பிரதமருக்கு எதிரான அவதூறு பிரசாரங் களை ஏற்றுக் கொள்ள போவதில்லை. கஜேந்திரகுமார்
பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அவதூறு பிரசாரத்தை, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடுமையாக சாடியுள்ளார்.
பிரதமர் மற்றும் அவரது கட்சியின் முன்னணி உறுப்பினர் என்ற வகையில் மட்டுமல்லாமல், கல்வி அமைச்சர் என்ற முறையிலும் ஹரிணி அமரசூரியவுடன் தமக்கும் தமது கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் சில கொள்கை வேறுபாடுகள் இருப்பதாக சுட் டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர்,இருப்பினும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக தற்போது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பிரசாரங்களை தாம், ஏற்றுக்கொள்ளபோவதில்லை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் தமது சமூக வலைத்தளத்தில் இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது: ‘பிரதமருக்கெதிராக நடத்தப்படும் அவதூறு பிரசாரங்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.இது கண்டிக்கத்தக்கது.இத்தகைய அவதூறு பிரச்சாரங்களுடன் நாம், நிச்சயமாக இணைந்து கொள்ளவில்லை.
அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தத்தின் கீழ் கல்வி அமைச்சினால் தயாரிக்கப்பட்ட ஆங்கில தரம் 06 தொகுதியில்,பொருத்தமற்ற வலைத்தளம் இடம்பெற்றதையடுத்து பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய மீது,அவதூறு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

