செய்திகள் தாயகச் செய்தி 

முரசுமோட்டைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழப்பு

கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் உயிரிழப்பு.! பரந்தனிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த தனியார் பஸ் மற்றும் விசுவமடுவிலிருந்து பரந்தன் நோக்கி பயணித்த கார் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. உயிரிழந்தோர் கிளிநொச்சி – விசுவமடு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

முந்தலம் – நவதன்குளம் பகுதியில் இன்று (12) காலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

முந்தலம் – நவதன்குளம் பகுதியில் இன்று (12) காலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கார் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேர் சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
ஈழ அரசியல் ஆய்வு கட்டுரை சிறப்புச் செய்தி 

தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட சிங்கள–பௌத்தமயமாக்கல் : ஒரு கட்டமைப்பு அரசியல் எழுதியவர் ஈழத்து நிலவன்

தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட சிங்கள–பௌத்தமயமாக்கல் : ஒரு கட்டமைப்பு அரசியல் ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் கலாசார அழிப்பு– ஒரு ஆழமான கட்டமைப்பு ஆய்வு (2026 நிலவரம்) அறிமுகம் : போருக்குப் பிந்தைய “புனரமைப்பு”யிலிருந்து கட்டமைப்பு சார்ந்த இன அழிப்புவரை 2009 ஆம் ஆண்டு ஆயுதப் போர் உத்தியோகபூர்வமாக முடிவடைந்ததிலிருந்து, தமிழர்களின் தாயகமாக வரலாற்று ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உண்மையான போருக்குப் பிந்தைய மீட்சி நிலைக்குள் நுழையவில்லை. மாறாக, அவை கணக்கிட்டு வடிவமைக்கப்பட்ட, நிறுவனமயமாக்கப்பட்ட ‘கட்டமைப்பு சார்ந்த இன அழிப்பு’ (Structural Genocide) என்ற நீண்டகால அரசியல் செயல்முறைக்குள் தள்ளப்பட்டுள்ளன. இந்த அழிப்பு முறை வெகுஜனக் கொலைகளைக் கொண்டதாக அல்ல. மாறாக, அது கீழ்க்காணும் வழிகளின் மூலம் மெதுவாகவும், ஆனால் உறுதியாகவும் செயல்படுகிறது: * தமிழர்களின் நில உரிமைகளை நிரந்தரமாகப்…

மேலும் படிக்க
செய்திகள் தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

சென்னை: இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் அங்குள்ள தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதிக்கும்; ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய அரசு உடனடியாகத் தூதரக ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை களைந்திட வேண்டுமென்றும், தமிழ் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையிலான ஒரு அரசியலமைப்புச் செயல்முறையினைக் கொண்டுவருவதற்கு, இந்திய அரசு இலங்கை அதிகாரிகளுடன் உயர்மட்ட அளவில் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென்று கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கையில் உள்ள…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

கடலரிப்புகளின் ஆபத்திலிருந்து அம்பாறை கரையோரங்களை பாதுகாக்க அரசுக்கு மகஜர்

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் நிலவும் தீவிர கடலரிப்பு தொடர்பான பாதிப்புகளைத் தடுப்பதற்கும், அவற்றுக்கு நிரந்தரத் தீர்வைப் பெறுவதற்கும் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அரசாங்கத்திடம் கூட்டு மகஜர் ஒன்றை சமர்ப்பிப்பதற்கான கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. அண்மைக்காலமாக நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக, அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் கூடிய பாரிய கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.  மருதமுனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, ஒலுவில் மற்றும் பொத்துவில்.ஆக்கிய பகுதிகள் கடுமையாகச் சேதம் அடைந்துள்ளன மாளிகைக்காடு மையவாடிப் பகுதியில் கடலரிப்பு தீவிரமடைந்ததில், அங்குள்ள ஜனாஸாக்களின் (உடல்கள்) எச்சங்கள் வெளியே தெரியும் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடலரிப்பு நிலவரம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளைத் தொடர்ந்து, ஜனாதிபதி அனுர…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக தமிழரசுக் கட்சி ஆதரவு அளிக்காதென பா. உ சிறீதரன் தெரிவித்துள்ளார்

கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரத் தீர்மானித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரவு அளிக்காதென பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வரும் பட்சத்தில், அதற்கு எதிராக வாக்களிப்பதா அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருப்பதா என்பது குறித்து, தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு கூடி இறுதித் தீர்மானம் எடுக்கும் என்றும் அவர் கூறினார். கல்வித் துறை தொடர்பான சில நிர்வாக மற்றும் கொள்கை ரீதியான விடயங்களை முன்னிறுத்தியே,பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. தற்போதைய அரசியல் சூழலில் இந்தப் பிரேரணை ஒரு கொள்கைச் சண்டைக்கு அப்பால், அரசியல் அழுத்தத்தை உருவாக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார். இதேவேளை,கல்வி அமைச்சரான…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

பிரதமருக்கு எதிரான அவதூறு பிரசாரங் களை ஏற்றுக் கொள்ள போவதில்லை. கஜேந்திரகுமார்

பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அவதூறு பிரசாரத்தை, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடுமையாக சாடியுள்ளார். பிரதமர் மற்றும் அவரது கட்சியின் முன்னணி உறுப்பினர் என்ற வகையில் மட்டுமல்லாமல், கல்வி அமைச்சர் என்ற முறையிலும் ஹரிணி அமரசூரியவுடன் தமக்கும் தமது கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் சில கொள்கை வேறுபாடுகள் இருப்பதாக சுட் டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர்,இருப்பினும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக தற்போது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பிரசாரங்களை தாம், ஏற்றுக்கொள்ளபோவதில்லை தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் தமது சமூக வலைத்தளத்தில் இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது: ‘பிரதமருக்கெதிராக நடத்தப்படும் அவதூறு பிரசாரங்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.இது கண்டிக்கத்தக்கது.இத்தகைய அவதூறு பிரச்சாரங்களுடன் நாம், நிச்சயமாக இணைந்து கொள்ளவில்லை. அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தத்தின் கீழ் கல்வி அமைச்சினால் தயாரிக்கப்பட்ட ஆங்கில…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

மாணவி வித்தியா கொடூர கொலை; 10 வருடங்கள் நிறைவு

புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்தன. இந்த மாணவிக்கு நிகழ்ந்த கொடூரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொதுவாக பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று (13) வேலணை சந்தியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டது. இப் போராட்டத்தினை சமூக மட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து முன்னெடுத்தன. இதில் சமூக மட்ட அமைப்பினர், கல்விமான்கள், கட்சி சார்ந்தவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பறையொலி எழுப்பி, “பாலியல் வன்புணர்வுக்கு எதிராக ஒன்றிணைவோம், பாலியல் வன்புணர்வுக்கு எதிரான நீதிக்கு சட்டவாக்கத் துறையே கவனம் செலுத்து, பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மௌனத்தை கலைப்போம், பாலியல் வன்கொடுமைக்கு நீதி வேண்டும், பெண்களை இழிவுபடுத்தாத ஊடகங்கள் வேண்டும், ஊடகங்களே பாலியல் வன்கொடுமைகளை பாதுகாக்காதே, பாலியல் சுரண்டல்களின் கதவுகளை மூடுவோம், உரிமையின் எல்லைகளை…

மேலும் படிக்க