உலக அரசியல். கட்டுரை பொதுவான செய்திகள் 

அமெரிக்கா-ஈரான்- இஸ்ரேல் போர் 2026: முழு அளவிலான மோதலின் மத்திய கிழக்கு

அமெரிக்கா-ஈரான்-இஸ்ரேல் போர் 2026: முழு அளவிலான மோதலின் விளிம்பில் மத்திய கிழக்கு ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுத்தாக்கம்: ஈழத்து நிலவன் | தமிழ் தேசிய வரலாற்றாளர் & சர்வதேச அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ ◆. ரிஷான் லெட்சியோன் மீது ஏவுகணைத் தாக்குதல்: இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலின் தீவிரம் ரிஷான் லெட்சியோன், இஸ்ரேல் — திங்கட்கிழமை அதிகாலை, ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் இஸ்ரேலின் கடலோர நகரமான ரிஷான் லெட்சியோனில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இடைமறிக்கப்பட்ட ஏவுகணைகளின் சிதறல்கள் குடியிருப்புப் பகுதிகளில் விழுந்ததில் பெண் ஒருவர் காயமடைந்ததுடன், வாகனங்கள் மற்றும் கடைகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மரணத்திற்கு பழிவாங்கும் “ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 4” இன் ஒரு பகுதியாக இதற்கு ஈரான் புரட்சிகர காவல்படை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழில் பெருந் தொகை தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட இருவரை கடற் படையினர் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து பெருந்தொகை தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்கு படகொன்றில் தங்கம் கடத்தி செல்லப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த படகினை கடலில் வழிமறித்து கடற்படையினர் சோதனையிட்ட வேளை படகில் இருந்து 6 கிலோ 85 கிராம் தங்க கட்டிகளை மீட்டுள்ளனர்.அதனை அடுத்து படகில் இருந்து இருவரையும் கடற்படையினர் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட இருவரையும் , மீட்கப்பட்ட தங்கத்தையும் , தங்கத்தை கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட படகினையும் மேலதிக நடவடிக்கைக்காக காங்கேசன்துறை சுங்க அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

சட்ட விரோதமான “குஷ்” போதைப் பொருளை இலங்கை க்கு கடத்தி இந்தியர் கைது

சட்டவிரோதமான “குஷ்” போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தி வந்து, அதனை விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இந்தியர் ஒருவர் இன்று (09) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த போதைப்பொருள் சுமார் ரூ. 2 கோடியே 76 இலட்சத்து 20 ஆயிரம் என மதிப்பீடு செய்யப்பட்டடுள்ளதகைது செய்யப்பட்டவர் 27 வயதுடைய இந்திய வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவர் இன்று (09) அதிகாலை 12.10 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து ‘எயார் ஏசியா’ (AirAsia) நிறுவனத்திற்கு சொந்தமான AK-047 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.சந்தேகநபர் கொண்டு வந்த 2 பயணப் பொதிகளைச் சோதனையிட்ட போது, அதில் 6 பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 762 கிராம் எடையுடைய “குஷ்” போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

பெண்ணிடம் சங்கிலி அறுத்துச்சென்ற இளைஞர் காவல்துறையில் ஓப்படைப்பு;

கோடெல்லா பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய பெண், தனது வீட்டிலிருந்து தம்பரவில கூட்டுறவு சங்கத்திற்கு ஸ்கூட்டரில் சென்றுவிட்டு வீடு திரும்பும் போது  மோட்டார்சைக்கிளில் வந்த இளைஞர் அவரது தங்க சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளார். பெண்ணின்  அலறல் சத்தம் கேட்டு, அருகிலுள்ள வீட்டைச் சேர்ந்த ஒரு இளைஞர் சந்தேக நபரைப் பின்தொடர்ந்து ஓடி வந்து, அவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை பகுதியில் நிரந்தரமாக வசிக்கும் 29 வயதுடையவர். வென்னப்புவ காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட திருடப்பட்ட நெக்லஸின் மதிப்பு சுமார் ரூ.2.5 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டது. “இருப்பினும், இதுபோன்ற சூழ்நிலையில் சமூகப் பொறுப்புள்ள குடிமகனாக, சந்தேக நபரைப் பிடித்த இளைஞரின் உடனடி நடவடிக்கைக்காகவும், ஒரு குற்றத்தைத் தடுத்து, சந்தேக நபர் தப்பிக்க விடாமல் செய்ததற்காகவும் நாங்கள்…

மேலும் படிக்க
அண்மை செய்தி சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

ஈரானின் தற் போதைய போக்கு ஈழத்தமிழர் மீதான இனப்படு கொலை யினை மீளவும் நினைவு படுத்துகிறது: சிறீதரன்

ஈரானின் தற்போதைய போக்கு ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலையினை மீளவும் நினைவுபடுத்துகிறது: சிறீதரன் எம்.பி தெரிவிப்பு……! ​”சர்வதேச போர் விதிகளை மீறி ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நிகழ்த்திய அதே கொடூரமான கொத்துக்குண்டுத் தாக்குதல்களை, இன்று ஈரான் இஸ்ரேல் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது” எனப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கவலை வெளியிட்டுள்ளார். ​”சுதந்திரப்பறவைகள்” மகளிர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற பன்னாட்டு மகளிர் தின நிகழ்வில், முதன்மை அழைப்பாளராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ​அவர் மேலும் தெரிவிக்கையில்: ​”ஈழப் போராட்ட வரலாற்றில் பெண்கள் வெறும் சாட்சிகளாக மட்டுமல்ல, களத்தில் நின்ற போராளிகளாகவும், குடும்பத்தைத் தாங்கும் தூண்களாகவும் விளங்கியவர்கள். உலகமே வியந்து பார்த்த ஒரு போரியல் வாழ்வை வாழ்ந்தவர்கள் ஈழத்தமிழ்ப் பெண்கள். இன்றும் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்காக எட்டு ஆண்டுகள் கடந்தும் தாய்மார்கள் வீதியில் நின்று…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கை மின்சார சபைக்கு பதிலாக ஆறு அரச நிறுவனங் கள் உருவாக்கம்

இலங்கையின் மின்சக்தித் துறையில் 56 ஆண்டு காலப் பழமையான இலங்கை மின்சார சபை (CEB) நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஆறு அரச நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 1969ஆம் ஆண்டு 17ஆம் இலக்க சட்டத்தின் கீழ் இயங்கி வந்த மின்சார சபை, இனி மின் உற்பத்தி, மின் விநியோகம், கடத்துகை மற்றும் கட்டமைப்பு இயக்கம் என ஆறு தனித்தனி நிறுவனங்களாகச் செயற்படும். 2024ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் எஞ்சிய விதிகள் இதன் மூலம் இன்று (9) முதல் நடைமுறைக்கு வருகின்றன.விருப்ப ஓய்வு திட்டத்தைத் (VRS) தெரிவு செய்யாத ஊழியர்கள் அனைவரும் இந்தப் புதிய ஆறு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நாளை (10) முதல் வழங்கப்படும் என மின்சார சபையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.இந்த மறுசீரமைப்பு…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் வன்முறை கும்பலால் வீடு, தீக்கிரை.

வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் நேற்று இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில், வீடொன்றின் மீது பெற்ரோல் ஊற்றித் தீவைக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவியது. பூந்தோட்டம் பாடசாலைக்கு அருகிலுள்ள வீட்டில் வசித்து வருபவர்களுக்கும், வெளியில் இருந்து வந்த வன்முறைக் கும்பல் ஒன்றுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு பாரிய மோதலாக மாறியுள்ளது. வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் வந்த அந்தக் கும்பல், இளைஞர்களைத் தாக்கும் நோக்குடன் வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளது. இதையடுத்து, அந்த இளைஞர்கள் வீட்டிற்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டனர். ஆத்திரமடைந்த வன்முறைக் கும்பல், வீட்டின் ஜன்னல்களை உடைத்துச் சேதப்படுத்தியதுடன், கதவின் வழியாகப் பெற்ரோல் ஊற்றித் தீயிட்டுள்ளனர். வீட்டிற்குள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் இருந்த நிலையில், அவர்கள் கதறி அழுது தங்களைக் காப்பாற்றும்படி கெஞ்சியுள்ளனர். இருப்பினும், வன்முறையாளர்கள் அதைப் பொருட்படுத்தாமல் தீவைத்துக் கொழுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். வீட்டிற்குள் தீ பரவத் தொடங்கிய…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஈரானின் போர்க் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 104 பேர் உயிரிழப்பு

ஈரானின் போர்க்கப்பலான IRIS Dena கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 104 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது. அமெரிக்கா நடத்திய தாக்குதல் காரணமாக, இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் இந்த கப்பல் விபத்துக்குள்ளானது. கடந்த மார்ச் 4-ஆம் திகதி காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் இந்த கப்பல்  தாக்குதலுக்குள்ளானது. கப்பலில் இருந்த 35 பேரை இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினர் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 10 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரான் கடற்படையினரின் உடல்கள் மீதான பிரேத பரிசோதனைகள் அண்மையில் காலி தேசிய வைத்தியசாலையில் நடத்தப்பட்டன. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஈரான் கடற்படையினரில் 8 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க
அண்மை செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

திருச்சியில் திமுக மாநாடு! 10 லட்சம் பேர் பங்கேற்பு!

திருச்சி: திருச்சி சிறுகனூரில், ‘ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்’ எனும் பெயரில் திமுக மாநாடு இன்று (மார்ச் 9) நடைபெறுகிறது. 10 லட்சம் பேர் பங்கேற்கும் இந்த மாநாட்டில், முதல்வர் மு.க. ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிடவிருக்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் நடக்கும் இம்மாநாடு, திமுகவுக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாடு பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கும். திரைப்பட இசையமைப்பாளர் தேவா மற்றும் இசைக் கலைஞர் அப்துல் குத்தூஸின் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். மாலை 5.30 மணிக்கு மாநாட்டு திடலுக்கு வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரம்மாண்ட கொடிக் கம்பத்தில் கட்சிக்கொடியை ஏற்றி, தொண்டர்களின் வரவேற்பைப் பெற்றுக் கொண்டு மேடைக்குச் செல்வார். மாநாட்டிற்காக 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 3 லட்சம் பேர் அமரவும், 7 லட்சம் பேர்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

இராணுவத்தி னரிடம் கையளித்த உறவுகள் எங்கே? முல்லையில் மாபெரும் கவனயீர் ப்புப் போராட்டம்!

சர்வதேச மகளிர் தினம் எமக்குத் துக்க தினம்; இராணுவத்தினரிடம் கையளித்த உறவுகள் எங்கே? முல்லையில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்! இராணுவத்திடம் கையளித்த தமது உறவுகள் எங்கே? இவர்களுக்கு என்ன நடந்தது இந்த விவகாரத்துக்கு சர்வதேச நீதி விசாரணையே வேண்டும் எனக் கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் இறுதி யுத்தத்தின் சாட்சியாக காணப்படும் வட்டுவாகல் பாலத்தில் நேற்று (8) மாபெரும் கவனயீர்ப்பு.போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டமானது ஒன்பது ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் சர்வதேச மகளிர் தினமான நேற்று மகளிர் தினம் எமக்கு துக்க தினம் என தெரிவித்து தமக்கு சர்வதேச விசாரணையே தீர்வு எனக் கோரி போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது உறவுகளை இராணுவத்திடம் ஒப்படைத்ததுடன், தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என இதுவரை இலங்கை அரசாங்கத்தால் எந்த தகவலும் வெளியிடவில்லை எனவும் இனப்படுகொலையாளிகளை…

மேலும் படிக்க