சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

இலங்கையின் சுதந்திர தின நாளில் வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம் :

எதிர்வரும் 04ம் திகதி இலங்கையின் சுதந்திர தினமாகவும் தமிழருக்கு கறுப்பு தினமாகவும் பிரகடனப்படுத்தப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் த.யதுசன் இதனைக் குறிப்பிட்டார்.தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், குறிப்பாக இப்போராட்டமானது வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ளது. அந்தவகையில் வடக்கு மாகாணத்திலே கிளிநொச்சி மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களை மையப்படுத்தி குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்படவுள்ளது. மேலும் இப் போராட்டத்தினை வலுவடையச் செய்வதற்காக பல்வேறுபட்ட அமைப்புக்களுடன் சந்திப்புக்களையும், உரையாடல்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம். அந்தவகையில் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் தற்போது வவுனியாவிலும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இப்போராட்டமானது சிறப்பாக நடைபெறுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” என தெரிவித்தார்.…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

ஈரான் வரைந்துள்ள சிவப்புக் கோடு.ஈழத்து நிலவன்

ஈரான் வரைந்துள்ள சிவப்புக் கோடு ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ ✦. மேற்கு ஆசியாவில் தற்காப்பு நிலையிலிருந்து உடனடித் தாக்குதல் நிலைக்கு மாற்றம் மத்திய கிழக்கு பகுதி முன்னெப்போதையும் விட மிக அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளது. ஈரான் தனது போர் விதிமுறைகளில் (Rules of Engagement) அடிப்படையான மாற்றத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்கா அல்லது இஸ்ரேல் மேற்கொள்ளும் எந்தவொரு தாக்குதலும்—அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும்—உடனடிப் பதிலடித் தாக்குதலை உருவாக்கும் என தெஹ்ரான் கடுமையாக எச்சரித்துள்ளது. அடையாளத் தாக்குதல்கள், தாமதமான பதிலடிகள், சர்வதேச இராஜதந்திரக் கணக்கீடுகள் ஆகியவற்றின் காலம் முடிவடைந்துவிட்டதாக ஈரான் இராணுவத் தலைமை வலியுறுத்துகிறது. இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் முகமது அக்ரமினியா இதனைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்: “இது இரண்டு மணிநேரப் போர் அல்ல.” இனிமேல், சிறிய ஆக்கிரமிப்பைக்கூட ஒரு பிராந்தியப் போரின் தொடக்கமாகவே தெஹ்ரான் கருதும். ✦. ஈரானின்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

ரூ. 2 கோடி பெறுமதியான போதைப் பொருட்களுடன் மாமா மற்றும் மருமகன் கைது

ரூ.2 கோடி 30 இலட்சம் பெறுமதியான போதைப் பொருட்களை சூட்சுமமாக வீடுகளில் பதுக்கி வைத்திருந்த இரு சந்தேகநபர்களை சம்மாந்துறை  காவல்துறை.கைது செய்தனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை காவல்துறை.பிரிவிற்குட்பட்ட பகுதியின் ஊடாக கொழும்பில் இருந்து கல்முனை வழியாக சம்மாந்துறை பகுதிக்கு சென்ற அதி சொகுசு பஸ் ஒன்றில் நேற்று (29) அதிகாலை 4.30 மணியளவில் கைதான 49 வயது மதிக்கத்தக்க சந்தேகநபரது வாக்குமூலம் மற்றும் சம்மாந்துறை  காவல்துறை.நிலைய பதில் பொறுப்பதிகாரி கே.என்.ஆர் பெரேராவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய சம்மாந்துறை புற நகர் பகுதிகளில் உள்ள இரு வீடுகளில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனை நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப்  காவல்துறை.அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனையின் பிரகாரம் ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பல்வேறு குற்றச் செயல்கள் பிரிவின் பதில் பொறுப்பதிகாரியுமான என். றிபாய்டீன் தலைமையிலான காவல்துறை.…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்க கோரி போராட்டம். அருட்தந்தை மா.சக்திவேல்,

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்க கோரி போராட்டம். பயங்கர வாத தடைச்சட்டத்தை நீக்குவதாக கூறி, ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கம், தற்போது சிங்கம் போன்ற கொடிய முகத்துடன், புதிய பயங்கரவாத தடைச்சட்டத்திற்காக வரைபை வெளியிட்டுள்ளது. இவ்வாறு உருவாக்கப்பட்ட புதிய பயங்கரவாத தடுப்புச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(30.01.2026) கொழும்பு – நீதி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில், சிவில் செயற்பட்டாளர்கள், சிவில் அமைப்புக்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், அருட்தந்தை மா.சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இதன்போது கருத்து தெரிவித்த அருட்தந்தை மா.சக்திவேல், “ ஜெ. ஆர். ஜெயவர்த்தனவிற்கு இல்லாத கொடிய முகம் ஒன்று அநுரவிற்கு இருக்கிறது. இந்த சிங்கம் தெற்கில் உள்ள தமிழ் மக்களை வேட்டையாட காத்திருக்கிறது. இந்த புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தினால் தமிழர்கள் சூரையாடப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது” என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க