் மாணவர்களுக்கான பாதணிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது. ​கிளி/சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் இடைநிலைப் பிரிவைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு குறித்த உதவித் திட்டம் வழங்கிவைக்கப்பட்டது. ​இதன்போது உரையாற்றிய வித்தியாலயத்தின் முதல்வர், “இன்றைய நாள் எமது பாடசாலை வரலாற்றில் ஒரு நெகிழ்ச்சியான நாள். ‘தேவை’ என்று ஒரு கோரிக்கையை முன்வைத்தால், அது நிறைவேறப் பல மாதங்கள் ஆகும்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

தேவேந்திர முனைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் மீன்படி படகில் ஹேரோயின் போதைப் பொருள்

தேவேந்திரமுனைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட பலநாள் மீன்படி படகில் ஹேரோயின் போதைப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளது. குறித்த பலநாள் மீன்பிடி படகு இன்று (16) காலை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது. போதைப்பொருள் அடங்கியிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் உரமூடைகளை ஏற்றிச் சென்ற உள்நாட்டுப் பலநாள் மீன்பிடிப் படகு ஒன்றுடன் 5 சந்தேகநபர்கள் நேற்று (16) கைது செய்யப்பட்டனர். கடற்படையின் நீண்டதூர கண்காணிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர். இந்நிலையில் குறித்த பலநாள் மீன்பிடி படகு கரைக்கு கொண்டுவரப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் அதில் 123 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். இதன் பெறுமதி சுமார் 3 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கு முன்னரும் கடந்த வாரத்தில்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தில் இழப்பீட்டு காசோலைகள் வழங்கும் நிகழ்வு!

கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தில் இழப்பீட்டு காசோலைகள் வழங்கும் நிகழ்வு! டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கரவெட்டி பிரதேச சுயதொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்பும் நோக்கில், இன்றைய தினம் விசேட நிகழ்வொன்று கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. புயல் அனர்த்தத்தினால் தமது வாழ்வாதாரத்தை இழந்த சிறு தொழில்முயற்சியாளர்களுக்கு, அரசாங்கத்தின் விசேட நிதியுதவித் திட்டத்தின் கீழ் இழப்பீட்டு காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.  நிகழ்வின் சிறப்பம்சங்கள்: * பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு இழப்பீட்டு காசோலைகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. * தொழில் முயற்சியாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மீண்டும் செம்மையாக ஆரம்பிப்பதற்கும், தொழிலில் முன்னேற்றமடைவதற்குமான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. * அரசாங்கத்தின் இந்த நேரடித் தலையீடு, பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப பெரும் உறுதுணையாக அமையும். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பிரதேச சபை உறுப்பினர் பிரதேச செயலகத்தின் உயர்மட்ட அதிகாரிகள், உத்தியோகத்தர்கள்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை

நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார், அநுராதபுரம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்றைய தினம் 16 ஆம் திகதி வெப்பச் சுட்டியானது மனித உடலில் உணரப்படும் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில், காணப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுள்ளது. அதிக வெப்பமான சந்தர்ப்பங்களில் அதிகளவு நீரை அருந்துவது, வயல் வௌிகள் போன்ற இடங்களில் தொழிலில் நீண்ட நேரம் ஈடுபடுதலை தவிர்த்தல், வயோதிபர்கள் மற்றும் நோயாளிகள் வௌியில் செல்வதை தவிர்த்தல் சிறுவர்கள் வெயிலில் விளையாடுவதைத் தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அந்த திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.  

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமை ப்புப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு

வளமான நாடு -அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், மறுமலர்ச்சிக்கான பாதையாக யாழ். மாவட்டத்தில் 117.04 மில்லியன் ரூபா செலவில் காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. மொத்தம் 7 கிலோமீற்றர் நீளமான காரைநகர் சுற்றுவட்ட வீதியில், ஏற்கனவே 2 கிலோமீற்றர் நீளமான பகுதி புனரமைக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய பகுதிகளில் முன்னெடுக்கப்படும் பணிகளின் ஒரு பகுதியாக 2 கிலோமீற்றர் நீளமான வீதியின் புனரமைப்புப் பணிகள் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. மேலும் எஞ்சியுள்ள 3 கிலோமீற்றர் வீதி, “டித்வா” மீள்கட்டுமானத் திட்டத்தின் கீழ் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு, இவ்வாண்டுக்குள் முழுமையாகப் புனரமைக்கப்படவுள்ளது.இப்பணிகளின் போது முறையான வடிகால் அமைப்புகள் ஏற்படுத்தப்படுவதுடன், தாழ்வான பகுதிகளில் வீதியை உயர்த்தி நிலையான முறையில் புனரமைப்பதும் திட்டமிடப்பட்டுள்ளது.நிகழ்வில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இ.சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன்,…

மேலும் படிக்க