இலங்கை செய்தி. 

இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவில் கோட்டாபய ராஜபக் க்ஷவுக்கு அழைப்பு

இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் எதிர்வரும் (17) செவ்வாய்க்கிழமை ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழு முன்னெடுக்கும்விசாரணையில் சாட்சியமளிப்பதற்காக இந்த அழைப்பு அவருக்கு விடுக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னரும் பெப்ரவரில் 12 ஆம் திகதி ஆஜராகுமாறு இவ்வாறான அழைப்பு விடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், தாம்,சிங்கப்பூரிலிருப்பதாக கோட்டாபய எழுத்துமூலம் அறிவித்திருந்தார்.இதையடுத்தே இம்மாதம் 17 ஆம் திகதி ஆஜராகும்படி அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

ஆயுதங்கள் தாங்கிய குழுவினரால் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல்

யாழ். தென்மராட்சி பிரதேசத்தில் ஆயுதங்கள் தாங்கிய குழுவினரால் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்கள் நேற்று (11) அதிகாலை 1.00 மணிக்கும் 2.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளன. தாக்குதலுக்குள்ளான இடங்கள்: சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒரு வீட்டின் மீதும், கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4 வீடுகள் மீதும் இந்த ஆயுதக் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீசாலை மேற்கு: வங்களா வீதியிலுள்ள வீடொன்றில் புகுந்த கும்பல், அங்கிருந்த பொருட்களை அடித்துச் சேதப்படுத்தியுள்ளது. மீசாலை தட்டான் குளம்:  இங்குள்ள இரண்டு வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதில் ஒரு வீடு முற்றாகத் தீக்கிரையாகியுள்ளதுடன், ஒரு மினிபஸ் (Minibus) மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளும் எரிக்கப்பட்டுள்ளன. மீசாலை வடக்கு: ஞானவைரவர் வீதியிலுள்ள வீடொன்றில் புகுந்த குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது அங்கிருந்த இளைஞர்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் தொடர்பான புதிய அறிவிப்பு

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் தொடர்பான புதிய அறிவிப்பை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று கொழும்பு மற்றும் டுபாய்க்கு இடையிலான சில வானூர்தி சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.கொழும்பிலிருந்து டுபாய் நோக்கிப் பயணிக்கும் UL231 மற்றும் டுபாயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் UL232 ஆகிய விமான சேவைகளே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களினால் பாதிக்கப்படும் பயணிகள், தங்களது விமான பயண நிலை குறித்த மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள www.srilankan.com என்ற இணையதளத்தைப் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன், மேலதிக உதவிகள் தேவைப்படும் பயணிகள் இலங்கைக்குள் 1979 என்ற இலக்கத்தின் ஊடாகவும், சர்வதேச ரீதியாக +94 11 777 1979 என்ற இலக்கத்தின் ஊடாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உலகளாவிய தொடர்பு மையத்தைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இது தவிர, அருகிலுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

பிரதேச சபையின் வருமான பரிசோதகர் வயலில் பாம்புக் கடிக்கு இலக்கான நிலையில் உயிரிழப்பு

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேச சபையின் வருமான வரி பரிசோதகராக கடமையாற்றிவந்த  நபர் ஒருவர் பாம்புக்கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். துணுக்காய் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 55 வயதுடைய திருநாவுக்கரசு கிருபாகரன்  என்பவரே இவ்வாறு பாம்புக்கடிக்கு இலக்காகி உயிரிழந்தவராவார். நேற்று துணுக்காய் பகுதியில் வயலில் வேலை செ‌ய்துகொண்டிருந்த போதே இவ்வாறு பாம்புக்கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இவர் முன்னாள் துணுக்காய் பிரதேச சபையின் வருமான வ‌ரி பரிசோதகரும் துணுக்காய் முத்துமாரி அம்மன் ஆலய தர்மகத்தாவும் தற்போது மாந்தை கிழக்கு  பிரதேச சபையின் வருமான வரி  பரிசோதகராக கடமையாற்றிவந்துள்ளார். இவரது உடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ள அதேவேளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் மருமகனின் வாள்வெட்டில் மாமியார் பலி

யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் மருமகனின் வாள்வெட்டில் மாமியார் பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதையடுத்து குறித்த சந்தேக நபரை பருத்தித்துறை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இச் சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதவது, வடமராட்சி பருத்தித்துறை, கிராமக்கோடு பகுதியில் மனைவியின் தந்தையாரை வாளால் வெட்டி படுகாயப்படுத்தி விட்டு, மனைவியின்  தாயாரையும் வாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் நபரே மாமனாரை படுகாயப்படுத்திவிட்டு  மாமியாரை படுகொலை செய்துள்ளார். வாள்வெட்டு சம்பவத்தை தொடர்ந்து பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலைமையிலான 5க்கு மேற்பட்ட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க