சட்டவிரோத கடற்றொழில்களை கட்டுப்படுத்த தவறினால் மீனவர்கள் போராட்டத்திற்கு அணி திரள்வர்; ரவிகரன்
சட்டவிரோத கடற்றொழில்களை கட்டுப்படுத்த தவறினால் வடக்கு மீனவர்கள் போராட்டத்திற்கு அணி திரள்வர்; கடற்றொழில் அமைச்சருக்கு தெரிவித்தார்- ரவிகரன் எம்.பி வடபகுதி கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் நாளுக்குநாள் அதிகரித்து செல்வதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனவரியிலிருந்து சட்டவிரோத கடற்றொழில்கள் கட்டுப்படுத்தப்படுமென கடற்றொழில் அமைச்சர் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிக்கமைய, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமென வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர், தவறினால் வடபகுதி மீனவர்கள் போராட்டத்திற்கு அணி திரள்வார்கள் எனவும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் 05.01.2026இன்று இடம்பெற்ற கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்திலேயேயே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த கூட்டத்தில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதுதொடர்பாக பேசப்பட்ட விடயங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், வடக்கு கடற்பரப்பில்…
மேலும் படிக்க